உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்கும்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

உங்கள் வாகன டயரின் ஆயுட்காலத்தை இரட்டிப்பாக்குவதற்கான வழிமுறைகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்கும்... இந்த ரகசியத்தை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

கார்களை பொறுத்தவரை முக்கியமான பாகங்களில் டயர்களும் ஒன்று. காருக்கும், சாலைக்கும் தொடர்பை ஏற்படுத்துவதே டயர்கள்தான். ஆனால் கார் வைத்திருக்கும் அனைவரும் டயர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கின்றனரா? என்றால், இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும். இதனால் டயர்கள் விரைவில் சேதமடைந்து விடுகின்றன.

உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்கும்... இந்த ரகசியத்தை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

பொதுவாக பார்த்தால், ஒரு வழக்கமான டயரின் ஆயுட்காலம் 50 ஆயிரம் கிலோ மீட்டர்கள் மட்டுமே. ஆனால் நீங்கள் மனது வைத்தால் அதனை இரட்டிப்பாக்க முடியும். அதாவது வழக்கமான டயரின் வாழ்நாளை 1 லட்சம் கிலோ மீட்டர்களாக அதிகரிக்க முடியும். பின்வரும் வழிமுறைகளை கையாண்டால், உங்கள் டயர் குறைந்தபட்சம் 1 லட்சம் கிலோ மீட்டர்களுக்கு நீடித்து உழைப்பது உறுதி.

உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்கும்... இந்த ரகசியத்தை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

வீல் அலைன்மெண்ட்

இந்தியாவை பொறுத்தவரை நீங்கள் சில ஆயிரம் கிலோ மீட்டர்கள் காரை ஓட்டினாலே, உங்கள் காரின் வீல் அலைன்மெண்ட் பாதிக்கப்படும். இந்தியாவில் உள்ள மிகவும் கரடு முரடான, மோசமான சாலைகள்தான் இதற்கு காரணம். ஆனால் வீல் அலைன்மெண்ட் என்பது ஒரு காருக்கு மிகவும் முக்கியமானது.

உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்கும்... இந்த ரகசியத்தை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

எனவே ஒவ்வொரு 5 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு ஒரு முறையும் கண்டிப்பாக வீல் அலைன்மெண்ட்டை சரிபார்த்து கொள்ளுங்கள். அத்துடன் வீல் பேலன்சிங் மற்றும் ரொட்டேஷன் ஆகியவையும் மிகவும் முக்கியமானது. உங்கள் டயர் ஆயுட்காலம் அதிகரிக்க வேண்டும் என்றால், நீங்கள் அடிக்கடி இவற்றை செய்ய வேண்டும்.

உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்கும்... இந்த ரகசியத்தை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

டயர் பிரஷர்

டயர் உற்பத்தியாளர் மற்றும் கார் உற்பத்தியாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட டயர் பிரஷரை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. காருக்கு உகந்த டயர் பிரஷரை கண்டறிவதற்காக பல்வேறு சோதனைகள் செய்யப்படுகின்றன. அதற்கு பின்புதான் டயர் பிரஷரின் அளவு வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்கும்... இந்த ரகசியத்தை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

பிரஷர் மிகவும் குறைவாக இருந்தால், டயர் விரைவாக சூடேறி வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே டயர் உற்பத்தியாளர் மற்றும் கார் உற்பத்தியாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட பிரஷரை எப்போதும் தவறாமல் பராமரிப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்கும்... இந்த ரகசியத்தை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

காரை கனிவாக ஓட்டுங்கள்

மன அழுத்தம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல. டயர்களுக்கும்தான். உயிரற்ற பொருள் என்றாலும், டயர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு கீழ்தான் வேலை செய்கின்றன. திடீரென 'சடன்' பிரேக் அடிப்பது, தாறுமாறாக ஆக்ஸலரேட்டரை மிதிப்பது போன்ற எக்குதப்பான வேலைகளை நீங்கள் செய்தால், உங்கள் கார் டயரின் ஆயுட்காலம் கணிசமாக குறைந்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்கும்... இந்த ரகசியத்தை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

எப்போதும் ஸ்பீட் லிமிட்டிற்குள் காரை ஓட்டுங்கள். அத்துடன் மிகவும் கடுமையாக ஆக்ஸலரேஷன் கொடுப்பது, பிரேக் பிடிப்பது ஆகியவற்றையும் தவிர்த்து விடுங்கள். அதாவது காரை கனிவாக ஓட்ட பழகி கொள்ளுங்கள். நீங்கள் காரை கனிவாக ஓட்டினால், வீல் அலைன்மெண்ட்டும் நீண்ட நாட்களுக்கு பாதிக்கப்படாமல் அப்படியே இருக்கும்.

உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்கும்... இந்த ரகசியத்தை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

ஓவர்லோடு

காரின் சஸ்பென்ஸன் உள்பட பல்வேறு அம்சங்களில் 'ஓவர்லோடிங்' தாக்கத்தை உண்டாக்குகிறது. ஆனால் நீங்கள் காரில் அதிக சுமையை ஏற்றினால், கடுமையாக பாதிக்கப்படுவது டயர்கள்தான். ஓவர்லோடிங் காரணமாக டயரின் ஆயுட்காலம் வெகுவாக குறைந்து விடுகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்கும்... இந்த ரகசியத்தை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

காரில் நீங்கள் அதிக சுமையை ஏற்றினால், அது சஸ்பென்ஸனுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுப்பது போலாகி விடும். அத்துடன் வீல் அலைன்மெண்ட் விரைவாகவே பாதிக்கப்பட ஓவர்லோடும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காரில் அதிக பாரத்தை எப்போதும் ஏற்றாதீர்கள்.

Most Read Articles
English summary
4 Tips To Increase Your Car Tyre Life. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X