உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

உங்கள் வாகனத்தை பளபளப்பாக புதிது போல வைத்திருக்க டெஃப்லான் கோட்டிங் அடிக்க சொல்லி உங்களுக்கு அங்கள் நண்பர்கள் உட்பட பலர் அட்வைஸ் செய்கிறார்களா? டெஃப்லான் கோட்டிங் என்றால் என்ன அதை எவ்வாறு செய்ய வே

உங்கள் வாகனத்தை பளபளப்பாக புதிது போல வைத்திருக்க டெஃப்லான் கோட்டிங் அடிக்க சொல்லி உங்களுக்கு அங்கள் நண்பர்கள் உட்பட பலர் அட்வைஸ் செய்கிறார்களா? டெஃப்லான் கோட்டிங் என்றால் என்ன அதை எவ்வாறு செய்ய வேண்டும்? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? முழுமையாக இங்கே பார்க்கலாம் வாருங்கள்.

உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

டெஃப்லான் கோட்டின் என்பது வாகனத்தில் ரஸ்ட் ஏற்படாமல் இருக்க வாகனத்தின் மீது கெமிக்கலை பூசும் முறை. இந்த டெஃப்லானில் இருக்கும் பேஸ்ட் போன்ற கெமிக்கல் ஃப்ளூரோபாலிமர் என்ற ஒரு திரவத்தை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

இது காரின் பெயிண்ட்டிங்கை மிக பத்திரமாக பாதுகாக்கும் அதேநேரத்தில் சிறப்பான ஷைனிங்கையும் வழங்கும். அதிக வெப்பம், மழை எல்லா கால சூழ்நிலைகளிலும், இந்த வாகனங்கள் பார்க்க நீண்ட நாள் புதிதாக காட்சியளிக்க உதவும்.

உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

இந்த டெஃப்லான் கோட்டிங் காரின் மேல்புறத்தில் செய்யக்கூடியது. இது செய்த பின் காரின பாடியில் சுமார் 2-3 மிமீ அளவிற்கு ஷைனிங்கான கோட்டிங் இருக்கும். இது காரில் தூசு மற்றும் அழுக்கு படுவதை தடுக்கும். மேலும் வாகனத்தின் சில்வர் பாகங்கள் துரு பிடிக்காமலும் பாதுகாக்கும்.

உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

எப்படி டெஃப்லான் கோட்டிங் நடக்கிறது. ?

வாசிங்

முதலில் காரில் படித்திருக்கும் தூசு, அழுக்கு எல்லாவற்றையும் அகற்றவேண்டும். காரின் உட்புறங்களிலும் இதைபயன்படுத்தலாம் அதனால் காரின் வாகனத்தின் வெளிப்புறம் மட்டும் அல்லாமல் உட்புறத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்.

உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

வாசிங்கின் போது முதலில் மைல்டான ஷாப்பூவை போட்டு சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீரால் சுத்தம் செய்த பின்பு கார் முழுமையாக காயும் வரை காத்திருக்க வேண்டும். காய்ந்த உடன் காரில் தூசு அலுக்கு இல்லாமல் போய்விடும். அதன் பின் காட்டன் துணியை வைத்து காரை துடைக்க வேண்டும்.

உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

பாலிஷிங்

அதன் பின் வாகனத்தை பாலிஷிங் செய்ய வேண்டும் அதாவது வாகனத்தில் உள்ள லேசான கீறல்கள், டல் பெயிண்டிங் உள்ள பகுதிகள் என எல்லவற்றையும் சரி செய்யும். இதை செய்த பின் சிறிது நேரம் அதை காய விட வேண்டும்.

உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

டெஃப்லான் கோட்டிங்

அதன் பின் டெஃப்லான் கோட்டிங் பேஸ்டை எடுத்து வாகனத்தில் உள்ள பெயிண்ட் அடிகப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். இந்த பேஸ்ட் மோசமான வாசனை இருக்கும். அனால் வாகனத்தில் தடவிய பின் அது காணாமல் போகும். பின் ஒது துணியை கொண்டு வாகனம் முழவதும் அந்த பேஸ்ட் சமமாக பரவும் படி தடவ வேண்டும். அதன்பின் அதை காய வைத்தால் உங்களது வாகனம் டெஃப்லான் கோட்டிங் உடன் தயார்.

உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்ன என்றால் வாகனத்தில் நீங்கள் டெஃப்லான் கோட்டிங் செய்யும் முன்பு தூசு மற்றும் அழுக்குகள் இல்லாமல் இருக்கிறது என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அடுத்தாக டெஃப்லான் கோட்டிங் போட்ட பின்பு நீங்கள் சோப்பு பயன்படுத்தி காரை கழுவ கூடாது. அப்படி செய்தால் டெஃப்லான் கோட்டிங் போட்டே பயன் இல்லாமல் போகும்.

உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

நன்மைகள்

கீறல் தடுப்பு

டெப்லான் கோட்டிங் என்பது பளபளப்பாக கிளயர் சர்பேஸ் ஆக இருக்ககூடியது. சிறு சிறு தூசிகளால் ஏற்படும் ஸ்கராட்ச்கள் விழுகாமல் பாதுகாக்கும்.

உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

பளபளபாக்கும்

உங்கள் கார் எவ்வளவு பழையதாக இருந்தாலும் இந்த முறையை கையாண்டால், புதிய கார் போல பளபளக்க வைத்து விடும். சிறிய சிறிய கிறல்கள் இருந்தாலும் அதை அது சரிசெய்து விடும். நன்றான பினிஷிங் செய்யப்பட்ட டெஃப்லான் கோட்டிங் ஒரு கண்ணாடி போல காட்சியளிக்கும்.

உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

தூசி பாதுகாப்பு

மழை காலங்களிலும் சரி, காற்று காலங்களிலும் சரி உங்கள் கார் மீது படியும் தூசியால் காரின் பெயிண்டிற்கு எதுவும் ஆகாமல் பாதுகாப்பாக இருக்கும். டெஃப்லான் ஆண்டி ரஸ்டிங் லேயராகவே பயன்படும்.

உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

பாதகங்கள்

நீண்ட நாள் தாங்காது

இந்த டெஃப்லான் கோட்டிங் நீண்ட நாட்களுக்கு உங்கள் வாகனத்தை பாதுகாக்காது. அதிகபட்சம் 6 மாதங்கள் தான். அதுவும் மழை, வெயில் காலங்களில் அதை விட குறைவாக தான் அதன் வாழ்நாள் இருக்கும்.

உங்கள் காருக்கு டெஃப்லான் கோட்டிங் செய்யலாமா செய்ய கூடாதா?

அதிக விலை

உங்கள் காருக்கு டெப்லான் கோட்டிங் செய்ய அதிக விலை வெளியில் வசூலிக்கப்படுகிறது. ஒரு காருக்கு முழுமையாக டெப்லான் கோட்டிங் செய்ய ரூ 3 ஆயிரம் வரை செலவாகிறது. இதில் பெரும்பாலான பணம் டீலரின் லாபம் தான். அதிக செலவு இல்லை.

Most Read Articles
English summary
Teflon Coating: Pros and Cons of Teflon Coating on Cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X