டீசல் எரிபொருள் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

உலக நாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக கச்சா எண்ணெய் இருப்பது தெரிந்ததே. குறிப்பாக, கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பல எரிபொருள்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை முக்கியமானதாகவும், ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தநிலையில், பெட்ரோலைவிட டீசலின் விலை குறைவு என்பதுடன் பல்வேறு கூடுதல் நன்மைகளை வழங்குவதால், அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீசல் எரிபொருள் பிறந்த வரலாறு, பெயர் காரணம், நன்மைகள், பெட்ரோலைவிட எந்த விதத்தில் சிறந்தது, டீசல் பற்றி அடிக்கடி மனதில் எழும் கேள்விகள் உள்ளிட்டவற்றை அடக்கிய சிறப்புத் தொகுப்பாக இந்த செய்தி அமைகிறது.


கச்சா எண்ணெயை கண்டுபிடித்தவர்கள்

கச்சா எண்ணெயை கண்டுபிடித்தவர்கள்

உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியான கச்சா எண்ணெயை முதல்முதலாக பூமியிலிருப்பதை கண்டறிந்த பெருமை ஈராக்கியர்களுக்கே சாரும். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கட்டிடங்கள் அமைக்க மிக ஆழமான அஸ்திவாரம் அமைத்தபோது, கச்சா எண்ணெய் இருப்பதை ஈராக்கியர்கள் கண்டறிந்தனர். ஆனால், அதே கச்சா எண்ணெயை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு அந்நாட்டு மக்களின் வாழ்வு நிலை இன்று பெரும் சோகம்.

கச்சா எண்ணெய் மோகம்

கச்சா எண்ணெய் மோகம்

கச்சா எண்ணெய் எரியும் தன்மை இருப்பதை கண்ட பின்னர் உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டில் கச்சா எண்ணெய் வளம் இருப்பதற்கானன சோதனைகளை துவங்கின. சீனா, ஐரோப்பா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இதில் ஆர்வம் காட்டின.

டீசல் உற்பத்தி

டீசல் உற்பத்தி

போலந்து நாட்டில்தான் முதல்முறையாக கச்சா எண்ணெயிலிருந்து பல வித எரிபொருள்களை பிரித்தெடுக்கும் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டது. 1856ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆலையிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெய் உள்ளிட்டவை தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டன. முதலில் டீசலை ஆயில் என்றுதான் அழைத்தனர். அப்புறம் எப்படி, டீசல் என்று பெயர் வந்தது.

 பெயர் காரணம்

பெயர் காரணம்

1892ல் முதல்முறையாக டீசலில் இயங்கும் எஞ்சினை ஜெர்மனியை சேர்ந்த ரூடால்ஃப் டீசல் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பை போற்றும் வகையிலேயே, டீசல் என்று இந்த எரிபொருளுக்கு பெயரிடப்பட்டது. மேலும், டீசல் ஆயில் என்றும் அழைக்கப்படுகிறது.

பிரித்தெடுப்பு முறை

பிரித்தெடுப்பு முறை

கச்சா எண்ணெயை குறிப்பிட்ட வெப்ப நிலைகளில் வேதிம கட்டமைப்பு மாறிவிடாத வகையில் கொதியூட்டப்பட்டு பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை பிரித்தெடுக்கப்படுகின்றன. பின்னர் அவற்றின் தரம் மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. 250 - 350 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் கச்சா எண்ணெயிலிருந்து டீசல் வடிகட்டி பிரிக்கப்படுகிறது.

 ஆயில் என அழைப்பதேன்

ஆயில் என அழைப்பதேன்

பெட்ரோல், மண்ணெண்யெயைவிட டீசலில் எண்ணெய் பசை அதிகம் கொண்டது. இதன் காரணமாக பல நாடுகளில் டீசல் ஆயில் என்றே அழைக்கப்படுகிறது. மேலும், டீசல் எஞ்சின்களை ஆயில் பர்னர் என்றும் அழைப்பதை காணமுடியும்.

சாதகங்கள்

சாதகங்கள்

பெட்ரோல், மண்ணெய் போன்றவற்றைவிட அடர்த்தி அதிகம் என்பதோடு, எண்ணெய் பசை அதிகம் கொண்ட எரிபொருள் என்பதால், டீசலின் ஆவியாகும் தன்மை குறைவானது. இதனால், போக்குவரத்தின்போதும், பயன்பாட்டின்போது இழப்பு ஏற்படுவது குறைவாக இருக்கும். மிக முக்கியமாக வெடிப்புத் தன்மை குறைவு.

 அடர்த்தி அதிகம்

அடர்த்தி அதிகம்

பெட்ரோலைவிட டீசல் 18சதவீதம் கூடுதல் அடர்த்தி கொண்டது. இதற்கு காரணம் ஹைட்ரோகார்பனின் கட்டமைப்பு. டீசலில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் கார்பனின் நெருக்கமான கட்டமைப்பு காரணமாக அதிக அடர்த்திகொண்டுள்ளது. சிலவேளை, வெப்பநிலை வெகுவாக குறையும்போது டீசலில் இருக்கும் ஹைட்ரோகார்பன்கள் உறைந்து பசைத்தன்மை அதிகமாகி திட நிலையை அடையும். ஆனால், பெட்ரோலில் ஹைட்ரோகார்பன் கட்டமைப்பு நெருக்கம் குறைவு என்பதால், திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு செல்லாது. இதேபோன்று, பெட்ரோலைவிட டீசலின் எடையும் அதிகம்.

அதிக மைலேஜ்

அதிக மைலேஜ்

பெட்ரோலைவிட அதிக ஆற்றல் செறிந்திருப்பதால், டீசல் வாகனங்கள் அதிக மைலேஜை டீசல் வாகனங்கள் தருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தொழில்நுட்பங்கள் வெவ்வேறானவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை வேறோரு செய்தியில் காணலாம்.

டீசல் வகைகள்

டீசல் வகைகள்

டீசல் எரிபொருள் இரண்டுவிதமான வகைகளில் வருகிறது. டீசல் 1- D மற்றும் 2 D என்று இவை அழைக்கப்படுகிறது. பெரும்பாலான வாகன தயாரிப்பாளர்கள் 2 D வகை டீசல் எரிபொருளுக்கு தக்கவாறு எஞ்சின்களை தயாரிக்கின்றனர். 10 டிகிரி வெப்பநிலைக்கு குறைவான பகுதிகளில் வாகனங்களை வாங்குவோர், வாகன தயாரிப்பாளரின் பரிந்துரையின்படி டீசல் வகையை பயன்படுத்துவது அவசியம்.

பயோ டீசல்

பயோ டீசல்

உயிரிகள் மற்றும் தாவர மூலங்களிலிருந்து பெறப்படும் பயோ டீசல், சாதாரண டீசலைவிட குறைவான நச்சுத்தன்மை கொண்ட புகையை வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இவை குறைவான சதவீதத்தில் டீசலுடன் கலந்து பயன்படுத்தப்படுவதால், எஞ்சினில் பெரிய மாற்றங்களை செய்ய தேவையில்லை. மேலும், டீசலுடன் கலக்காமல் தனியாகவும் எரிபொருளாகா பயன்படுத்த முடியும். இதனால், தற்போது பயோ டீசல் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன. ஆனால், இவற்றின் தயாரிப்பு செலவீனம் அதிகம் என்பதே முட்டுக்கட்டையான விஷயம்.

பாதகங்கள்

பாதகங்கள்

டீசல் அடர்த்தி அதிகம் என்பதால், எரிக்கப்படும்போது எஞ்சினில் அதிக புகை படியும் என்பதால் கூடுதல் பராமரிப்பு தேவைப்படும்.

பயன்பாடு

பயன்பாடு

கனரக வாகனங்கள், கப்பல் போக்குவரத்து, தொழிற்சாலை எந்திரங்கள், மின் உற்பத்தி ஜெனரேட்டர்கள், வர்த்தக மற்றும் தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள், கட்டமைப்பு துறைகள் என டீசல் எரிபொருளின் பயன்பாடு மிக அதிகம்.

இந்தியாவில் டீசல் தரம்

இந்தியாவில் டீசல் தரம்

இந்தியாவில் மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்களை பொறுத்து, ஒவ்வொரு பகுதியிலும் டீசலின் தரம் மாறுபடுகிறது. அதனை ஸ்லைடரில் காணலாம்.

அருமருந்து

அருமருந்து

இந்தியாவில் பெட்ரோலைவிட டீசல் விலை குறைவாக இருப்பதால், டீசல் வாகனங்களுக்கு அதிக மவுசு இருக்கின்றது. மேலும், அதிக மைலேஜ் என்பதும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான புதைபடிவ எரிபொருளாக டீசல் இருந்து வருகிறது. இந்த நிலையில், புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றான புதிய எரிபொருள் வகைகளை கண்டறியும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன. அதுவரை டீசல்தான் உலகின் இயக்கத்திற்கு உயிர் கொடுக்கும் அருமருந்தாக இருக்கும்.

Most Read Articles
English summary
Ever wondered what is the difference between diesel and petrol? This article gives you a quick insight of diesel fuel, how it is made and its importance.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X