Just In
- 10 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 11 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 22 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 1 day ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- Movies
கிளைமேக்ஸ் சுத்தமா புடிக்கல.. நல்லா டைம் எடுத்து எழுதுங்க.. கடுப்பில் கிளம்பினாரா டாப் நடிகர்?
- Sports
ஒரே இன்னிங்ஸில் 2 முறை பேட்டிங்.. ஜடேஜா- ஸ்ரேயாஸ்க்கு வந்த வாய்ப்பு.. பயிற்சி ஆட்டத்தில் சுவாரஸ்யம்
- Finance
Elon Musk-ஐ புலம்பவிட்ட Tesla, SpaceX, Twitter ஊழியர்கள்..! - வீடியோ
- News
கல்லூரி சுவர் தரமில்லாமல் விழுந்ததாக வீடியோ எடுத்த எம்எல்ஏ மீது வழக்கு பதிவு: உ.பி. போலீஸ் நடவடிக்கை
- Technology
WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஏன் எலெக்டரிக் & ஹைபிரிட் வாகனங்களில் மட்டும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் இருக்கிறது? அது எப்படி செயல்படுகிறது?
எலெக்டரிக் மற்றும் ஹைபிரிட் கார்களில் பயன்படுத்தப்படும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் குறித்த முழு தொழிற்நுட்ப ரீதியிலான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இன்றைய நவீன கால கட்டத்தில் ஆட்டோமொபைல் துறையில் பெட்ரோல் டீசல் இன்ஜின்கள் மாறி எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்பாடு அதிகரிக்கத் துவங்கிவிட்டது. வாகனங்களில் தொழிற்நுட்பங்கள் பெரும்பாலும் பெட்ரோல் டீசல் வாகனங்களில் உள்ளது போல இருந்தாலும் இன்ஜின் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் மாறுபடும். இப்படியாக தற்போது வெளியாகும் எலெக்ட்ரிக் வாகனங்களில் முக்கியமான அம்சமாக ரீ ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் என்ற அம்சம் சொல்லப்படுகிறது? அப்படி என்றால் என்ன? அதனால் வாகனத்திற்கு என்ன பயன்? ஏன் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களில் மட்டும் இந்த அம்சம் இருக்கிறது எனக் காணலாம் வாருங்கள்.

பெட்ரோல், டீசல் காராக இருந்தாலும் சரி எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் சரி வாகனத்தை ஸ்டார்ட் செய்துவிட்டால் வாகனம் நகர்கிறதோ இல்லையோ இன்ஜின் ஓடிக்கொண்டே தான் இருக்கும். வாகனத்தை நாம் நகர்த்தினால் அதற்குத் தேவையான அளவு எரிபொருள் பெட்ரோல், டீசல் வாகனங்களில் செலவாகும், மின்சார வாகனங்களில் மின் சக்தி செலவாகும்.

மின்சார வாகனங்களில் இன்றைக்கு இருக்கும் பெரிய சவாலே இருக்கும் வாகனத்தை வைத்து நீண்ட தூரம் பயணிக்கும் ரேஞ்ச் கொண்ட வாகனங்களை உருவாக்குவது தான். இப்படி வாகனங்களை இயக்கும் போது வாகனம் நகராமல் இருக்கும் போது வாகனத்தின் மின் மோட்டார் செயல்பாடு காரணமாக பேட்டரி சார்ஜ் வீணானால் மேலும் ரேஞ்ச் குறையும் என்பதால் இதைச் சமாளிக்க உருவாக்கப்பட்டது தான் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் முறை

இந்த தொழிற்நுட்பம் உள்ள வாகனங்களில் பிரேக்கை பிடித்து வாகனத்தை நிறுத்தும் போது ஆன் செய்யப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் மின் மோட்டார் சுழற்சி வீணாகாமல் அது மீண்டும் மின்சார சக்தியாக மாறி பேட்டரிக்கு ரீசார்ஜ் ஆகிவிடும். அதனால் இந்த நேரங்களில் செலவாகும் மின்சார அளவு வெகுவாக குறையும். இதனால் அதிக தூரம் பயணிக்க முடியும் என்பது தான் தொழிற்நுட்பத்தின் பயன்.

இந்த தொழிற்நுட்பம் என்பது வாகனத்தின் மின் மோட்டாருக்கு அருகே ரீஜெனரேட்டிவ் கருவி பொருத்தப்பட்டிருக்கும். அந்த கருவி நீங்கள் வாகனத்தில் பிரேக்கை பிடிக்கும் போது வாகனத்தின் டிரைவிங் சாஃப்டை விலக்கிவிட்டு இந்த கருவி மின் மோட்டாருடன் இணையும் மின் மோட்டார் சுற்றும் வேகத்தில் இந்த கருவி மீண்டும் மின்சாரத்தை உருவாக்கி வாகனத்தின் உள்ள பேட்டரியை ரீசார்ஜ் செய்யும்.

இதன் மூலம் வாகனம் நகராத போது மின்மோட்டாருக்காக செலவாகும் மின்சக்தியின் அளவு குறையும். இதனால் வாகனம் வழக்கத்தை விட அதிக தூரம் பயணிக்க முடியும். இதனால் வாகனத்தின் ரேஞ்ச் கூடும். இதுதான் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கின் செயல்பாடு.

இந்த ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை சாதாரண பிரேக்கிங்கிற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கும். அதனால் முதன் முறையாக இந்த பிரேக் உள்ள வாகனத்தைப் பயன்படுத்தும் சற்று கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

இதை பயன்படுத்தி வாகனத்தை இயக்கும் போது ஆக்ஸிரேட்டரை முழுவதுமாக விட்டுவிட்டால் கிட்டத்தட்ட பிரேக் போட்டது போல இந்த கார் செயல்படும். இந்த கருதிவை பொருத்தியிருப்பது கிட்டத்தட்ட கார்களில் ஒரு பெடல் டிரைவிங் சிஸ்டம் போல செயல்படும். அதனால் காரை மொத்தமாக நிறுத்தும் போது மட்டும் பிரேக் பிடித்தால் போதும், காரின் வேகத்தைக் குறைக்க ஆக்ஸிலரேட்டரை குறைத்தாலே காரின் வேகம் வெகுவாக குறைந்துவிடும்.

இந்த ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கில் பல செட்டிங்கள் இருக்கும் எப்பொழுது பிரேக் பிடித்தாலும் இது ஆக்டிவேட் ஆக வேண்டுமா? வேகமாகச் செல்லும் போது பிரேக் பிடித்தால் ஆக வேண்டுமா என செட்செய்யும் வசதியும் பல வாகனங்களில் சில வழங்கப்படுகிறது. அதே போல இந்த ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் தேவையில்லை என்றால் அதை ஆஃப் செய்யும் வசதியும் சில வாகனங்களில் வழங்கப்படுகிறது.

இந்த ரீஜெனரேட்டவ் பிரேக்கிங் தொழிற்நுட்பம் எலெக்டரிக் கார், பைக், ஸ்கூட்டர்கள், அதே போஹைபிரிட் கார், எலெக்ட்ரிக் மூன்று சக்கர மற்றும் பிற பயன்பாட்டிற்கான வாகனங்களில் இந்த வசதி வசதியைப் பொருத்தப்படுகிறது. ஆனால் எல்லா வாகனங்களிலும் இந்த வசதி இருக்கும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் வாங்கும் போது இந்த ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கும் வாகனங்களைப் பார்த்து வாங்க வேண்டும்.

சில வாகனங்களில் குறிப்பாக உயர்ரக கார்களில் ஆட்டோமெட்டிக் க்ரூஸ் கண்ட்ரோல் ஆப்ஷன் இருக்கும். இந்த ஆட்டோமெட்டிக் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ள காரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இருந்தால் அதை க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம் பயன்படுத்தும் அதன் மூலம் முன்னே செல்லும் வாகனத்தை சென்சார் மூலம் கணக்கில் கொண்டு ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை பயன்படுத்தி இந்த காரின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.

நிஸான் லீஃப் காரில் இ-பெடல் சிஸ்டம் உள்ளது. இது ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை கொண்டே இயங்குகிறது. இதே போல கியா இ-நிரோ காரில் ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தின் லெவலை அட்ஜெஸ்ட் செய்யும் படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் காரில் கார்களில் உள்ள பேட்டரிக்கு பயன்பாடு குறைவு தான் அதனால் அதற்கு இந்த கருவி தேவைப்படவில்லை. எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு இந்த தொழிற்நுட்பம் அதிகம் உதவும் என்பதால் பெட்ரோல் டீசல் கார்களில் இந்த தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுவதில்லை. அதே போல இந்த பிரேக்கிங் முதலில் சற்று வித்தியாசமாக இருப்பதால் சாதாரண ஹைட்ராலிக் பிரேக்கை பயன்படுத்தியவர்கள் இதைப் பயன்படுத்தும்போது கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இந்த பிரேக்கிங் பழக்கத்திற்கு வரும் வரை வாகனத்தை மெதுவான வேகத்தில் சிறிது தூரம் ஓட்டுவதே நல்லது.
-
மாருதி ஆல்டோ புதிய அவதாரத்தில் விற்பனைக்கு வரப்போகுது... அது மட்டுமா? இன்னும் நிறைய இருக்கு!
-
எரிபொருளை மிச்சப்படுத்துவதில் 5 ஸ்டார்களை பெற்ற மிஷ்லின் டயர்கள்... எத்தனை சதவீதம் மிச்சப்படுத்தும் தெரியுமா?
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் மின்சார கார்! அட இந்த காருக்கா இப்படி ஒருநிலைமை ஆகியிருக்கு?