நிவர் புயல் மிரட்டல்... வாகனங்களை பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகள்!

நிவர் புயல், அதிதீவிர புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்க உள்ள நிலையில், வாகனங்களை பாதுகாப்பாது மிக அவசியமானதாக இருக்கிறது. சில எளிய வழிகள் மூலமாக முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வதன் மூலமாக, வாகனங்கள் எந்த சேதமும் இன்றி தப்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நிவர் புயல் மிரட்டல்... வாகனங்களை பாதுகாப்பாது எப்படி?

நிவர் புயல், அதிதீவிர புயலாக மாறி இருப்பதால், சென்னை உள்பட தமிழகத்தின் பல கடலோர மாவட்டங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிதீவிர புயலை சமாளிக்க அரசு சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், புயல் வருவதை கண்டு அச்சப்படுவதை விட்டுவிட்டு, மக்களும் சில முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வதன் மூலமாக, பாதிப்புகளையும், சேதங்களையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

நிவர் புயல் மிரட்டல்... வாகனங்களை பாதுகாப்பாது எப்படி?

மேலும், பல லட்சம் போட்டு வாங்கப்படும் கார் மற்றும் பைக்குகள் புயல் மற்றும் கனமழை காரணமாக எளிதாக சேதமடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, இந்த சமயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முன் எச்சரிக்கை விஷயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

நிவர் புயல் மிரட்டல்... வாகனங்களை பாதுகாப்பாது எப்படி?

கார் அல்லது பைக்கை கவர் போட்டு மூடுவதற்கு முன்பாக நாள் விபரக் குறிப்புடன் உங்களது வாகனத்தை ஸ்மார்ட்ஃபோனில் படங்களை எடுத்து வைத்துவிடுவதும் அவசியம். வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரண்டின் நிலை குறித்த படங்கள் அவசியம்.

நிவர் புயல் மிரட்டல்... வாகனங்களை பாதுகாப்பாது எப்படி?

ஒருவேளை காருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், காப்பீட்டு நிறுவனத்திடம் புயலுக்கு முன் கார் நல்ல நிலையில் இருந்ததை காட்டுவதற்கான ஆதாரமாக அமையும். காப்பீட்டு நடைமுறைகளை எளிதாக செய்வதற்கும் இது உதவியாக இருக்கும்.

நிவர் புயல் மிரட்டல்... வாகனங்களை பாதுகாப்பாது எப்படி?

கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை வீட்டில் பாதுகாப்பான பார்க்கிங் பகுதி இருந்தால் நிறுத்து வைப்பதுடன், கவர் செய்து வைக்கவும். மழை அதிகம் பெய்து வருவதும், வெள்ள அபாயம் இருக்கும் பகுதிகளிலும் வீட்டில் கார் பார்க்கிங் வசதி இருந்தாலும், உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீட்டிலோ அல்லது மேடான இடங்களில் நிறுத்தி வைப்பது அவசியம்.

நிவர் புயல் மிரட்டல்... வாகனங்களை பாதுகாப்பாது எப்படி?

ஒருவேளை வெளியில் மட்டுமே அவசியம் இருந்தால், மழை வெள்ள பாதிப்பு இல்லாத பகுதியாக பார்த்து முன்கூட்டியே நிறுத்திவிடுங்கள்.

நிவர் புயல் மிரட்டல்... வாகனங்களை பாதுகாப்பாது எப்படி?

மரங்கள், மின்சார கம்பங்கள் இல்லாத பகுதியாக பார்த்து காரை நிறுத்தி முழுமையாக கவர் செய்து இறுக்கமாக டேப் மூலமாக ஒட்டி வைத்துவிடுங்கள். அதேபோன்று, விளம்பர பலகைகள் அதிகம் பொருத்தப்பட்டுள்ள உள்ள பகுதிகளிலும் நிறுத்துவதை தவிர்க்கவும்.

நிவர் புயல் மிரட்டல்... வாகனங்களை பாதுகாப்பாது எப்படி?

கட்டடங்களுக்கு ஓரமாக காரை நிறுத்தி வைப்பதன் மூலமாக காற்றின் வேகத்தில் இருந்து ஓரளவு பாதிப்பிலிருந்து கார் தப்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மிக பழைய கட்டடங்களுக்கு அருகில் நிறுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

நிவர் புயல் மிரட்டல்... வாகனங்களை பாதுகாப்பாது எப்படி?

கார்களில் அனைத்து கதவுகளும் மூடி இருக்கிறதா என்பதை உறுதி செய்து விட முடியும். கார், பைக்குகளில் முக்கிய ஆவணங்கள் இருந்தால் அதனை எடுத்துவிட்டு கவர் போட்டு காற்று உள்ளே புகாதவாறு இறுக்கமாக கட்டி வைப்பது அவசியம்.

நிவர் புயல் மிரட்டல்... வாகனங்களை பாதுகாப்பாது எப்படி?

பலருக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருந்தாலும், சூழல் காரணமாக மறந்து போகவோ அல்லது பின்பற்றுவதை அலட்சியம் காட்டாமல் நினைவூட்டலாக இந்த வழிமுறைகளை வழங்கியிருக்கிறோம். அலட்சியம் இல்லாமல் இந்த சில எளிய விஷயங்களை பின்பற்றுவது புயலுக்கு பின் மனதிற்கு அமைதி தரும் விஷயமாக இருக்கும்.

Most Read Articles
English summary
Here are simple tips to protect your car in a Cyclone.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X