நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இதெல்லாம் செய்யணும்ங்க!

கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், காரை மீண்டும் எடுத்து பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

 நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இதெல்லாம் செய்யணும்ங்க!

கடந்த மார்ச் 24ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கும் கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட இருக்கும் நிலையில், அலுவலகம், வியாபாரம் உள்ளிட்ட தேவைகளுக்காக காரை மீண்டும் பயன்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது. இரு மாதங்களாக ஒரே இடத்தில் இருந்த காரை மீண்டும் எடுத்து பயன்படுத்தும்போது சில முக்கிய விஷயங்களை செய்தால் நல்லது.

 நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இதெல்லாம் செய்யணும்ங்க!

எஞ்சின் ஆயில்

அளவு முதலாவதாக காரில் எஞ்சின் ஆயில் அளவு சரியாக இருக்கிறதா என்பதை நீங்களே பரிசோதித்துவிடுவதும் அவசியம். குறைவாக இருக்கும்பட்சத்தில், டாப் அப் செய்த பின்னரே காரை ஸ்டார்ட் செய்ய வேண்டும். சில மாதங்களுக்கு முன் மாற்றி இருந்தால் கூட, எஞ்சின் ஆயில் தன்மையை சோதித்து புதிதாக மாற்றுவது நல்லது. கூலண்ட் அளவும் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துவிடுங்கள்.

MOST READ: இனி பெட்ரோல் நிலையத்தில் கியூ கட்டி நிற்க வேண்டாம்... மத்திய அரசின் சூப்பர் முடிவு!

 நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இதெல்லாம் செய்யணும்ங்க!

பேட்டரி பிரச்னை

காரை பயன்படுத்தாமல் இருக்கும்போது பேட்டரியில் மின் திறன் இழப்பு ஏற்பட்டு இருக்கும். புதிய கார்களை கூட நீண்ட நாட்களாக பயன்படுத்தவில்லை என்றால் இந்த பிரச்னை ஏற்படும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்து 10 நிமிடங்கள் ஓடவிடுவது அவசியம். ஏற்கனவே வெளியிட்ட வழிகாட்டு முறையில் இதனை தெரிவித்திருந்தோம். சிலர் செய்யவில்லை என்றால், செல்ஃப் ஸ்டார்ட் எடுக்காது. உடனே பதட்டப்பட வேண்டாம்.

 நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இதெல்லாம் செய்யணும்ங்க!

ஜம்ப் ஸ்டார்ட்

செல்ஃப் ஸ்டார்ட் மோட்டார் மூலமாக ஸ்டார்ட் செய்யவில்லை எனில், மற்றொரு பேட்டரி மூலமாக ஜம்ப் ஸ்டார்ட் செய்து சிறிது நேரம் ஓட விடுங்கள். பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். அருகிலுள்ள ஏதெனும் ஒரு வாகன பேட்டரி பழுது நீக்கும் கடையில் கூறினால், அவர்களே பேட்டரியை எடுத்து வந்து உடனே ஸ்டார்ட் செய்து கொடுத்துவிடுவர்.இதற்கு ரூ.150 முதல் ரூ.200 வரை கட்டணமாக தர வேண்டி இருக்கும். மிகவும் பழைய பேட்டரி என்றால் பேட்டரியை மாற்றுவது அவசியம்.

MOST READ: 30 வயசுதான்! அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய கோடீஸ்வரர்! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

 நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இதெல்லாம் செய்யணும்ங்க!

டயர்களில் காற்றழுத்தம்

நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் கார் நிற்பதால், டயர்களில் காற்றழுத்தம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, முதல் வேலையாக அனைத்து டயர்களிலும் காற்றழுத்தம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து விடுங்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இத முதல்ல படிங்க!

எரிபொருள் நிரப்பும்போது...

காரில் குறைவான எரிபொருள் இருந்தாலும் அல்லது நீண்ட நாட்களாக நிற்பதால், எரிபொருள் செல்லும் குழாய்களில் அடைப்பு அல்லது வேறு பிரச்னைகள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, முதல்முறை மட்டும் முழுமையாக எரிபொருள் நிரப்புங்கள்.

MOST READ: சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இத முதல்ல படிங்க!

ஏசி சிஸ்டம்

கார் ஸ்டார்ட் செய்து 15 நிமிடங்கள் கழித்து பேட்டரி போதிய சார்ஜ் ஆனவுடன் ஏசி சிஸ்டத்தையும் சிறிது நேரம் ஓடவிட்டு வெளியில் இருங்கள். சரியாக வேலை செய்கிறதா என்பதை தெரிந்து கொண்டு பின்னர் காரில் செல்லுங்கள். குறிப்பிட்ட தூரம் சென்ற பின்னரும் குளிர்ச்சி போதுமான அளவு இல்லையெனில், ஏசி மெக்கானிக்கை பார்த்து சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏசி சிஸ்டத்தையும் கிருமி நீக்கம் செய்வதும் அவசியம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இத முதல்ல படிங்க!

மின்னணு சாதனங்கள்

அதேபோன்றே, பேட்டரி முழுமையாக சார்ஜ் அளவை எட்டிய பின்னர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை ஒருமுறை இயக்கி சரியாக இயங்குகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஹெட்லைட், இண்டிகேட்டர், வைப்பர்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதையும் உறுதி செய்யவும். எஞ்சின் ஓடிக் கொண்டிருக்கும்போதே இவற்றை செய்துவிடுங்கள். இல்லையெனில், பேட்டரியில் சார்ஜ் இறங்கி மீண்டும் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கு வாய்ப்புண்டு.

MOST READ: 15 நிமிஷத்துல வேலை முடிந்தது... கொரோனாவை தடுக்க சூப்பரான ஐடியா... செலவு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இத முதல்ல படிங்க!

சுத்தப்படுத்துங்கள்

காரை நன்கு கழுவி சுத்தப்படுத்திவிடுங்கள். காருக்குள் கிருமி நாசினி மூலமாக சுத்தப்படுத்திவிடுங்கள். உட்புறத்தையும் சுத்தப்படுத்தி கிருமி நீக்கம் செய்துவிடுவது அவசியம்.

 நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இத முதல்ல படிங்க!

சானிட்டைசர்

பிற இடங்களுக்கு சென்றுவிட்டு காரில் ஏறும்போது கிருமி நாசினி மூலமாக கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு ஸ்டீயரிங் வீலில் கை வையுங்கள். காரிலேயே புதிதாக மாற்றிக் கொள்வதற்கு ஏதுவாக குறிப்பிட்ட எண்ணங்களில் மாஸ்க்குகள் மற்றும் சிறிய சானிட்டைசர் ஒன்றையும் வைத்துக் கொள்ளுங்கள்.

 நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இத முதல்ல படிங்க!

பரிசோதனை

இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என்று சொல்கிறவர்கள், அருகிலுள்ள சர்வீஸ் சென்டரில் விட்டு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ளுங்கள். மேலும், வீட்டிற்கே வந்து பரிசோதனை செய்யும் வசதியையும் சில நிறுவனங்கள் குறைவான கட்டணத்தில் அறிவித்துள்ளன. அதனை பயன்படுத்தி பிரச்னைகள் ஏதும் இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்வது நல்லது.

 நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இத முதல்ல படிங்க!

வீல் பேலன்சிங் & அலைன்மென்ட்

காரை வெளியில் எடுத்தவுடன் வீல் பேலன்சிங் மற்றும் அலைன்மென்ட் செய்துவிடுவதும் அவசியம். இது டயர் பாதிப்புகளையும், ஸ்டீயரிங் சிஸ்டம் பாதிப்புகளையும் தவிர்க்க உதவும்.

 நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இத முதல்ல படிங்க!

விவேகம்

நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுத்து ஓட்டும்போது முதல் சில நாட்களுக்கு மிக மிக நிதானமான வேகத்தில் செல்வது அவசியம். காரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு திடீரென பழுதாக வாய்ப்பு இருக்கிறது. வேகத்தை தவிர்ப்பது மிக முக்கியம்.

Most Read Articles

English summary
Important Things To Do In Your Car Before you Head Out for a Drive.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X