தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு

பெட்ரோல் பங்க்குகளில் மறைந்திருக்கும் ஆபத்துக்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு

அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டுவது எவ்வளவு பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்துமோ, அதே அளவிற்கான பின் விளைவுகள் நீங்கள் பெட்ரோல் பங்க்கில் அஜாக்கிரதையாக நடந்து கொண்டாலும் ஏற்படும். பெட்ரோல் பங்க்குகளில் எளிதாக தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே ஒரு சில பாதுகாப்பு விதிமுறைகளை பெட்ரோல் பங்க்குகளில் நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு

மேலும் பெட்ரோல் பங்க்குகளில் ஒரு சில விஷயங்களை செய்வதையும் நீங்கள் நிறுத்த வேண்டும். பெட்ரோல் பங்க்குகளில் நீங்களும், உங்கள் வாகனமும் பாதுகாப்பாக இருக்க தேவையான டிப்ஸ்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இவை உங்களுக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம்.

தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு

எரிபொருள் நிரப்பும்போது இன்ஜினை ஆஃப் செய்து விடுங்கள்!

பெட்ரோல் பங்க்குகளுக்கு சென்ற உடன், உங்கள் வாகனத்தின் இன்ஜின் ஆஃப் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஆனால் இன்ஜினை ஆஃப் செய்யாத காரணத்தால், பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்ததாக தகவல்கள் இல்லை. எனினும் பாதுகாப்பு கருதி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீங்கள் இதனை செய்யலாம்.

தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு

செல்போன் பயன்படுத்த வேண்டாம்!

செல்போன்கள் கதிர்வீச்சுகளை உமிழும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதனால் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக வெயில் அதிகமாக அடிக்கும் நாட்களில், உங்கள் செல்போன் சூடேறி வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே பெட்ரோல் பங்க்குகளில் செல்போன் பயன்படுத்துவது ஆபத்தானது.

தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு

கூடுமான வரை பெட்ரோல் பங்க்கிற்குள் நுழைவதற்கு முன்னதாக உங்கள் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஆனால் இந்த விஷயத்தில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. செல்போன் பயன்படுத்துவதால் தீ பிடிக்காது என ஒரு சிலர் நம்புகின்றனர். ஆனால் செல்போன் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு

சிகரெட் வேண்டாமே!

பெட்ரோல் பங்க்குகளில் சிகரெட்டை பயன்படுத்தினால், மிகப்பெரிய ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு சிறிய சிகரெட் துண்டோ அல்லது சாம்பலோ கூட, பெரிய தீ விபத்தை ஏற்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தீயை ஏற்படுத்தும் எந்தவொரு பொருளையும் பெட்ரோல் பங்க்குகளில் பயன்படுத்தாமல் இருப்பதுதான் நல்லது.

தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு

அதே சமயம் நீங்கள் குழந்தைகளுடன் சென்றால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். எனவே பெட்ரோல் பங்க்குகளில் புகை பிடிக்காதீர்கள். தீக்குச்சிகளையும் பற்ற வைக்க வேண்டாம். மேலும் லைட்டர்களையும் பயன்படுத்த வேண்டாம். தீப்பிடிக்க சாத்தியம் உள்ள அனைத்து பொருள்களையும், எரிபொருள் நிரப்பும்போது தள்ளியே வையுங்கள்.

தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு

தீ விபத்து மட்டுமல்ல!

பெட்ரோல் பங்க்குகளில் தீ விபத்து மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு அபாயங்களும் இருக்கின்றன. பெட்ரோல் பங்க்குகளுக்கு செல்லும்போது உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் பெட்ரோல் பங்க்குகளுக்கு லாரி, பஸ் போன்ற பெரிய வாகனங்கள் எல்லாம் வரும்.

தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு

அப்போது உங்கள் குழந்தைகளை நீங்கள் தனியாக விட்டால், அது விபத்தை வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்தது போல் ஆகி விடும். எனவே பெட்ரோல் பங்க்கில் இருந்து நீங்கள் புறப்படும் வரை குழந்தைகளை காருக்கு உள்ளே இருக்கும்படி அறிவுறுத்தலாம். பெட்ரோல் பங்க்குகளில் பாதுகாப்பை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் அபாயகரமான இடமாக மாறலாம்.

தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு

திருட்டு!

பெட்ரோல் பங்க்குகளில் மறைந்திருக்கும் மற்றொரு ஆபத்து திருட்டு. நீங்கள் விண்டோக்களை கீழே இறக்கி விட்டு, 5 நிமிடங்கள் வெளியே சென்றால் கூட, காருக்கு உள்ளே இருக்கும் உங்கள் உடைமைகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே காரை தனியாக விட்டு விட்டு எங்கும் செல்ல வேண்டாம். இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.

தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு

எச்சரிக்கை பலகைகளுக்கு மதிப்பு கொடுங்கள்!

செல்போன் பயன்படுத்த வேண்டாம், புகை பிடிக்காதீர்கள் என்பது போல், பெட்ரோல் பங்க்குகளில் நிறைய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். ஒரு சிலர் அந்த பலகைகளை பார்ப்பதே இல்லை. ஆனால் பெட்ரோல் பங்க்குகளில் வைக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை பலகைகளை மதித்து, அதற்கேற்ப நடந்து கொள்வது அவசியம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Petrol Bunk Safety Tips. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X