சார்ஜ் போடாமல் வெறும் சூரிய வெளிச்சத்திலேயே காரை இயக்க முடியுமா? இரவு நேரம் இது எப்படி இயங்கும்?

இன்று சோலார் கார்கள் குறித்து மக்கள் அதிகம் பேசி வருகின்றனர். எலெக்ட்ரிக் காரில் சார்ஜ் போடாமல் நேரடியாகச் சூரிய சக்தி மூலம் சார்ஜ் காரை பயன்படுத்துவது சாத்தியமா? இப்படிச் செய்வதால் மாசுவை கட்டுப்படுத்த முடியுமா? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இன்று உலகில் இயங்கும் பெரும்பாலான கார்கள் பெட்ரோல் அல்லது டீசல் பவரில் இயங்கும் திறன் கொண்டவை, இந்த பெட்ரோல்/டீசல் கச்சா எண்ணெய்யிலிருந்து வருபவை ஆனால் பூமியிலிருந்து இன்னும் எவ்வளவு காலத்திற்குக் கச்சா எண்ணெய் கிடைக்கும் என நமக்குத் தெரியாது. இதனால் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை கார் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துவருகின்றனர். இதற்காக மார்கெட்டில் தற்போது ஹைபிரிட் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள், ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் கார்கள் தயாரிப்பில் உள்ளன.

ஆனால் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு மின்சார சக்தி தேவை இந்த மின் சக்தி ஏதாவது எரிபொருள் மூலம்தான் கிடைக்கிறது. இதை மாற்றி சூரிய சக்தியில் இந்த மின்சாரத்தை எடுத்து எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தும்படியான சூரிய சக்தி கார்கள் குறித்து சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை அடிப்படியாகக் கொண்டு சில நிறுவனங்கள் சூரிய சக்தியில் இயங்கும் காரை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் இப்படியாகச் சூரிய சக்தி காரை தயாரிக்க முடியுமா? காணலாம் வாருங்கள்.

சூரிய சக்தி

சூரிய சக்தி என்பது நமக்கு எப்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும் ஒரு சக்தி, ஒரு நாளுக்கு ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்றவாறு, இந்தியாவில் 12 மணி நேரம் வரை சூரிய வெளிச்சம் இருக்கும். இது என்றைக்குமே தீர்ந்து போகாத ஒரு ஆற்றல் என்பதால் இந்த சக்தியைப் பயன்படுத்தி கார்களை வடிவமைத்தால் அது இயற்கை வளங்களை அழிக்காமல் இயங்கும். தற்போது உள்ள கார்களுக்கு நல்ல மாற்றாக அமையும்.

போதுமான சக்தி கிடைக்குமா

சூரியனிலிருந்து ஒரு சதுர மீட்டர் அளவிற்கு 1000 வாட்ஸ் மின்சாரம் பூமிக்கு வரும் ஆனால் அதில் 20 சதவீதம் அதாவது 200 வாட்ஸ் மின்சாரத்தைத் தான் தற்போது உள்ள சோலார் பேனல்களால் கன்வெர்ட் செய்ய முடியும். இப்பொழுது ஒரு கார் முழுவதும் சோலார் பேனல்களாக வைத்து டிசன் செய்தாலும் அதிகபட்சம் 2 கிலோ வாட் மின்சாரத்தைத் தான் ஒரே நேரத்தில் எடுக்க முடியும். ஆனால் மின்சார கார் இயங்க 100 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் தேவை அப்படி என்றால் சூரிய சக்தியை விட 50 மடங்கு அதிக திறன் கொண்ட மோட்டார் அது.

அதனால் சூரிய சக்தியை மட்டும் ஒரே சக்தியைக் கொண்டு கார்களை வடிவமைக்க முடியாது. ஆனால் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இது போக சோலார் சார்ஜிங் கொண்ட கார்கள் அல்லது அதிக பேட்டரி திறன் கொண்ட கார்கள் ஆகியவற்றை வைத்து சூரிய சக்தியில் மட்டும் இயங்கும் கார்களை வடிவமைக்க முடியும்.

செலவு கிடையாது

சூரிய சக்தி உலகம் முழுவதும் பொதுவான ஒரு விஷயம் சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள் தயாரிக்கப்பட்டால் வாகனங்களுக்கான எரிபொருளுக்குச் செலவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. சூரிய வெப்பமே மின்சாரமாக மாறுவதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சூரிய காரை செலவே இல்லாமல் பயன்படுத்த முடியும்.

சாத்தியமா?

கார் முழுவதும் சோலார் பேனல்கள் கொண்டு தயாரிப்பது காரின் வடிவமைப்பில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். இது போக ஹைட்லைட், வைப்பர், ரியர் வியூ கண்ணாடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முடியாது. இது போக சோலார் பேனல்கள் ஒரே இடத்தில் இருக்கும் போது தான் சிறப்பாகச் செயல்படும் நகர்ந்து கொண்டேயிருந்தால் காற்று காரணமாக அதன் திறன் குறையும். அதனால் தற்போது உள்ள தொழிற்நுட்பத்தின்படி சோலார் கார் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று தான். சில நிறுவனங்கள் தயாரித்தாலும் அதை மற்ற கார்களை போலப் பயன்படுத்த முடியாது. சோலார் கார்கள் செய்ய வேண்டும் என்றால் அறிவியல் தொழிற்நுட்பங்கள் இன்னும் வளர்ச்சியடைய வேண்டும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Pros and cons of practical solar car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X