மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பருவ மழை தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான காரியம்.

By Arun

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பருவ மழை தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான காரியம். எனவே மழைக்காலத்தில், கார்களை எப்படி பாதுகாப்பது? என்னென்ன பொருட்களை காரில் வைத்து கொள்ள வேண்டும்? மழைக்காலத்திற்கு ஏற்ற வகையில் கார்களை எப்படி தயார் செய்ய வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

இந்தியாவில் பருவ மழை காலங்களில், சர்வ சாதாரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதில், சிலர் அப்படியே கார்களை செலுத்துகின்றனர். இதனால் காரின் இன்ஜின் நிரந்தரமாக செயலிழந்துவிடும் என்பதை, காரின் உரிமையாளர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், நமது நாட்டில் பருவ மழை காலங்களில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கார்கள் சேதமடைகின்றன. ஏனென்றால் காரின் இன்ஜினுக்கு இருக்கும் மிகப்பெரிய எதிரியே தண்ணீர்தான். இதனால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், கார் சர்வீஸ் சென்டர்களுக்கு படையெடுப்பது வாடிக்கையாக உள்ளது.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பருவ மழை படிப்படியாக தீவிரமடைய தொடங்கியுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில்தற்போது கனமழை பெய்து வருகிறது. இதுதவிர தமிழகத்தின் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை கொட்டி தீர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே கார், டூவீலர்களை வைத்திருப்பவர்கள் உஷாராக இருந்து கொள்வது நல்லது. குறிப்பாக விலை உயர்ந்த வாகனங்களை வைத்திருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் அவசியம்.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

இந்த சூழலில், பருவ மழை காலத்தில், கார்களை எப்படி பாதுகாப்பது? மழையில் பயணிக்கும்போது காரில் என்னென்ன பொருட்களை வைத்து கொள்ள வேண்டும்? மழைக்காலத்திற்கு ஏற்றவாறு காரை எப்படி தயார் செய்ய வேண்டும்? என்ற தகவல்களை தெரிந்து கொள்வது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

மிகவும் அதிகமான அளவில் தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகளில் காரில் பயணிப்பதை தவிர்க்க முயலுங்கள். ஒருவேளை பயணித்தே ஆக வேண்டும் என்றால், முதலில் தண்ணீரின் ஆழத்தை கணக்கிடுங்கள். கார் டயரின் பாதி அளவிற்கு மேல் ஆழமாக இருந்தால், தண்ணீர் வடியும் வரை காத்திருங்கள். அல்லது மாற்று பாதையை தேர்வு செய்யுங்கள்.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில், எக்காரணத்தை முன்னிட்டும் மற்றொரு வாகனத்தை நெருக்கமாக பின்தொடர்ந்து செல்ல வேண்டாம். ஏனெனில் முன்னால் செல்லும் வாகனம் ஏற்படுத்தும் சிறிய சிறிய அலைகளால், தண்ணீரின் மட்டம் உயரும். இதன்மூலம் காரின் ஏர் இன்டேக் சிஸ்டத்திற்கு உள்ளே தண்ணீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் பயணித்து கொண்டிருக்கும்போது, காரின் இன்ஜின் திடீரென ஆப் ஆகிவிடக்கூடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கி கொண்டால், மீண்டும் காரை ஸ்டார்ட் செய்ய முயலாதீர்கள். காரின் ஏர் இன்டேக் சிஸ்டத்திற்கு உள்ளே, தண்ணீர் புகுந்து விட்ட நிலையில், மீண்டும் இன்ஜினை ஆன் செய்வது என்பது சேத அளவை மேலும் அதிகமாக்கி விடும்.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

உயரமான இடங்களில் காரை பார்க்கிங் செய்யுங்கள். ஒருவேளை தாழ்வான பகுதியில் பார்க் செய்யப்பட்டிருந்தால், காரின் பேட்டரி கனெக்ஸனை அப்போதைக்கு துண்டித்துவிடுங்கள். தண்ணீரில் பயணிக்கையில் எக்காரணத்தை முன்னிட்டும், காரின் கதவுகளை திறக்க வேண்டாம். ஏனெனில் தண்ணீர் உள்ளே புகுந்து, காரின் இன்டீரியரும் சேதமடைந்து விடக்கூடும்.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

மழைக்காலங்களில் சாலை ஈரமாக இருக்கும். எனவே கார் ஸ்கிட் ஆவதை தவிர்க்க, டயர்களை சரியான முறையில் பராமரிப்பது அவசியம். டயர்கள் பழையதாகவும், க்ராக் ஆகவும் இருந்தால், உடனடியாக மாற்றி விடுங்கள். டயரில் காற்றின் அழுத்தத்தை முறையாக பராமரியுங்கள். வீல் அலைன்மெண்ட் சரியாக இருக்கிறதா? என்பதையும் பார்த்து கொள்ளுங்கள். ஈரமான சாலைகளுக்கு ஏற்றவாறு, பிரேக்கிங் சிஸ்டத்தையும் சரிபார்த்து கொள்வது நல்லது.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

மழைக்கு முன்பாக வீசும் புழுதி காற்றால், காரின் வீண்டுசீல்டில் அழுக்கு படிந்துவிடும். எனவே வைப்பரை பயன்படுத்தும் முன்பாக, முதலில் தண்ணீரை ஊற்றி துணியால் துடைத்து, விண்டுசீல்டில் இருக்கும் அழுக்கை அகற்றுங்கள். அதன்பின்பு வைப்பரை பயன்படுத்துங்கள். இதன்மூலம் விண்டுசீல்டில் ஸ்க்ட்ராச் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

காரில் எப்போதும் குடையை வைத்து கொள்ளுங்கள். ஏனெனில் மழையில் நனைந்து விட்டு வந்து அப்படியே காரின் சீட்டில் அமர்ந்தால், உங்கள் மீதுள்ள ஈரத்தை சீட் மற்றும் மேட் ஆகியவை உறிஞ்சி கொள்ளும். அவை உடனடியாக காய வைக்கப்படாவிட்டால் கெட்ட வாடை வீச தொடங்கி விடும். இந்த பிரச்னைகளுக்கு குடை தீர்வாக அமையும்.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

உங்கள் காரின் சீட் கவர் மற்றும் மேட் ஆகியவை புதியதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருந்தால், மழைக்காலம் முடியும் வரை அவற்றை அகற்றி விடுவதும் கூட நல்ல ஐடியதான். அதற்கு பதிலாக பழைய சீட் கவர் மற்றும் மேட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

குடையுடன் சேர்த்து டவ் ரோப், மண்வெட்டி ஆகியவற்றையும் காரில் வைத்து கொள்ளுங்கள். சேறு, சகதியில் சிக்கி கொண்டால், காரை எடுக்கவும், மழையில் எங்கேனும் நின்று விட்டால் காரை இழுத்து செல்லவும் டவ் ரோப் பயன்படும். மண்வெட்டி இருந்தால், டயர்களை சுற்றி இருக்கும் சேற்றை வெட்டி எடுக்க பயன்படும்.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி? என்னென்ன பொருட்கள் காரில் இருக்க வேண்டும்?

மழைக்காலங்களில் டிராபிக் ஜாம் ஏற்படுவது சகஜம். சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள், ஓரிரு மணி நேரங்கள் கூட டிராபிக் ஜாமில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே தேவையான ஸ்நாக்ஸ், தண்ணீர் ஆகியவற்றை காரில் வைத்து கொள்ளுங்கள். இதனுடன் செய்திதாள்கள், வார இதழ்கள் ஆகியவற்றையும் காரில் வைத்திருந்தால், டிராபிக் ஜாமில் பொழுதைபோக்க கவலைப்பட வேண்டியதில்லை.

Most Read Articles
English summary
Useful tips to keep vehicle safe in monsoon season
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X