காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

கார் ஹேண்ட் பிரேக் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

காரில் ஹேண்ட் பிரேக் (Handbrake) எதற்கு பயன்படுகிறது? என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம். செங்குத்தான இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும்போது, கார் சரிவில் கீழே சென்று விடாமல் இருப்பதற்காக ஹேண்ட் பிரேக் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கார் டிரைவிங்கிற்கு நீங்கள் முற்றிலும் புதியவர் என்றால், ஹேண்ட் பிரேக் பற்றி தெளிவாக எதையும் அறிந்து வைத்திருக்க மாட்டீர்கள்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

குறிப்பாக எங்கு ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்த வேண்டும்? என்பது தெரியாது. எனவே ஹேண்ட் பிரேக் பற்றிய அடிப்படை தகவல்கள் அனைத்தையும் இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். ஹேண்ட் பிரேக்கை எப்படி பயன்படுத்த வேண்டும்? எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்? ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் காரை ஓட்டினால் என்ன ஆகும்? என்ற கேள்விகளுக்கு எல்லாம் இந்த செய்தி விடையளிக்கும்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

பொதுவாக கார்களில் இரண்டு முக்கியமான பிரேக்குகள் இருக்கும். பெடல்களை பயன்படுத்தி உங்கள் கால்கள் மூலம் இயக்குவது இதில் ஒன்று. மற்றொன்று கைகளால் இயக்குவது. இதன் காரணமாகதான் இது ஹேண்ட் பிரேக் என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான கார்களில் டிரைவர் இருக்கைக்கு அடுத்தபடியாக ஹேண்ட் பிரேக்கிற்கான லிவர் இருக்கும்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த லிவரை இழுப்பதன் மூலம் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தலாம். நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, காரின் வேகத்தை குறைப்பதற்கோ அல்லது நிறுத்துவதற்கோ கால்கள் மூலம் பிரேக் பெடல்களை பயன்படுத்துவீர்கள். ஆனால் ஹேண்ட் பிரேக் என்பது, காரை நிறுத்திய பிறகு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

பெரும்பாலான கார்களில் லிவரை இழுப்பதன் மூலம் பயன்படுத்தும் வகையில்தான் ஹேண்ட் பிரேக் இருக்கும். ஆனால் ஒரு சில புதிய கார்களில் சிறிய பட்டனை அழுத்துவதன் மூலமாகவும் ஹேண்ட் பிரேக்கை ஆக்டிவேட் செய்யலாம். இந்த பட்டன் பெரும்பாலும் கியர் ஸ்டிக்கிற்கு அருகில் இருக்கும். ஒரு சில அட்வான்ஸ்டு கார்களில் ஆட்டோமேட்டிக் ஹேண்ட் பிரேக் (Automatic Handbrake) கூட வழங்கப்படுகிறது.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

நீங்கள் காரை நிறுத்திய உடனே ஆட்டோமேட்டிக்காக ஹேண்ட் பிரேக் அப்ளை செய்யப்பட்டு விடும். நீங்கள் மறுபடியும் ஆக்ஸலரேட்டர் பெடலை அழுத்திய பிறகுதான் ஹேண்ட் பிரேக் ரிலீஸ் ஆகும். ஆனால் நீங்கள் தற்போதுதான் டிரைவிங் பழகி கொண்டுள்ளீர்கள் என்றால், அத்தகைய விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் கார்களில் லிவரை இழுப்பதன் மூலம் பயன்படுத்தும் ஹேண்ட் பிரேக்தான் இருக்கும். இந்த ஹேண்ட் பிரேக்கிற்கான மற்றொரு பெயர் பார்க்கிங் பிரேக் (Parking Brake). இந்த பெயரை கேட்டவுடன் ஹேண்ட் பிரேக்கை எதற்கு பயன்படுத்த வேண்டும்? என்ற 'க்ளூ' உங்களுக்கு கிடைத்திருக்கும் என நம்புகிறோம்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

நீங்கள் காரை நிறுத்தியிருக்கும்போது, சரிவுகளில் சென்று விடாமல் தடுப்பதற்காகவே ஹேண்ட் பிரேக் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மலைப்பாங்கான இடங்கள் அல்லது சரிவான இடங்களில் காரை நிறுத்தியிருக்கும்போது ஹேண்ட் பிரேக் அதிகமாக பயன்படும். இதை எப்போதும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

பெரும்பாலான கார்களில், அதாவது லிவரை இழுப்பதன் மூலம் ஹேண்ட் பிரேக்கை ஆக்டிவேட் செய்யும் கார்களில், ஹேண்ட் பிரேக் போடும்போது, பின் பகுதியில் இரண்டு வீல்களும் 'லாக்' செய்யப்படும். அதே நேரத்தில் எலெக்ட்ரானிக் ஹேண்ட் பிரேக் என்பது, ஒவ்வொரு வீலின் பிரேக் காலிபர்களுடன் தொடர்புடையது.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்தகைய கார்களில் எலெக்ட்ரானிக் ஹேண்ட் பிரேக் அப்ளை செய்யப்படும்போது, அனைத்து வீல்களும் லாக் செய்யப்படும். ஒரு சிலர் ஹேண்ட் பிரேக் தவறாக பயன்படுத்தி விடுகின்றனர். குறிப்பாக புதிதாக கார் ஓட்டும் பலர், கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஹேண்ட் பிரேக்கை அப்ளை செய்து விடுகின்றனர். இது தவறான விஷயம்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

நீங்கள் டிரைவிங் சோதனைக்கு செல்கிறீர்கள் என்றால், உங்கள் பயிற்சியாளர் குறைந்தபட்சம் ஒரு முறையாவது காரை பார்க்கிங் செய்யுமாறு கூறுவார். பார்க்கிங் செய்வதற்கான வழிமுறைகளை முடித்த பின்னர், கார் முற்றிலுமாக நின்ற பிறகு ஹேண்ட் பிரேக்கை அப்ளை செய்து விடுங்கள். பயிற்சிகளை முடித்த பின், நீங்கள் தனியாக காரை ஓட்டும்போது அதையே பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அதாவது காரை பார்க்கிங் செய்த பிறகு, ஹேண்ட் பிரேக்கை அப்ளை செய்ய வேண்டும். அதே நேரத்தில் போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது ஹேண்ட் பிரேக்கை அப்ளை செய்யலாமா? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். நீங்கள் சிறிது நேரம் நிற்க போகிறீர்கள் என்றாலோ அல்லது சரிவான இடத்தில் நிற்கிறீர்கள் என்றாலோ, இது நிச்சயமாக நல்ல ஐடியாதான்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேபோல் அவசர சூழல்களில் காரை நிறுத்தினாலும் ஹேண்ட் பிரேக் போட மறக்க வேண்டாம். கார் முழுமையாக நின்ற பிறகு ஹேண்ட் பிரேக்கை அப்ளை செய்ய வேண்டும். நீங்கள் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி பயிற்சி எடுக்க எடுக்க, அனுபவமும், நம்பிக்கையும் பிறந்து விடும். நீங்கள் காரை ஓட்ட தொடங்கும்போது, ஹேண்ட் பிரேக் ரிலீஸ் செய்யப்பட்டு விட்டதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஒரு சிலர் ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்யாமலேயே காரை ஓட்டுகின்றனர். இது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். காரில் ஹேண்ட் பிரேக் ஆக்டிவேட் செய்யப்பட்டு இருந்தால், டேஷ்போர்டில் எச்சரிக்கை விளக்கு எரியும். ஹேண்ட் பிரேக்கிற்கான எச்சரிக்கை விளக்கு எரிந்தால், நீங்கள் அதனை ரிலீஸ் செய்ய வேண்டும்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அதன்பின்புதான் காரை ஓட்ட தொடங்க வேண்டும். ஒருவேளை உங்கள் காரில் எச்சரிக்கை விளக்கு எரியாவிட்டால், காரை ஓட்டும்போது உங்களுக்கு வித்தியாசம் தெரியும். ஹேண்ட் பிரேக் போட்டு கொண்டே காரை ஓட்டுவதற்கும், ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்த பிறகு காரை ஓட்டுவதற்கும் இடையே நிறைய வித்தியாசத்தை உங்களால் உணர முடியும்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

கார் பயணிப்பதில், அதாவது பவரில் இந்த வித்தியாசம் தென்படும். காரில் ஹேண்ட் பிரேக் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தால், குறைவான வேகத்திற்கே நீங்கள் ஆக்ஸலரேட்டரை அதிகமாக அழுத்த வேண்டியிருக்கும். இந்த வித்தியாசத்தை உணர்ந்தால் உடனடியாக காரை ஓரமாக நிறுத்தி விட்டு, ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்யுங்கள்.

காரில் ஹேண்ட் பிரேக்கை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா? இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அதன் பிறகு மேற்கொண்டு பயணம் செய்யுங்கள். ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் காரை ஓட்டினால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக பிரேக்கில் பிரச்னைகள் ஏற்பட்டு உங்களுக்கு செலவு வைத்து விடும். எனவே காரை ஓட்டும்போது, ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்ய மறக்க வேண்டாம்.

Most Read Articles
English summary
How to use a handbrake in car heres everything you need to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X