என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

நீங்கள் காரில் பயணிக்கும் போது ஏசி போட்டு காரில் பயணித்தால் மைலேஜ் குறையும் என பலர் சொல்லுவார்கள் இது உண்மையா? இப்படி நடக்க வாய்ப்பு உள்ளதா? முழு விபரங்களை காணலாம் வாருங்கள்

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

இன்று கார் வைத்திருக்கும் பலருக்கும் இருக்கும் பிரச்சனை என்பது அவர்களது காரின் மைலேஜை கணக்கிடுவது தான். ஒரு முறை நீங்கள் மைலேஜை கணக்கிட்டு அடுத்த முறை பார்த்தால் அதை விடக் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ கிடைக்கும். இது குறித்து நீங்கள் மெக்கானிக் அல்லது அனுபவம் வாய்ந்த நபரிடம் கேட்டால் நீங்கள் வாகனத்தில் ஏசியை பயன்படுத்தும் முறைக்கு ஏற்ப காரின் மைலேஜ் மாறும் எனச் சொல்லுவார்கள்.

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

சிலர் காரில் ஏசி போடவில்லை என்றால் ஜன்னல் திறந்துவிடுவதால் காரின் ஏரோ டைனமிக்ஸ் மாறுபட்டு காரின் மைலேஜ் குறையும் எனச் சொல்லுவார்கள். இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கிறது. காரில் ஏசிப் பயன்படுத்துவதால் உண்மையிலேயே காரின் மைலேஜ் குறையுமா? இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என்றால் நீங்கள் முதலில் காரில் ஏசி எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

ஏசி என்பது காருக்குள் இருக்கும் வெப்பத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும் ஒரு கருவி என்பது நாம் எல்லோருக்கும் தெரியும் இந்த ஏசி இயங்க காரில் ஏசி கம்பிரஷர், ஏசி கண்டென்சர், ரிசீவர் டிரையர், எக்ஸ்பேன்சன் வால்வு, எவாப்ரேட்டர் ஆகிய பாகங்கள் உள்ளன. இதை வைத்துத் தான் ஏசி முழுமையாக வேலை செய்கிறது. இது பாகங்கள் வழியாக refrigerant கேஸை சுழற்றி செய்ய வைத்து ஏசியை வேலை செய்ய வைக்கிறது.

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

ஏசி கம்பிரஷர் தான் ஏசியின் முதல் பாகம் இது காரின் இன்ஜினிற்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது. இதில் காரின் இன்ஜின் சுற்றும் போது கம்பிரஷரின் இன்ஜினும் சேர்ந்து சுற்றும், இதன் மூலம் ஏசி முழுமையாக இயங்கும். அடுத்தாக இருக்கும் பாகம் ஏசி கண்டென்சர், இது காரின் முகப்பு பகுதியில் ரேடியேட்டர் போல அமைக்கப்பட்டிருக்கும். சில கார்களில் கீழ்ப் பகுதியிலும் இது அமைக்கப்பட்டிருக்கும்.

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

அடுத்ததாக எக்ஸ்பேன்ஷன் வால்வு, இதைத் தொடர்ந்து எவாபரேட்டர் பகுதி இருக்கும். இது பொதுவாக காரின் டேஷ்போர்டு பகுதியில் இருக்கும். இந்த இடத்தில் தான் காருக்குள் இருக்கும் வெப்பத்தின் அளவை கணக்கிடும் கருவியும் கொடுக்கப்பட்டிருக்கும். இப்பொழுது ஒவ்வொரு பாகமும் எப்படி வேலை செய்கிறது எனக் காணலாம்.

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

ஏசி கம்பிரஷரை பொருத்தவரை refrigerant கேஸை அழுத்தம் கொடுத்துத் தள்ள முயற்சி செய்யும் போது இப்படியாக அழுத்தம் ஏற்படும் போது அதிகமான வெப்ப மாற்றம் ஏற்படும். இப்படியாக அழுத்தமாகி வரும் கேஸை கண்டென்ஷர் தண்ணீர் வடிவமாக மாற்றும். அடுத்தாக இது ரிசீவர் டிரையருக்குள் செல்லும் அங்கு இது சுத்திகரிப்பு செய்யப்பட்டு தேவையில்லாத விஷயங்கள் வெளியேறும் பணியையும் செய்கிறது.

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

எக்ஸ்பேன்ஷன் வால்வைப் பொறுத்தவரை அதிக பிரஷரில் வரும் கேஸை குறைந்த பிரஷருக்கு மாற்றுகிறது. அடுத்தாக இறுதி கட்டமாக இது எவபரேட்டருக்கு செல்கிறது. . இதில் லிக்யூடாக இருப்பது கேஸாக மாறுகிறது. இதான் மூலம் இது குளிர்விக்கிறது. எப்படி மனிதர்கள் வெளியில் அழைத்துவிட்டு வந்தால் வியர்வை ஏற்படுகிறதோ அதே போல இந்த ஏசியும் செயல்படுகிறது. இந்த குளிர்ந்த காற்று புளோயர் மூலம் காருக்குள் செலுத்தப்படுகிறது. இதனால் காருக்குள் குளிர்ந்த காற்று வீசுகிறது.

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

இதன் மூலம் நமக்கு என்ன தெரிகிறது என்றால் ஏசியின் கம்பிரஷர் நேரடியாக இன்ஜின் உடன் இணைக்கப்பட்டிருக்கும் என்பதால் இன்ஜின் செயல்பாட்டை ஏசி பயன்பாடு நேரடியாகப் பாதிக்கிறது என்பது உண்மை தான் ஆனால் மைலேஜில் வித்தியாசம் தருமா என்றால் நாம் ஏசி இல்லாமல் ஜன்னல் திறந்துவிடுவதால் ஏற்படும் மைலேஜ் மாற்றத்தைக் கணக்கிட வேண்டும். அதைப் பற்றி விரிவாகக் காணலாம்

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

நீங்கள் காரில் செல்லும் போது ஏசிப் பயன்படுத்தவில்லை என்றால் காரின் ஜன்னல் கண்ணாடிகளைத் திறந்து விட வேண்டியது இருக்கும். இப்படியாகச் செய்வதால் காருக்குள் வெளியிலிருந்து காற்று வரும். இது காரின் ஏரோடைமிக்ஸை பாதித்து காரின் வேகத்தைக் குறைக்கும். காற்று வருவதால் காருக்குள் அழுத்தம் அதிகமாக இன்ஜின் இன்னும் அதிகம் மெனக்கெட வேண்டியது இருக்கும். இதனால் மைலேஜ் குறையும். இப்பொழுது நாம் ஏசிப் பயன்படுத்துவதால் அதிக மைலேஜ் குறையுமா? அல்லது ஜன்னலை திறந்தால் அதிக மைலேஜ் குறையுமா எனக் கணக்கிட வேண்டும்.

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

இதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் காரின் ஏரோடைனமிக்ஸ் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக கார்களை டிசைன் செய்யப்படும் போது அது ஜன்னல் மூடிய நிலையில் இருக்கும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. கார் வேகமாகச் செல்கிறது. என்றால் காற்று காரின் வடிவமைப்பிற்கு ஏற்ப காற்று செல்லும், ஜன்னல் திறந்திருந்தால் காருக்குள் காற்று செல்லும், இது கார் வேகமாகச் செல்லும் போது ஏற்படக்கூடியது.

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

கார் வேகமாகச் செல்லும் போது எதிர்க் காற்றைக் கிழித்துக்கொண்டு வாகனம் எப்படிச் செல்கிறது என்பது தான் ஏரோ டைனமிக்ஸ், இது ரேஸ் கார்களில் மிக முக்கியமாகப் பார்க்கப்படும். ஆனால் சாதாரண கார்களில் வேகமாக அல்லது நீண்ட நேரம் பயணிக்கும் போது இது காரின் மைலேஜில் பெரும் மாற்றத்தை ஏற்படும். சிறப்பான மைலேஜ் கிடைக்க வேண்டும் என்றால் ஏரோ டைமிக்ஸை பொருத்தவரை காரின் ஜன்னல் கதவுகளை மூடியே தான் வைத்திருக்க வேண்டும். திறந்து வைத்தால் காற்று காருக்கு வந்து காரின் மைலேஜை பாதிக்கும்.

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

இந்த இரண்டில் எது சிறப்பான மைலேஜை தருகிறது. என்று ஒப்பிட்டுப் பார்த்து பலர் டெஸ்ட் செய்து சமூகவலைத்தளங்களில் வீடியோவைக்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி காரின் ஏசியை ஆஃப் செய்துவிட்டு ஜன்னலை திறந்து பயணிப்பதை விட, ஜன்னலை மூடிவிட்டு ஏசியை ஆன் செய்து பயணிப்பது தான் உண்மையில் சிறப்பானை மைலேஜை தரும். ஆனால் இது நீண்ட நேர பயணம் மற்றும் வேகமான பயணத்திலேயே சாத்தியம்.

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

குறைந்த வேகம், மற்றும் சிறிய நேரப் பயணத்தில் இது பெரிய மாற்றத்தைத் தராது. அதனால் நாம் முதலில் கேட்ட கேள்வியான காரின் ஏசியை பயன்படுத்தினால் மைலேஜ் குறையுமா என்றால் அதற்குப் பதில் கட்டாயம் குறையும் என்பது தான்.

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

ஆனால் ஏசியைபயன்படுத்தால் ஜன்னலை இறக்கிவிட்டால் அதை விட ஜன்னலை ஏற்றிவிட்டு ஏசிப் போட்டுப் பயணிப்பதில் சிறப்பான மைலேஜை தரும். ஒருவேளை உங்களால் ஜன்னலையும் ஏற்றிவிட்டு ஏசியையும் பயன்படுத்தாமல் பயணிக்கமுடிந்தால் அப்பொழுது காரின் மைலேஜ் இருப்பதிலேயே உச்சமாக இருக்கும். ஆனால் அது சாத்தியமில்லை.

என்னங்க சொல்றீங்க இது புரளியா? காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையாதா? எப்படி இது சாத்தியம்...

மொத்தத்தில் நீங்கள் காரில் நீண்ட தூரம் பயணம் செய்யப்போகிறீர்கள் என்றால் ஏசியை போட்டு பயணிப்பது தான் சிறந்தது. இதுவே நீங்கள் ஊருக்குள் குறைந்த வேகத்தில் பயணிக்கிறீர்கள் என்றால் ஏசி இல்லாமல் பயணிக்கலாம். ஆனால் காருக்குள் தூசிகள் வரும் பிரச்சனை இருக்கிறது அதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

Most Read Articles
English summary
Using Car AC will Affect the Mileage of the car know actual technology
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X