க்ரூஸ் கன்ட்ரோல் பயன்படுத்தும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!!

நெடுஞ்சாலையில் செல்லும்போது ஆக்சிலரேட்டரை மிதிக்காமலேயே கார் குறிப்பிட்ட வேகத்தில் தொடர்ந்து செல்வதற்கான வசதியை க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் அளிக்கிறது. இதன்மூலமாக, ஓட்டுனருக்கு சற்று ஆசுவாசத்தையும், களைப்பை தவிர்த்து ஓய்வான டிரைவிங் அனுபவத்தை தரும்.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களில் மட்டுமே காணக் கிடைத்த இந்த வசதி இப்போது மாருதி பிரெஸ்ஸா, ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் போலோ, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ போன்ற கார்களிலும் சர்வசாதாரணமாக கொடுக்கப்படுகிறது.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று சாதாரண க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றொன்று அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம். சாதாரண க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் முன்னால் மற்றும் பின்னால் வாகனங்கள் வரும்போது ஓட்டுனர் காரை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

ஆனால், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் சென்சார்கள் மற்றும் கேமரா உதவியுடன் முன்னால் மற்றும் பின்னால் வரும் வாகனங்களுடன் பாதுகாப்பான இடைவெளியில் செல்லும் வகையில், தானியங்கி முறையில் காரின் வேகத்தை க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மாற்றிக் கொள்ளும். க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் பல சாதக, பாதகங்கள் உள்ளன.

சாதகங்கள்

சாதகங்கள்

க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் வைத்து நெடுஞ்சாலையில் காரை இயக்கும்போது அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

நீண்ட தூர பயணங்களின்போது ஓட்டுனருக்கு சற்று ஓய்வான டிரைவிங் அனுபவத்தை வழங்கும். அயர்ந்து போவதை தடுப்பதால் விபத்தை தவிர்க்கும் வாய்ப்பை வழங்குகிறது.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

சீரான வேகத்தில் செல்வதற்கு உதவுவதுடன், முந்தி செல்லும் வாகனங்களுடன் போட்டி போட்டு செல்லும் மனப்பான்மையையும் தவிர்க்கிறது.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

ஆசுவாசமான, சொகுசான பயண அனுபவத்தையும், ஓட்டுதல் சுகத்தையும் ஓட்டுனருக்கு வழங்கும்.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் சில பாதக அம்சங்களும் உண்டு. ஓட்டுனர் உடனடியாக காரை கட்டுப்படுத்தும் உணர்வை இழக்க வாய்ப்புண்டு.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

மொபைல்போனை பயன்படுத்துதல், உடன் வருபவர்களுடன் பேசிக் கொண்டே செல்லுதல் மற்றும் இதர விஷயங்களால் ஓட்டுனருக்கு கவனக்குறைவு ஏற்படும்போது விபரீதத்தில் முடியும்.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

மழை உள்ளிட்ட மோசமான சீதோஷ்ண நிலைகளில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் விபத்திற்கு வழிவகுக்கும்.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் மட்டுமே இந்த வசதி அளிக்கப்படுவதால், பட்ஜெட் கூடுதலாகும்.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

க்ரூஸ் கன்ட்ரோல் வசதி கொண்ட புதிய கார்களை வாங்கும்போது ரன்னிங் பீரியட் என்று சொல்லப்படும் முதல் 1,500 கிமீ தூரத்திற்கு க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பது அவசியம்.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

மழை நேரங்களில் சாலைகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் செல்லும்போது ஹைட்ரோபிளேனிங் என்ற தரைப்பிடிப்பை கார் இழக்கும் வாய்ப்பு இருப்பதால், அப்போது க்ரூஸ் கன்ட்ரோல் பயன்படுத்தக்கூடாது.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

பாதுகாப்பான வேகத்தில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை ஆன் செய்து கொள்வது அவசியம். அதிவேகத்தில் வைத்து செல்லும்போது, அவசர சமயங்களில் காரை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகிவிடும். இந்திய சாலைகளில் 80 கிமீ வேகத்தில் வைத்து செல்வது உசிதம்.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

மலைச்சாலைகளில் செல்லும்போது க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீங்கள் செட் செய்துள்ள வேகத்தை எட்டுவதற்காக எஞ்சினுக்கு அதிக அழுத்தம் தரப்படும். இதனால், எஞ்சின், டிரான்ஸ்மிஷன் பாகங்கள் பாதிப்புகளை சந்திக்கும்.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

நெடுஞ்சாலைகளில் சென்றாலும் வாகன போக்குவரத்து மிக குறைவாக இருக்கும்போது மட்டுமே க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை இயக்கவும். அதிக வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலைகளில் பயன்படுத்துவது ஆபத்து.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

அதேபோன்று, வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்ட சாலைகளில் செல்லும்போது க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை பயன்படுத்துவதும் போலீசில் சிக்கி அபராதம் கட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

நான்கு வழிச்சாலைகள், ஆறு வழிச்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் மட்டுமே பயன்படுத்துவது நலம். இருவழித்தட சாலைகளில் பயன்படுத்துவதும் விபத்திற்கு வழிகோலும்.

 க்ரூஸ் கன்ட்ரோல் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?

அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ள சொகுசு கார்களில் கூட மோசமான சீதோஷ்ண நிலைகளில், க்ரூஸ் கன்ட்ரோலுக்கு கிடைக்கும் படங்கள் தெளிவாக இல்லாமல் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

English summary
Specific Things You Need to Know Well When Using Cruise Control.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X