உங்க காரின் பிரேக் பல வருஷத்துக்கு உழைக்கும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உங்கள் கார் பிரேக்கின் ஆயுட்காலத்தை பல மடங்கு உயர்த்துவதற்கான எளிய வழிமுறைகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

உங்க காரின் பிரேக் பல வருஷத்துக்கு உழைக்கும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

காரில் பயணம் செய்யும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பு என்று வந்து விட்டால், காரின் பிரேக் சிஸ்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே பிரேக் சிஸ்டத்தை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். ஒரு சில சுலபமான வழிமுறைகள் மூலம் பிரேக் சிஸ்டத்தின் ஆயுட்காலத்தை நம்மால் எளிதாக நீட்டிக்க முடியும். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்க காரின் பிரேக் பல வருஷத்துக்கு உழைக்கும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பிரேக் பிடிப்பதற்கு முன் காரை மெதுவாக ஓட்டுங்கள்!

கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பிரேக் பிடித்தால், அவை சேதமடையும். இயக்க ஆற்றல் அதிகமாக இருக்கும்போது, தேய்மானமும் அதிகரிக்கும் என்பதுதான் இதற்கு பின்னால் உள்ள எளிமையான காரணம். பிரேக்கிங் செயல்முறையில் உருவாகும் வெப்பத்தை பிரேக் பேடுகள் உறிஞ்சுவதால் இது நிகழ்கிறது.

உங்க காரின் பிரேக் பல வருஷத்துக்கு உழைக்கும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

எனவே நீங்கள் குறைவான வேகத்தில் பிரேக் பிடிக்கும்போது, குறைவான வெப்பமே உருவாகும். இதன் விளைவாக தேய்மானமும் குறைவான அளவிலேயே ஏற்படும். இதனை நீங்கள் பின்பற்றினால் பிரேக்கை அடிக்கடி மாற்ற வேண்டிய தேவை ஏற்படாது. குறைவான வேகத்தில் பயணிப்பதால் சிறப்பான மைலேஜ் கிடைக்கும்.

உங்க காரின் பிரேக் பல வருஷத்துக்கு உழைக்கும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

சாலை விபத்துக்களில் இருந்தும் இது உங்களை காப்பாற்றும். அத்துடன் பிரேக் பேடுகள் வேகமாக தேய்மானம் அடைவதில் இருந்தும் இது பாதுகாப்பை வழங்கும். எனவே எப்போதும் சரியான வேகத்தில் பயணம் செய்யுங்கள். அவசர சூழல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமென்றால், எங்கு செல்வதாக இருந்தாலும் முன்கூட்டியே கிளம்பி விடுங்கள்.

உங்க காரின் பிரேக் பல வருஷத்துக்கு உழைக்கும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பிரேக் ப்ளூயிட்டை (Brake Fluid) அவ்வப்போது மாற்றுங்கள்!

தண்ணீரை ஈர்க்கும் தன்மை பிரேக் ப்ளூயிட்டிற்கு உண்டு. இந்த ஈரப்பதம் உட்புற அரிப்பிற்கு வழிவகுக்கும். அத்துடன் இது ரப்பர் சீல்களை அழித்து விடும். மேலும் மீண்டும் மீண்டும் பிரேக் பிடிக்கும்போது இந்த ஈரப்பதம் கொதித்து, பிரேக்கிங் செயல்திறனை குறைத்து விடும். எனவே பரிந்துரை செய்யப்பட்ட கால இடைவெளிகளில் பிரேக் ப்ளூயிட்களை மாற்றி விடுங்கள்.

உங்க காரின் பிரேக் பல வருஷத்துக்கு உழைக்கும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதன் மூலம் பிரேக் சிஸ்டத்தின் உட்புற பாகங்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும். அத்துடன் பிரேக்கிங் சிஸ்டத்தின் செயல்திறனும் மேம்படும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பிரேக் ப்ளூயிட்டை மாற்றி விடுங்கள். சிறிய அலட்சியம் கூட மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால், இந்த விஷயத்தை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

உங்க காரின் பிரேக் பல வருஷத்துக்கு உழைக்கும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

வலது காலில் பிரேக்கை அப்ளை செய்யுங்கள்!

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கார்களை ஓட்டுபவர்களிடம் பொதுவாக ஒரு பழக்கம் இருக்கிறது. இடது கால் மூலம் பிரேக்கை லேசாக அழுத்தி கொண்டே இருப்பதுதான் அந்த பழக்கம். உங்கள் பிரேக் சிஸ்டம் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்க வேண்டுமென்றால், இந்த பழக்கத்தை விட்டு விடுங்கள். எப்போதும் வலது கால் மூலமாகவே பிரேக்கை அப்ளை செய்ய வேண்டும். அதுவும் தேவைப்படும் சமயங்களில் மட்டும்தான்.

உங்க காரின் பிரேக் பல வருஷத்துக்கு உழைக்கும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

காரில் சுமையை ஏற்றாதீர்கள்!

காரில் தேவையில்லாமல் சுமையை ஏற்றாதீர்கள். காரின் எடை அதிகமாக இருந்தால், பிரேக்குகளின் செயல்பாடு மட்டுமின்றி, டயர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே காரில் தேவையற்ற பொருட்கள் இருந்தால், குறிப்பாக எடை அதிகமான பொருட்கள் இருந்தால் அதனை எடுத்து விடுங்கள். இதன் மூலம் பிரேக்குகளின் செயல்பாடு மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக காரின் செயல்திறனும் அதிகரிக்கும்.

உங்க காரின் பிரேக் பல வருஷத்துக்கு உழைக்கும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பிரேக்குகளை கவனமாக தேர்வு செய்யுங்கள்!

விலை குறைவான மற்றும் தரமில்லாத பிரேக்குகள் விரைவாகவே தேய்மானம் அடைந்து விடும். எனவே பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் உங்கள் தேவையை பூர்த்தி செய்ய கூடிய பிரேக்குகளை கவனமாக தேர்ந்தெடுங்கள். அத்துடன் அவை தேய்மானம் அடைந்தவுடன் உடனடியாக மாற்றி விடுவதும் மிகவும் முக்கியமானது.

உங்க காரின் பிரேக் பல வருஷத்துக்கு உழைக்கும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

கார் பாகங்களில் பிரேக்குகள் மிகவும் முக்கியமானவை. எனவே அவற்றை முறையாக பராமரிப்பது அவசியம். இல்லாவிட்டால் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே பிரேக்குகளை பராமரிக்கும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். இதன் மூலம் தேவையில்லாத செலவுகளையும் நீங்கள் தவிர்க்கலாம்.

உங்க காரின் பிரேக் பல வருஷத்துக்கு உழைக்கும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பிரேக்குகள் மட்டுமின்றி, டயர் போன்ற பாகங்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்குங்கள். காரை குறிப்பிட்ட இடைவெளிகளில் சர்வீஸ் செய்வதன் மூலம் தேவையில்லாமல் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்த்து விட முடியும். எனவே கார் உற்பத்தி நிறுவனங்கள்/அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் பரிந்துரைக்கும் கால இடைவெளிகளில் காரை சர்வீஸ் செய்யுங்கள்.

Most Read Articles
English summary
Useful tips to improve car brake life
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X