பயன்படுத்திய வாகனங்களை வாங்கும் போது இன்சூரன்ஸ் பாலிசியில் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்?

பயன்படுத்திய கார்களை வாங்கும் பெரும்பாலானோர் அதன் வாகன பதிவு சான்றிதழில் பெயர் மாற்றிவிடுகின்றனர். ஆனால் மோட்டார் வாகன பாலிசியை மாற்றுவது இல்லை. இது அந்த வாகனம் விபத்தில் சிக்கும் போது காப்பீட்டு தொகைய கோருவதில் பெரும் சிக்கல் ஏற்படுத்துகிறது.

பயன்படுத்திய வாகனங்களை வாங்கும் போது மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்?

பொதுவாக இது வாகனத்திற்காக பாலிசி என்றாலும், விபத்து ஏற்பட்டு அதற்கான காப்பீட்டு தொகையை கோரும் போது, வாகனத்தில் தற்போதைய உரிமையாளர்களுக்கான பெயரில் சிக்கல் ஆரம்பமாகிறது. பொதுவாக வாகனத்தின் தற்போதைய உரிமையாளரும், காப்பீட்டு தாரரும் ஒருவராக இருந்தால் மட்டுமே காப்பீட்டு தொகையை கோரமுடியும்.

பயன்படுத்திய வாகனங்களை வாங்கும் போது மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்?

பாலிசிகள் பொதுவாக இரண்டுவகையாக இருக்கின்றன. சொந்த வாகனத்திற்கான பாலிசி, மூன்றாம் நபருக்கான பாலிசி, இவ்விரு வகையிலும் வாகன உரிமையாளரின் பெயரும், பாலிசி தாரரின் பெயரும் வேறு வேறாக இருக்கும் பட்சத்தில் காப்பீட்டு தொகையை கோரமுடியாது. அந்த வாகனம் காப்பீடு இல்லாத வாகனமாகவே கருதப்படும்.

பயன்படுத்திய வாகனங்களை வாங்கும் போது மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்?

பெரும்பாலான நிறுவனங்கள் பாலிசியில் பெயர் மாற்றும் வசதியை வழங்குகிறனர். இதைபயன்படுத்தி பாலிசிதாரரின் பெயரை மாற்றி கொள்ளலாம். பாலிசி பெயர் மாற்றும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து கீழே காணலாம்.

பயன்படுத்திய வாகனங்களை வாங்கும் போது மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்?

தேவையான ஆணவங்கள்

  • பழைய பாலிசி சான்றிதழ்
  • புதிய விண்ணப்ப படிவம்
  • அசல் வாகன பதிவு சான்றிதழ்
  • பழைய உரிமையாளரின் என்.ஓ.சி., கடிதம்
  • பயன்படுத்திய வாகனங்களை வாங்கும் போது மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்?
    • விண்ணப்பம் 29,30 ல் பழைய உரிமையாளர் கையெழுத்து
    • வாகன ஆய்வு சான்றிதழ் (காப்பீட்டு நிறுவனங்களே வழங்கிவிடும்)
    • என்.சி.பி., சான்றிதழ் (இருக்கும் பட்சத்தில்)
    • பயன்படுத்திய வாகனங்களை வாங்கும் போது மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்?

      கவனிக்க வேண்டிய விஷயங்கள்

      • பாலிசி பெயர் மாற்றத்திற்கு முன்னதாக வாகன பதிவு சான்றிதழ் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
      • வாகன பதிவு சான்றிதழில் பெயர் மாற்றிய 14 நாட்களுக்கும் பாலிசி பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
      • தாங்கள் பெறப்போகும் பிரீமியத்திற்கு என்.சி.பி. வழங்கப்படும் எனில் அதற்கான ஆவணங்களை விண்ணப்பிக்கும் போதே சமர்பிக்க வேண்டும்
      • பயன்படுத்திய வாகனங்களை வாங்கும் போது மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்?
        • விண்ணப்பித்த நாளில் இருந்து அதிகபட்சம் 14 நாட்களில் பாலிசி பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இடைப்பட்ட நாட்களில் வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு தொகையை கோர முடியாது.
        • பாலிசியின் பெயரை மாற்றினாலே அதில் வரம்பிற்குள்ளாகும் மூன்றாம் நபர் காப்பீட்டு பகுதியிலும் பெயர் மாற்றப்படும் தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை
        • பல காப்பீட்டு நிறுவனங்கள் பல பாலிசி முறைகளை கையாள்வதால் உங்களுக்கு தகுந்த பாலிசியை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்வது சிறந்தது.
        • பயன்படுத்திய வாகனங்களை வாங்கும் போது மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்?

          என்.சி.பி., பற்றி உங்களுக்கு தெரியுமா?

          நோ க்ளைம் போனஸ் என்பதை தான் சுருக்கி என்.சி.பி. என்கிறார்கள். அதாவது பாலிசி தாரர் பாலிசி எடுத்து விட்டு காப்பீட்டு தொகையை கோராமல் இருப்பவர்களுக்கு அடுத்த காப்பீட்டு தொகையில் சலுகைகள் வழங்கப்படும். சலுகைக்கான சதவீதம் எவ்வளவு காலம் காப்பீட்டு தொகையை கோராமல் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும்.

          பயன்படுத்திய வாகனங்களை வாங்கும் போது மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்?

          பொதுவாக ஒரு வருடம் காப்பீட்டு தொகை கோராதவருக்கு 20 சதவீதம் வரையிலும், 5 ஆண்டுகள் காப்பீட்டு தொகை கோராதவருக்கு 50 சதவீதம் வரையிலும் அடுத்த காப்பீட்டில் சலுகை அளிக்கப்படுகிறது.

          பயன்படுத்திய வாகனங்களை வாங்கும் போது மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்?

          உங்களிடம் என்.சி.பி.,க்கான சான்றிதழ் இருந்தால் நீங்கள் புது வாகனம் வாங்கும் போதோ, பயன்படுத்திய வாகனத்திற்கு பாலிசி பெயரை மாற்றும் போதும் சலுகையை பெற முடியும்.

          பயன்படுத்திய வாகனங்களை வாங்கும் போது மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்?

          பயன்படுத்திய வாகனங்களை வாங்கும்போதும் சரி விற்கும் போதும் சரி பாலிசியில் பெயர் மாற்றம் செய்வது மிகவும் முக்கியம், காருக்கு விபத்து ஏற்படும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பொருளாளாதர சிக்கலில் இருந்து இது நம்மை பெரிதும் காப்பாற்றும். இனி பயன்படுத்திய வானகங்களை வாங்கும் போது வாகன பதிவு சான்றிதழில் பெயர் மாற்றிய உடன் பாலிசியிலும் பெயர் மாற்ற மறவாதீர்கள்.

          டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
How to transfer motor insurance of used vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X