நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம்... இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது!

புதிய கார்களில் சேஃப்ட்க்காக ADAS தொழிற்நுட்பம் கொடுக்கப்படுகிறது. அப்படி என்றால் என்ன? அதனால் காருக்கு என்ன புரோஜனம்? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

சமீபகாலமாக உயர் ரக கார்களில் ADAS என்ற பாதுகாப்பு அம்சம் இருக்கிறது. குறிப்பாக அதிக விலைகொண்ட கார்களில் இது ஒரு முக்கிய அம்சமாகக் குறிப்பாக விலையுயர்ந்த கார்களில் இது குறிப்பிடப்படுகிறது. ADAS என்றால் என்ன? அதனால் காருக்கு என்ன பயன்? இது எப்படிச் செயல்படுகிறது? எதிர்காலத்தில் இது எப்படி வளர்ச்சி பெரும் போன்ற பல விஷயங்களை இந்த பதிவில் காணப்போகிறோம்.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

ADAS என்றால் என்ன?

ADAS என்பதற்கு விரிவாக்கம் Advanced driver-assistance systems என்பதாகும். இது கார்களில் வழங்கப்படும் ஒரு தொழிற்நுட்ப அம்சமாகும். கார்களின் பாதுகாப்பு அம்சங்களுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பமானது பல்வேறு தொழிற்நுட்பங்களை வைத்த வடிவமைக்கப்படும் டிசைனின் ஒட்டு மொத்த பெயர் என குறிப்பிடலாம்.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

இது சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது அது காப்பாக செல்லவும், விபத்து ஏற்படும் முன் கண்டறிந்து அதை மற்ற தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி விபத்தைத் தடுக்கவும், அல்லது ஓட்டுநரை எச்சரிக்கவும், மீறி விபத்து நடந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு சிஸ்டம் தான் இந்த ADAS.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

இந்த சிஸ்டம் எல்லா வாகனங்களில் இருப்பதில்லை. பல வாகனங்களில் இது பில்டு இன்னாக வருகிறது. பல வாகனங்களில் இந்த சிஸ்டமில் இருக்கும் சில அம்சங்கள் மட்டும் வருகிறது. இந்த சிஸ்டம் இல்லாத வாகனங்களில் வானங்களை வாங்கிய பின்பு வெளியில் இந்த சிஸ்டத்தின் படி பாதுகாப்பு அம்சங்கள் இயங்கும்படி கஸ்டமைஸ்டு செய்து கொள்ளலாம்.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

ADAS-ன் கீழ் வரும் வாகனத்தின் பாதுகாப்பு அம்சங்கள் பின் வருமாறு:

1. அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்

2. கிளார்-ஃப்ரீ ஹைபீம் பிக்சல் லைட்

3. ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்

4. அடாப்டிவ் லைட் கண்ட்ரோல்

5. ஃபார்வேர்டு கேலிஷன் வார்னிங்,

6.ஹைபீம் சேப்டி சிஸ்டம்

7. ஆட்டோமெட்டிக் பார்க் சிஸ்டம்

8. ஆட்டோ மெட்டிக் வாலெட் பார்க்கிங்

9. நேவிகேஷன் சிஸ்டம்

10. நைட் விஷன்

11. பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங்

12. ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங்

13. கிராஸ் விண்ட் ஸ்டெபிளைசேஷன்

14. டிரைவர் மானிட்டரிங் சிஸ்டம்

15. 5G and V2X

16. லேன் டிப்பார்ச்சர் வார்னிங்

17. டிராபிக் சிக்னல் ரெகனேஷன்

18. டிராக்ஷன் கண்ட்ரோல்

ஆகிய தொழிற்நுட்பங்கள் இந்த ADASல் பயன்படுத்தப்படும்.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

எதிர்காலத்தில் ADAS

இந்த ADAS தொழிற்நுட்பம் தற்போது ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. எதிர்காலத்தில் இந்த தொழிற்நுட்பம் V2V, V2I or V2X ஆகிய தொழிற்நுட்பங்களை உட்புகுத்திச் செயல்படவுள்ளது. இந்த V2X தொழிற்நுட்பம் என்பது எதிர்காலத்தில் கார்கள் விபத்துக்களில் சிக்காமல் ஒரு வாகனம் அருகில் உள்ள மற்ற வாகனங்களைக் கண்காணித்து அந்த வாகனங்களுடன் தொடர்பு கொண்டு விபத்து நடக்காமல் வாகனத்தை ஓட்டிச் செல்ல வழி வகுக்கும்.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

தற்போது நடக்கும் பெரும்பாலான விபத்துக்கள் மனித தவறுகளால் நிகழ்வதாகும். இப்படிப்பட்ட தவறுகளை தொழிற்நுட்ப வசதியுடன் தடுப்பது தான் இந்த V2X தொழிற்நுட்பத்தின் வேலை. இந்த தொழிற்நுட்பம் தற்போது சோதனை கட்டத்திலேயே இருக்கிறது. இந்த தொழினுட்பத்தைச் செயல்படுத்துவது எப்படி? இதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் உள்ள நடைமுறை சிக்கல் என்ன? என ஆய்வுகள் நடந்து வருகிறது.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

சிலருக்கு இந்த தொழிற்நுட்பம் குறித்து இன்னும் குழப்பம் இருக்கலாம். இந்த வசதிகள் எல்லாம் தான் தனித்தனியாக இருக்கிறதே அப்புறம் ஏன் இப்படி தொழிற்நுட்பம் இது என்ன செய்யும் என்ற சந்தேகம் வரும். ஆனால் தனித்தனியாக இருக்கும் கருவிகளை வைத்து அது தரும் சிக்னல்களை இது கணக்கிட்டு மற்ற தொழிற்நுட்பத்திற்கு சிக்னல் தரும் இதன் பயன் தற்போது பெரிய அளவில் இல்லை என்றாலும் வரும்காலத்தில் இந்த தொழிற்நுட்பம் எல்லா வாகனங்களுக்கும் கட்டாயமாக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

ADAS லெவல்கள்

ஒரு வாகனத்தின் ADAS என்பது மொத்தம் 0-5 என மொத்தம் 6 லெவல்களில் இருக்கிறது. இதில் 0 என்பது ADAS என்பதே அந்த வாகனத்தில் இல்லை என்பதை குறிக்கிறது. இதில் ஒவ்வொரு விஷயத்தையும் டிரைவர் தான் மேனுவலாக செய்து கொள்ள வேண்டும் தானியங்கியாக எதுவும் நடக்கிறது அடுத்தாக லெவல் 1 என்பது இந்த வாகனத்தில் ஒரே ஒரு ஆட்டோமேட்டட் சிஸ்டம் இருக்கும். உதாரணமாக வாகனத்தின் வேகம் க்ரூஸ் கண்டரோலால் மானிட்டர் செய்யப்படும்.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

அடுத்ததாக லெவல் 2 இது பார்ஷியல் ஆட்டோமேஷன் இந்த லெவலில் உள்ள வாகனத்தில் ஸ்டியரிங் மற்றம் ஆக்ஸிலரேஷன் ஆகிய இரண்டும் ஆட்டோமேஷன் முறையில் செயல்படும். ஆனால் டிரைவர் கட்டாயம் நடப்பதை மானிட்டர் செய்ய வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் கண்டரோலை எடுத்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

லெவல் 3 என்பது கண்டிஷனல் ஆட்டோமேஷன் இந்த லெவலில் உள்ள காருக்கு சுற்றுச்சூழல்களை உணரும் திறன் இருகு்கும். பெரும்பாலான டிரைவிங் டாஸ்க்களை இந்த சிஸ்டம் செய்துவிடும். இருந்தாலும் டிரைவர் இதில் கட்டாயம் கவனமாக இருக்க வேண்டும். லெவல் 4 என்பது ஹை ஆட்டோமேஷன் இது எல்லா டிரைவிங் டாஸ்க்களையும் தானாகச் செய்யும். ஆனால் குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே பயணிக்கும். இதிலும் மனிதர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் கண்டரோலை எடுத்துக்கொள்ளும் ஆப்ஷன் இருக்கிறது.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

லெவல் 5 என்பது தான் வாகனம் தானாகவே ஓடிக்கொள்ளும் திறன் கொண்டது. இதில் வாகனத்தில் டிரைவர் இருக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. வாகனம் தானாக இயங்கும். ஆனால் இப்படியான வாகனம் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்த லெவல்களில் 0-2 வரையிலான லெவல்கள் மனிதர்கள் தான் காரின் சுற்றுப்புறத்தைப் பார்த்துச் செயல்படவேண்டும். 3-5 லெவல்கள் சுற்றுப்புறங்களையும் தொழிற்நுட்பமே கவனித்துக்கொள்ளும்.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

ஏன் ADAS முக்கியம்?

இன்று நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துக்கள் நொடிப்பொழுதில் மனிதன் எடுக்கும் தவறான முடிவு அல்லது கவனக்குறைவு தான் காரணமாக பெரும்பாலான விபத்துக்கள் நடக்கிறது. இந்த விபத்துக்களைக் குறைக்கவே இந்த தொழிற்நுட்பம் பயன்படுகிறது. இது இரண்டு விதமாக வேலை செய்யும். ஒன்று விபத்தைத் தடுக்க தானாகவே செயல்படும் மற்றொன்று டிரைவரை எச்சரிக்கும் இதை வைத்து டிரைவர் விபத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கையில் இறக்க முடியும்.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

உதாரணமாக நாம் டிராபிக்கில் சென்று கொண்டிருக்கிறோம் என்றால் முன்பக்க சென்சாரில் மிக அருகில் ஒரு கார் சென்று கொண்டிருக்கிறது. திடீரென கார் பிரேக் பிடித்து நிறுத்தப்படுகிறது என்றால் அதைக் கண்காணித்து இந்த சிஸ்டம் உடனடியாக டிரைவர் செயல்படும் முன்பே செயல்பட்டு இந்த காரை நிறுத்திவிடும். இதன் மூலம் இந்த கார் முன்னால் செல்லும் காரின் பின்புறம் இடிப்பதைத் தவிர்க்க முடியும்.

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

இந்த தொழிற்நுட்பத்தின் முக்கிய நோக்கம் சாலையில் வாகனங்கள் பாதுகாப்பாகப் பயணிக்கவேண்டும். விபத்துக்கள் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே போல சிறிய சிறிய விபத்துக்களால் கார்கள் சேதமடைவதைத் தடுக்க வேண்டும் என்பது தான். இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு லாபம் என்பது தனிக்கதை

நம்ம காருக்கு சேஃப்டிதான் முக்கியம் . . . இனி இந்த தொழிற்நுட்பம்தான் உங்க காரை காப்பாற்ற போகுது !

எதிர்காலத்தில் இந்த ADAS தொழிற்நுட்பம் உள்ள கார்களுக்கு இன்சூரன்ஸ் பிரிமியம் குறையும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் தற்போது அப்படியாக எதுவும் இல்லை இதற்கு முக்கியமான காரணம் இந்த தொழிற்நுட்பம் ஆரம்பக் கட்டத்தில் இருப்பது தான் முக்கியமான காரணம்.

Most Read Articles
English summary
What is Adas Technology how it is useful to vehicle safety
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X