3 செகண்ட் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் இருக்கணும்! சுரங்க பாதையில் போகும்போது தப்பி தவறி கூட இதை எல்லாம் செஞ்சராதீங்க!

சுரங்க பாதையில் பாதுகாப்பாக கார் ஓட்டுவது எப்படி? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

3 செகண்ட் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் இருக்கணும்! சுரங்க பாதையில் போகும்போது தப்பி தவறி கூட இதை எல்லாம் செஞ்சராதீங்க!

கட்டிட பொறியியல் நமக்கு வழங்கியிருக்கும் ஆச்சரியங்களில் ஒன்று சுரங்க பாதைகள். இந்தியாவில் உள்ள அடல் சுரங்க பாதை உலகின் கவனத்தை கவர்ந்துள்ளது. சுரங்க பாதைகளில் கார் ஓட்டுவது உற்சாகமான அனுபவத்தை தரும். ஆனால் அங்கு விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே சுரங்க பாதைகளில் பாதுகாப்பாக கார் ஓட்டுவது எப்படி? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

3 செகண்ட் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் இருக்கணும்! சுரங்க பாதையில் போகும்போது தப்பி தவறி கூட இதை எல்லாம் செஞ்சராதீங்க!

ஹெட்லைட்களை ஆன் செய்து கொள்ளுங்கள்!

சுரங்க பாதைக்குள் நுழையும்போது, உங்கள் காரின் ஹெட்லைட்கள் ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வெளிச்சம் எந்த அளவிற்கு இருந்தாலும் சரி, எக்காரணத்தை கொண்டும் ஹெட்லைட்களை ஆஃப் செய்து விடாதீர்கள். எதிரே வரும் வாகனங்கள், உங்கள் வாகனம் வருவதை உணர்ந்து கொண்டு, அதற்கு ஏற்ப செயல்படுவதற்கு இது உதவி செய்யும். இது சிம்பிளான ஒரு விஷயம்தான்.

3 செகண்ட் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் இருக்கணும்! சுரங்க பாதையில் போகும்போது தப்பி தவறி கூட இதை எல்லாம் செஞ்சராதீங்க!

மற்ற வாகனங்களுடன் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடியுங்கள்!

சுரங்க பாதைகளில் முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனத்துடன் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது. முன்னால் உள்ள வாகனத்துடன் நீங்கள் குறைந்தபட்சம் 3 வினாடிகள் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸை பராமரிப்பது அவசியம். குறிப்பாக சம்பந்தப்பட்ட சுரங்க பாதையில் நீங்கள் முதல் முறையாக கார் ஓட்டுகிறீர்கள் என்றால், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

3 செகண்ட் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் இருக்கணும்! சுரங்க பாதையில் போகும்போது தப்பி தவறி கூட இதை எல்லாம் செஞ்சராதீங்க!

ஏனெனில் அங்கு இருக்கும் வளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியாது. எனவே சுரங்க பாதைகளில் மற்ற வாகனங்களை பின் தொடரும்போது மிகுந்த கவனத்துடன் இருங்கள். முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தால், நீங்கள் அதன் மீது மோதி விடாமல், உங்கள் காரை பாதுகாப்பாக நிறுத்தும் நிலையில் இருக்க வேண்டும்.

3 செகண்ட் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் இருக்கணும்! சுரங்க பாதையில் போகும்போது தப்பி தவறி கூட இதை எல்லாம் செஞ்சராதீங்க!

சடன் பிரேக் அடிப்பதை நிறுத்தி விடுங்கள்!

ஓகே. உங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனத்துடன் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடித்து கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு பின்னால் வந்து கொண்டிருக்கும் வாகனத்தின் டிரைவருக்கும் இது பொருந்தும் அல்லவா? ஆம், பொருந்தும். அவர்களும் உங்கள் காருடன் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

3 செகண்ட் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் இருக்கணும்! சுரங்க பாதையில் போகும்போது தப்பி தவறி கூட இதை எல்லாம் செஞ்சராதீங்க!

ஆனால் அவர்கள் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடித்து கொண்டுள்ளார்களா? என்பது உங்களுக்கு தெரியாது. எனவே திடீரென பிரேக் பிடிக்காதீர்கள் என்பதுதான் நாங்கள் உங்களுக்கு சொல்லும் அறிவுரை. உங்கள் பின்னால் வந்து கொண்டிருக்கும் வாகனம், பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காவிட்டால், நீங்கள் திடீரென பிரேக் பிடிக்கும்போது விபத்து ஏற்படலாம்.

3 செகண்ட் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் இருக்கணும்! சுரங்க பாதையில் போகும்போது தப்பி தவறி கூட இதை எல்லாம் செஞ்சராதீங்க!

தேவையில்லாமல் லேன் மாற வேண்டாம்!

சுரங்க பாதைகளில் முடிந்த வரை ஒரே லேனில் பயணம் செய்ய வேண்டும். தேவையில்லாமல் லேன் மாறி கொண்டிருக்க கூடாது. அதிலும் குறிப்பாக ஒரு சிலர் வேடிக்கைக்காக லேன் மாறி கொண்டே இருப்பார்கள். எக்காரணத்தை கொண்டும் இதனை செய்யாதீர்கள். இதையெல்லாம் நீங்கள் வழக்கமான சாலையிலும் கடைபிடிக்க வேண்டும்தான். ஆனால் சுரங்க பாதைகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

3 செகண்ட் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் இருக்கணும்! சுரங்க பாதையில் போகும்போது தப்பி தவறி கூட இதை எல்லாம் செஞ்சராதீங்க!

ஒருவேளை நீங்கள் லேன் மாற வேண்டியிருந்தால், அதனை முன் கூட்டியே மற்ற வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்க வேண்டும். லேன் மாறவிருப்பதை டர்ன் இன்டிகேட்டர்கள் மூலம் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். எனினும் சுரங்க பாதைகளில் கூடுமான வரையில் லேன் மாறாமல் கார் ஓட்டுவது சிறந்தது.

3 செகண்ட் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் இருக்கணும்! சுரங்க பாதையில் போகும்போது தப்பி தவறி கூட இதை எல்லாம் செஞ்சராதீங்க!

குறைவான எரிபொருளுடன் கார் ஓட்டாதீர்கள்!

நீங்கள் சுரங்க பாதையில் கார் ஓட்ட போகிறீர்கள் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியும் அல்லவா? எனவே குறைந்தபட்சம் அரை டேங்க் அளவிற்காவது எரிபொருள் வைத்து கொள்ளுங்கள். ஏனெனில் சுரங்க பாதைகளுக்குள் பெட்ரோல் பங்க்குகள் இருக்காது. குறிப்பாக காரில் எரிபொருள் குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கை விளக்கு ஒளிரும் நிலையில், நீளமான சுரங்க பாதைகளுக்குள் நுழைவது தவறான விஷயம்.

3 செகண்ட் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் இருக்கணும்! சுரங்க பாதையில் போகும்போது தப்பி தவறி கூட இதை எல்லாம் செஞ்சராதீங்க!

காரை நிறுத்தாதீர்கள்!

நாங்கள் ஆரம்பத்திலேயே சொன்னபடி சுரங்க பாதையில் கார் ஓட்டுவது உற்சாகமாக இருக்கும். சுரங்க பாதைகளில் பயணிக்கும் பலர் காரை நிறுத்தி விட்டு செல்ஃபி எடுக்கின்றனர். இப்படி செய்யாதீர்கள். சுரங்க பாதைகளில் காரை பார்க்கிங் செய்யவோ, நிறுத்தவோ கூடாது. வேறு வழியே இல்லை என்னும் சூழல்களில் மட்டும்தான் காரை நிறுத்த வேண்டும்.

3 செகண்ட் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் இருக்கணும்! சுரங்க பாதையில் போகும்போது தப்பி தவறி கூட இதை எல்லாம் செஞ்சராதீங்க!

சுரங்க பாதைகளின் விதிமுறைகளை பின்பற்றுங்கள்!

சுரங்க பாதைகளில் பின்பற்றுவதற்கு என குறிப்பிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கும். அவற்றை தவறாமல் கடைபிடியுங்கள். சுரங்க பாதைகளில் நிறைய குறியீடுகள் வைக்கப்பட்டிருக்கும். அதனை பின்பற்றுங்கள். குறிப்பாக சுரங்க பாதைகளில் வேக கட்டுப்பாட்டு குறியீடுகள் நிறைய இருக்கும். அந்த வேகத்தில் மட்டும் பயணம் செய்யுங்கள்.

Most Read Articles
English summary
Tunnel driving tips for your safety
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X