ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண்ணிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந்திருக்கிறதா? கேட்கவே ஆச்சரியமா இருக்கே

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணங்களின் போது பிஎன்ஆர் எண் ஏன் வழங்கப்படுகிறது எனப் பலருக்கும் தெரியாது அதன் பயன்கள் என்ன? அதன் பின்னால் மறைந்திருக்கும் ரகசியங்கள் என்ன? முழுவதுமாக காணலாம் வாருங்கள்.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

இந்தியாவில் பொது போக்குவரத்து வசதிகளில் முக்கியமானது ரயில்வே தான். தினமும் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இப்படியாக ரயில் பயணத்தில் பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்தே பயணம் செய்கிறார்கள். ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இருந்தாலும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் தான் அதி மக்கள் பயணம் செய்கிறார்கள்.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

ரயில்களில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று ஆன்லைன் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்வது அடுத்தது நேரடியாக ரயில் நிலையத்திற்குச் சென்று டிக்கெட்டை முன்பதிவு செய்வது இப்படியாக இரண்டு வழிகளில் ரயில் டிக்கெட்டை புக் செய்தாலும் அந்த டிக்கெட்களை அடையாளம் காண இந்தியாவில் PNR எண் என் விஷயம் கொடுக்கப்படுகிறது.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

இந்த PNR என்பதற்கு விரிவாக்கம் Passenger Name Records. இதன் பெயரிலேயே தெரிகிறது. அதாவது ரயிலில் முன்பதிவு செய்த பயணிகளின் தகவல்களைக் கொண்ட பதிவேட்டின் எண்தான் இது. 10 இலக்கம் கொண்ட இந்த எண் ரயில் பயணிகளுக்கு மிக முக்கியமானது பயணிகளுக்கான சீட் ஒதுக்கீடு முதல் பல விஷயங்கள் இதன் மூலம் தான் நடக்கும். இந்த PNR பற்றி முழு தகவலைத் தான் இங்கே காணப்போகிறோம்.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

பயணிகளுக்கு டிக்கெட் புக் செய்யும் போது இந்த PNR எண் வழங்கப்படும். இதில் பயணிகளின் பெயர், வயது, பாலினம், அவர்கள் பயணிக்கும் ரயில் எண் பெயர், பயணிக்கும் பெட்டி, மற்றும் சீட் எண் போன்ற விபரங்கள் இருக்கும். இந்த PNR எண் என்பது ஒரு பயணிக்கு ஒரு எண் என இல்லாமல் ஒரு டிக்கெட்டிற்கு ஒரு எண் என வழங்கப்படும். ஒரு டிக்கெட்டில் அதிகபட்சமாக 6 பயணிகளுக்கு டிக்கெட் புக் செய்யலாம். குறைந்தது ஒருவருக்கு கூட புக் செய்யலாம்.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

முன்பே சொன்னது போல PNR என்பத 10 இலக்க எண் இந்த எண் பல ரகசியங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்படுகிறது. அதைப் பற்றி விரிவாகக் காணலாம். இந்த 10 இலக்க எண்களில் முதல் 3 இலக்க எண் எந்த PRS (Passenger Reservation System)-ல் இருந்து இந்த எண் உருவாக்கப்பட்டது என்பதை குறிக்கக்கூடியது. இந்தியாவில் மொத்தம் 5 PRSகள் உள்ளது. செகந்திராபாத், புதுடில்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

அதில் முதல் இலக்கம் எந்த ரயில்வே பகுதியிலிருந்து இந்த டிக்கெட் புக் செய்யப்படுகிறது என்பதைக் குறிக்கும். உதாரணமாக 1 எனத் துவங்கும் PNR எண் செகந்திராபாத் பிஆர்எஸ்-ல் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு வழங்கப்படும். அதன்படி 2 மற்றும் 3 எண்ண எண்கள் முறையே டில்லி பிஆர்எஸ்-ல் புக் செய்யப்படும் டிக்கெட்களுக்கு வழங்கப்படும். 4 மற்றும்5 சென்னை பிஆர்எஸ். 6 மற்றும் 7 கொல்கத்தா பிஆர்எஸ், 8 மற்றும் 9 மும்பை பிஆர்எஸ் என முதல் இலக்கம் பிஆர்எஸ்காக பிரிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

அடுத்த 2 எண்கள் ரயில்வே கோட்டத்தைக் குறிக்கிறது. ரயில்வே நிர்வாகம் தனது நிர்வாக வசதிக்காக ரயில்வேக்களைக் கோட்டம் கோட்டமாகப் பிரித்துள்ளது. அதனால் ரயில்வே நிர்வாகம் இந்த கோட்டங்களுக்கான எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு டிக்கெட்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது எண் கோட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

அடுத்த 7 இலக்க எண்கள் ரான்டமாக வழங்கப்படுகிறது. இதில் பயணிகளின் தகவல்கள் எதுவும் இருக்காது. 7 இலக்கம் எண்கள் கணினி தானே தயார் செய்து இந்த புக்கிங்கிற்கு ஒதுக்குகிறது. இந்த 7 மற்றும் முதல் 3 எண்கள் இணைந்து மொத்தம் 10 எண்களாக PNR எண் வழங்கப்பட்டு அதில் பயணிகளின் தகவல்கள் சேமிக்கப்படுகிறது.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

ஒரு PNR எண்ணில் பயணிகள் குறித்த என்னென்ன தகவல்கள் எல்லாம் இருக்கிறது எனக் காணலாம் வாருங்கள். அந்த டிக்கெட்டில் மொத்தம் எத்தனை பயணிகள் பயணிக்கிறார்கள். அவர்களின் பெயர் வயது, பாலினம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் பதிவாகியிருக்கும்.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

அடுத்தாக அவர்கள் பயணிக்கும் தேதி, ரயில், அதில் இவர்கள் ஏறும் ரயில் நிலையம், இறங்கும் ரயில் நிலையம், எந்த பெட்டியில் இவர்களுக்கான டிக்கெட் ஒதுக்கப்பட்டுள்ளது, சீட் எண் என்ன உள்ளிட்ட தகவல்களும், ஒரு வேலை காத்திருப்பு பட்டியல் என்றால் தற்போதைய பட்டியலில் இவர்களின் நிலை என்ன? இந்த ரயிலுக்கான சார்ட் தயாராகிவிட்டதா? உள்ளிட்ட விபரங்கள் இருக்கும்.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

இந்த பயணத்தின் போது பயணிகள் குறித்த தகவல் PNR-ல் ஒப்பனாகதான் இருக்கும். பயணம் முடியும் வரை இந்த தகவல்களை PNR எண் இருந்தால் யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். பயணம் முடிந்ததும். இந்த PNR எண் லாக் செய்யப்படும். அதன் பின் இந்த தகவல்களை ரயில்வே அதிகாரிகளால் மட்டுமே பார்க்க முடியும்.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

பயணிகளின் சுய விபரம் குறித்த தகவல்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடைமுறையைக் கொண்டு வந்துள்ளனர். அதன் பின் அந்த தகவல்கள் அடுத்த 9 மாதங்களுக்கு சர்வரில் பத்திரமாகப் பாதுகாக்கப்படும். அதுவரை அந்த பிஎன்ஆர் எண் யாருக்கும் வழங்கப்படாது. அதுவரை எந்த பிரச்சனையும் இல்லை என்றால் அந்த தகவல் முற்றிலுமாக அழிக்கப்பட்டு புதிதாக புக்செய்யப்படும் டிக்கெட்களுக்கு அதே PNRஎண் வழங்கப்பட்டுவிடும்.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

ஒரு வேலை பயணிகள் இந்த பயணம் குறித்து ஏதேனும் புகாரைப் பயணம் முடிந்ததும் தெரிவித்தால் அவர்கள் குறிப்பிட்ட PNR எண் மூலம் தான் டிக்கெட்டை புக் செய்வார்கள். அதனால் அப்பொழுது அந்த புகாரை விசாரணை செய்வதற்காக இந்த PNR எண்ணில் உள்ள தகவல்கள் 9 மாதங்களுக்குப் பாதுகாக்கப்படுகிறது.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

ஒரு வேலை புகார் செய்யப்பட்டு அந்த புகார் அடுத்த 9 மாதங்களுக்கு நிலுவையில் இருந்தாலோ அல்லது கோர்ட்டில் இது குறித்து வழக்கு இருந்தாலோ இந்த PNR எண் பிளாக் செய்யப்பட்டுக் குறிப்பிட்ட வழக்கு முடியும் வரை அல்லது புகார்கள் தீர்க்கப்படும் வரை மற்ற டிக்கெட்டிற்கு வழங்கப்படாது.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

இது மட்டுமல்ல ரயில் பயணத்தின் போது ரயில்வே நிர்வாகத்திடமே உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டும் என்றால் PNR எண் மூலம் ஆர்டர் செய்தால் போது பயணத்தின் போது பயணிகள் இருக்கும் இடத்திற்கே இந்த உணவு டெலிவரி செய்யப்படும். இது மட்டுமல்ல ரயில்வே நிலையங்களில் உள்ள ஓய்வு அறையைப் பயன்படுத்தவும், இந்த PNR என் பயன்படும்.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

ரயில்கள் விபத்தில் சிக்கினாலும் அதில் பயணித்தவர்களுக்கு நஷ்ட ஈடு, இழப்பீடு என அரசு வழங்கினால் அதைக் கோருவதற்கும் இந்த PNR எண் முக்கியமான விஷயமாக அமையும். அதுமட்டுமல்ல காத்திருப்பு பட்டியல் , ஆர்ஏசி போன்ற நிலைகளில் டிக்கெட் புக் செய்பவர்கள் பயணத்தின் போது தங்கள் டிக்கெட்டின் நிலை குறித்து அறிந்து கொள்ள உதவும். இந்த நிலை ஒவ்வொரு நிமிடமும் ஆன்லைனில் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும்.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

இது மட்டுமல்ல ஆன்லைனில் டிக்கெட் புக் செய்திருந்தால் நீங்கள் புக் செய்த டிக்கெட்டை செல்போன், லேப்டாப் போன்றவற்றில் காண்பிக்க முடியும். ஆனால் நேரடியாக ரயில் நிலையத்திற்குச் சென்று டிக்கெட் புக் செய்தால் அந்த டிக்கெட்டை காண்பிக்க வேண்டும் அப்பொழுது தான் உங்கள் பயணம் வேலிடேட் செய்யப்பட்ட பயணமாக இருக்கும். அந்த டிக்கெட் தொலைந்துவிட்டாலோ அல்லது எடுக்க மறந்துவிட்டாலோ நீங்கள் சீட்டு இல்லாமல் பணித்தவராகவே கருதப்படுவீர்கள்.

ரயில் டிக்கெட்டில் உள்ள PNR எண் ணிற்குப் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் மறைந் திருக்கிறதா ? கேட்கவே ஆச்சரியமா இருக்கே !

இந்த பிரச்சனையைச் சமாளிக்கவும் PNR பயன்படுகிறது. உங்களுக்கு புக் செய்யப்பட்ட டிக்கெட் தொலைந்துவிட்டால் அதன் PNR எண் தெரிந்தால் போது அதை வைத்து அந்த டிக்கெட்டின் மற்றொரு காப்பியை வாங்கி விட முடியும். இதற்காக நீங்கள் ரயில் நிலையத்திற்குச் சென்று டிக்கெட் புக் செய்தாலும் அந்த டிக்கெட்டை செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது உங்களுக்கு உதவும். இந்த தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
https://tamil.drivespark.com/off-beat/how-airports-deter-birds-we-explain-032358.html
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Secret behind PNR number provided during Ticket reservation in Trains
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X