மழை வெள்ளம் புகுந்த கார்களை அடையாளம் காண்பது எப்படி..? எளிய வழிமுறைகள்..!!

மழை வெள்ளம் புகுந்த கார்களை அடையாளம் காண்பது எப்படி..? எளிய வழிமுறைகள்..!!

By Azhagar

இந்தியாவில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் நம்மையும் நமது உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

மும்பையில் பெய்த கனமழையில் வாகனங்கள் மழைநீரில் மிதந்து சென்ற புகைப்படங்கள் வெளியானது. அப்போது தான் மும்பை மழையின் கோரத்தாண்டவம் தேசியளவில் பேசுபொருளாக மாறியது.

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

சென்னையில் கனமழை பெய்த சமயத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாடல் கார்கள் தென்னிந்தியாவின் பிற பகுதிகளுக்கு அடிமாட்டு விலையில் விற்கப்பட்டன.

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

வெள்ளதால் பாதிக்கப்பட்ட கார் என்பதை தெரியாமல் வாங்கிய வாடிக்கையாளர்கள் பலர், பின்னாளில் கார்களில் தொடர்ந்து பிரச்சனைகள் வரத்தொடங்க, அதை வைத்து பாதிப்பிற்கான காரணிகளை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

Recommended Video

2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

தற்போது மும்பையில் பெய்த கனமழை காரணமாக, அங்கும் உருவான வெள்ள நீரில் பல கார்கள் மிதந்து செல்லும் புகைப்படங்களை நாம் தினமும் பார்த்து வருகிறோம்.

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

நாளை இது நம்மிடம் 'செகெண்டு ஹேண்ட்' என்ற பெயரில் விற்பனைக்கு வரலாம். அப்போது, இது வெள்ளதால் பாதிக்கப்பட்ட கார் தான் என்பதை நீங்கள் எப்படி தெரிந்துக்கொள்வீர்கள்??

அதற்கான சில டிப்ஸுகளை தருகிறது இந்த செய்தி தொகுப்பு...

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார் என்பதை அறிந்தே நீங்கள் ஒரு மாடலை வாங்குறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

அதில் நீங்கள் கவனிக்கவேண்டிய விஷயம், என்ன என்றால்? எத்தனை கொள்ளவு வெள்ளநீர் காரில் இருந்தது என்பது தான்.

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

அந்த அளவை தெரிந்த உடன், காரில் ஏற்பட்டுள்ள சேதாரங்களும் தெரியவரும். ஆனால் காரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அதிக செலவு செய்ய வேண்டும்.

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

அதற்கு நீங்கள் தயார் என்றால், நிச்சயமாக இந்த வெள்ளதால் பாதிக்கப்பட்ட காரை வாங்கலாம். நினைவில் கொள்க அதற்கான விலை மிக மிக அதிகம்.

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

காரினுள் இருக்கும் சில பகுதிகள் ஈர பிசுபிசுப்போடும் அல்லது ஈரமான காற்றை உணரவைப்பதாக இருந்தால், அந்த கார் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி.

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

இதுபோன்ற உணர்வை நீங்கள் காரின் இருக்கை, இருக்கைகளின் டிராக்குகள், கார்பெட்டின் கீழ், பூட் பகுதிக்குள் ஆகியவற்றை தொட்டு பார்த்து அல்லது முகர்ந்து பார்த்து உணரலாம்.

முகப்பு விளக்குகள் மற்றும் காரின் பின் விளக்குகளில் படிந்து இருக்கும் ஈரத்தை வைத்துக்கூட கார் பாதிப்பை தெரிந்துக்கொள்ளலாம்.

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

மழை வெள்ளம் காரினுள் புகுந்தால் முக்கியமாக இருக்கைகள் தான் பெரிய பாதிப்புகளை சந்திக்கும். லெதர் பாலிஷ், ஃபபரிக் ஃபிரெஷ்னர் என பலவற்றை பயன்படுத்தினாலும், எதுவும் பயன் தராது.

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார் என்பதை மறைத்து காருக்குள் பல பூச்சு வேலைகள் நடைபெற்றிருக்கும்.

ஆனால் அவை எவையும் சரியான நேரத்தில் பயன்தாராது. எதாவது இடத்தில் பாதிக்கப்பட்ட சிறிய சிறிய பகுதிகள் இருக்கத்தான் செய்யும்.

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

பெரும்பாலும் இரும்புகள் கொண்டு தயாராவதால், மழை நீர் பட்ட உடனேயே அது துரு பிடித்துவிடும். பூச்சு வேலையே செய்திருந்தாலும், இதை எளிதாக நாம் கண்டுபிடித்து விடலாம்.

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

டாஷ் போர்டுகள் தான் பாதிக்கப்பட்ட இடத்தை சாரியாக காட்டக்கூடிய பகுதிகள். ஏதாவது வயரிங் விடுபடுவது அல்லது ஈர்த்தன்மை போன்ற பிரச்சனைகளை டாஷ் போர்ட்டில் எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.

மேற்கூரிய அனைத்து பாதிப்புகளுமே எளிதில் சரி செய்யக்கூடியவை தான். ஆனால் வெள்ள நீரால் எஞ்சின் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் அங்கு தான் நாம் கவனித்து செயல்பட வேண்டும்.

மழைக்காலங்களில் பழைய கார்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை!

அடிக்கடி எஞ்சின் அனைவது, ஆரம்ப கட்டத்தில் முக்குவது போன்ற பல பிரச்சனைகளை வெள்ள நீர் உள்புகுந்த எஞ்சின்களில் காணலாம்.

இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பது என உங்களுக்கு தெரிவிப்பதற்கான தகவல்கள் தான் இவை. இவற்றையும் தாண்டி சமயோஜித புத்தி நம்மை எப்போதும் கைவிடாது.

Most Read Articles
மேலும்... #டிப்ஸ் #tips
English summary
Read in Tamil: Top Tips How to Spot Hidden Flood Damage In Used Car Market. Click for Details....
Story first published: Saturday, September 2, 2017, 11:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X