காருக்குள் சாவியை மறந்து லாக் செய்துவிட்டீர்களா? ஈஸியா சாவியை எடுக்க செம டிப்ஸ்

கார்களில் சிலர் சாவியை மறந்து காருக்குள் வைத்து காரை பூட்டி விட்டால் கார் லாக் ஆகிவிடும் அதன் பின் அந்த சாவியை எப்படி எடுப்பது என்பது பலருக்கும் தெரியாத குழப்பம். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம் வாருங்கள்.

கார் பயன்படுத்தும் பலரும் இந்த பிரச்சனையை சந்தித்திருப்பார்கள். அவசர வேலை காரணமாக மறந்து காருக்குள் சாவியை வைத்து விட்டுகாரை பூட்டி விட்டு சென்று விடுவோம். இன்று கார்களில் இருக்கும் தொழிற்நுட்பம் சிறிது நேரம் காரின் டோர் லாக் ஆகவில்லை என்றால் காரின் டோர் தானாக லாக்ஆகி விடும். இப்படி லாக் ஆகிவிட்டால் அந்த சாவியை வெளியே எடுக்க முடியாது. இப்படியான சூழ்நிலை வந்துவிட்டால் மிகவும் பிரச்சனை தான். இந்த சூழ்நிலைகளில் எல்லாரும் யோசிக்கும் விஷயம் இரண்டு தான்.

காருக்குள் சாவியை மறந்து லாக் செய்துவிட்டீர்களா? ஈஸியா சாவியை எடுக்க செம டிப்ஸ்

வீட்டில் கார் நிற்கும் போது இப்படியான சம்பவம் நடந்துவிட்டால் உடனடியாக ஸ்பேர் சாவியை பயன்படுத்தி காரை திறப்போம், அல்லது வெளியில் இருக்கும்போது இப்படியான சம்பவம் நடந்துவிட்டால் காரின் கண்ணாடி அல்லது லாக்கை உடைப்போம், அதிர்ஷ்டவசமாக அருகில் டுப்ளிகேட் சாவி செய்யும் நபர் இருந்தால் அவரை வைத்து டுப்ளிகேட் சாவியை செய்து காரை திறப்போம். இது தான் சாதாரணமாக எல்லோரும் யோசிப்பது, ஆனால் இதை தவிரவும் சில வழிகள் இருக்கிறது. அதை பற்றி இப்பொழுது காணலாம்

ஏர்பேக்

மார்கெட்டில் ஏர் பேக் என்ற ஒரு தயாரிப்பு இருக்கிறது. இது ஒரு பைக்குள் டியூப் மாற்றப்பட்டு இருக்கும். இதில் நாம் அந்த டியூப் மூலம் காற்றி நிரப்பி விரிவாக்கலாம்.அந்த பேக் சுறுங்கியிருக்கும் போது கதவிற்கு நடுவே வைத்துக்கொண்டு பின்னர் காற்றை அடைத்தால் அப்பொழுது கதவுக்கும் காருக்கும் இடையே சிறிய இடைவெளி கிடைக்கும். அதன் மூலம் நாம் காரை அன்லாக் செய்ய முடியும். ஆனால் இதற்காக எப்பொழுதும் அந்த ஏர்பேக்கை பாக்கெட்டில் வைத்துக்கொண்டேவா சுற்ற முடியும் என கேட்காதீர்கள்.அது சாத்தியமில்லை தான், இருந்தாலும் இப்படி ஒரு வழியிருக்கிறது என்பதை உங்களுக்கு சொல்கிறோம்.

பிளாஸ்டிக் ஸ்டிரிப்

ஒரு பிளாக்டிக் ஸ்டிரிப்பை எடுத்துக்கொண்டு அதை நடுவிலிருந்த பாதியாக முடித்துக்கொள்ளுங்கள் அதை லேசாக காரின் கதவின் சிறிய இடைவெளி அல்லது ஜன்னல் வழியாக உள்ள விட்டு லாக் நாப்பில் மாட்ட முயற்சி செய்யுங்கள் லாக் நாப்பில் மாட்டியதும் அதன் மூலம் அந்த லாக்கை ரிலீஸ் செய்துவிடுங்கள் அதன் பின் கதவை சுலபமாக திறக்க முடியும். ஆனால் இதை பொறுமையாகவும் கவனமாகவும் செய்ய வேண்டும். அதிக நேரம் எடுக்கும் பணி இது. ஆனால் எளிய முறைய பிளாஸ்டிக் ஸ்டிராப் உங்களிடம் இல்லாவிட்டாலும் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும்.கிடைக்காவிட்டாலும் அதே போன்ற ஒரு பொருளை இதே முறையில் பயன்படுத்தி திறக்க முயற்சிக்கலாம்.

ஹேங்கர்

வீடுகளில் நாம் கோட் ஹேங்கர் பயன்படுத்துவோம். இது நீளமான கம்பியில் ஒர முனையில் மட்டும் கொக்கி இருக்கும். அந்த கம்பி மிகவும் சிறியதாக இருப்பதால் அதை காரின் கதவு இடுக்கில் சொருகி காரை அன்லாக் செய்ய முடியும். கதவு இடுக்கில் இடைவெளியை ஏற்படுத்த கதவிடுக்கில் இருக்கும் ரப்பரை கிழிக்க வேண்டியது இருக்கும்.

ஷூ லேஸ்

இந்த விஷயத்தை நீங்கள் பல வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள், உங்கள் ஷூலேஸை கழட்டி அதை ஒரு நாட் போட்டு காரின் கதவிடுக்கில் வழியாக உள்ள விட்டு லாக்கை ஓப்பன் செய்ய முயற்சி செய்யலாம். இது தான் காருக்குள் சாவியை வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டால் சாவியை எடுப்பதற்கான எளிமையான வழிகள். இது எல்லாம் சிக்கலில் மாட்டிவர்கள் எளிமையான தப்பிப்பதற்கான வழிகள் தான் மற்றபடி சமூகவிரோத செயல்களுக்கு இதை பயன்படுத்துவதற்காக அல்ல.

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
How to unlock car door when struck inside
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X