Just In
- 5 hrs ago
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- 11 hrs ago
ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர்... முழுசார்ஜில் 500 கி.மீ பயணிக்கும் கார்... ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு
- 17 hrs ago
நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்
- 18 hrs ago
ஸ்கிராட்ச் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!
Don't Miss!
- News
"உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா?" கனல் கண்ணன் கைது.. கொந்தளித்த பாஜக அண்ணாமலை
- Finance
சர்வதேச ரெசசனை இந்தியா தோற்கடிக்குமா.. ஏற்றுமதி என்னவாகும்?
- Movies
இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Lifestyle
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
விபத்து நடந்தா காசு மட்டும் கொடுத்து ஏமாறாதீங்க... என்ன செய்யனும்னு இங்க பாருங்க...
நீங்கள் சாலை விபத்தில் சிக்கிவிட்டால் முதலில் செய்ய வேண்டும், எது சட்டப்படி சரி, எது தவறு, உள்ளிட்ட பல விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சாலைகளில் விபத்துக்கள் நடப்பது சகஜம், விபத்துக்கள் நடக்காமல் இருக்கவேண்டும் என்றுதான் போக்குவரத்திற்கு என்று தனியாக விதிகள் வழங்கப்பட்டுள்ளன. சாலையில் ஒருவர் பயணிக்கும் போது அவர் என்னதான் சாலை விதிகளைப் பின்பற்றிச் சென்றாலும் எதிரில் வருபவர் சாலை விதிகளைப் பின்பற்ற வில்லை என்றால் விபத்து ஏற்பட்டு விடும்.

நாமும் இப்படியாக சில நேரங்களில் சாலைகளில் செல்லும் போது விபத்தில் சிக்கியிருப்போம். இதற்குக் காரணம் நாமாகவும் இருக்கலாம் ஆனால் மற்றவராகவும் இருக்கலாம். ஆனால் சாலையில் விபத்தில் சிக்கிவிட்டால் பயமும் பதற்றமும் நம்மைத் தொற்றிக்கொள்ளும், நமக்கும், மற்றவர்களுக்கும் காயங்கள் ஏற்படாத வரை எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் படுகாயம், அல்லது வாகனத்திற்குச் சேதம் என வந்துவிட்டால் அவ்வளவு தான் போலீஸ் கேஸ் எனப் பல விஷயங்களை நாம் சந்திக்க வேண்டியது இருக்கும். இதனாலேயே பலர் விபத்தை ஏற்படுத்திவிட்டால் அதில் அடிப்பட்டவர் பற்றி கவலைப்படாமல் அங்கிருந்து தப்பி ஓடி விடுகின்றனர். பலர் தன் மீது தப்பு இல்லை என வாதம் செய்கின்றனர். ஆனால் பலருக்கு உண்மையில் சாலையில் விபத்து நடந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என விபரம் தெரிவதில்லை . அதைத்தான் இந்த பதிவில் நாம் விளக்கமாகச் சொல்லப்போகிறோம்.

நாம் சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்திவிட்டால் முதலில் நாம் பயப்படவோ, பதற்றப்படவோ கூடாது. பயமும் பதற்றமும் தான் அடுத்தடுத்து தவறுகளைச் செய்யத் தூண்டும், அதனால் அதை முதலில் விட வேண்டும். விபத்தில் உங்களுக்கு உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால், அடுத்து உங்களுடன் பயணித்தவர்களைப் பார்க்க வேண்டும் அவர்களுக்கு ஏதேனும் அடிபட்டிருக்கிறதா இல்லையா எனப் பார்க்க வேண்டும்.

அதன்பின் நீங்கள் விபத்து ஏற்படுத்தியதில் எதிரில் வந்த வாகனம் அல்லது சாலையில் சென்ற யாரேனுக்கும் அடி பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும் யாருக்கும் அடிபடவில்லை என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மற்ற விஷயங்களைப் பற்றி எதுவும் யோசிக்காமல் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கான சிகிச்சையைத் துவங்க வேண்டும்.

அதன்பின் தான் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்துக் கவலைப்பட வேண்டும். இதில் யாருக்காவது அடிபட்டுவிட்டால் பலர் செய்யும் பெரிய தவறு அவர்களிடம் சமாதானம் பேசி காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் செலவுக்காகவும் நஷ்டஈடாகவும் பணம் கொடுத்துவிட்டு வாய் மொழியாக இது குறித்து போலீசிற்குச் செல்ல மாட்டேன் என உறுதி வாங்கிவிட்டு வந்துவிடுவார்கள்.

ஆனால் இப்படியான சம்பவங்களில் சிலர் பணத்தை வாங்கிய பின்பு ஓரிரு நாட்கள் கழித்து போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லுவார்கள். விபத்து ஏற்படுத்திய பலருக்கு இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே பிரச்சனை ஏற்படும்.

ஆனால் இது முற்றிலும் தவறான செயல் ஒருவர் விபத்து ஏற்படுத்திவிட்டால் அவர் காயமடைந்தவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு உரியச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்து, பின்னர் அவரது உறவினர்களிடம் பேசி அவர்கள் வரும் வரை காயமடைந்தவருடன் கூட இருக்கலாம். ஆனால் அவர் காயத்திற்காக விபத்து ஏற்படுத்தியவர் செலவு செய்ய வேண்டியது இல்லை.

ஆனால் காயமடைந்தவரின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அவர் பணம் கொடுக்க விரும்பினால் அதில் தவறில்லை. ஆனால் அந்த பணத்தைக் கொடுத்ததாலேயே பாதிக்கப்பட்டவர் போலீசில் இது குறித்து புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் என நினைப்பது சரி கிடையாது. போலீசில் இது தொடர்பாகப் புகாரளித்து வழக்கு தொடர அவருக்கு உரிமை இருக்கிறது.

இவ்வாறாக விபத்து ஏற்பட்டால் ஏற்படும் பொருளாதார பிரச்சனையைச் சரி செய்யவே வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசில் புகார் அளித்தால் அதன் அடிப்படையில் இன்சூரன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும்.

ஒரு வேலை வாகன ஓட்டி அதற்கான முறையான இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஒட்டினால் அவருக்குக் கொஞ்சம் சிக்கல் தான். ஆனால் இழப்பீடு குறித்து கோர்ட் முடிவு செய்யும். அதைவிட்டு வெளியில் முடிவு செய்வது கோர்ட்டிற்குள் செல்லுபடி ஆகாது. நீங்கள் கோர்ட்டிற்கு செல்லக்கூடாது எனப் பணம் கொடுத்தும் அவர் கோர்ட்டிற்கு சென்றால் கோர்ட் செல்வதைத்தான் மீண்டும் கேட்க வேண்டும்.

இது எல்லாம் விபத்தில் மனிதர்களுக்கோ, வாகனத்திற்கோ பாதிப்பு ஏற்படும் போது தான். ஒருவேளை விபத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அந்த விபத்தைப் பதிவு செய்யத் தேவையில்லை. இது குறித்து போலீசிற்குச் செல்லாமல் இரு தரப்பினரும் சமாதானம் பேசி செல்லலாம். போலீசிற்குச் சென்றால் விசாரணைக்காக இரு தரப்பினரும் தங்கள் வாகனத்தைப் போலீசில் ஒப்படைக்க வேண்டும். இதை ஆய்வு செய்து போலீஸ் மீண்டும் திரும்பத் தர சில வாரங்கள் ஆகும்.

அதனால் இது நீங்கள் சாலையில் செல்லும் போது விபத்தில் சிக்கினால் முதலில் பயத்தையும் பதற்றத்தையும் தவிருங்கள். காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை கிடைக்க உதவி செய்யுங்கள், உங்கள் வாகன ஆவணங்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள், போலீசில் இது குறித்து புகார் அளித்தால் பயப்படாமல் எதிர்கொள்ளுங்கள். நீங்கள் அதற்குப் பயந்து பணம் கெடுத்தால் உங்களுக்குத் தான் இழப்பு அதிகமாக இருக்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.