உங்கள் கார்/பைக் டயரை ரீ திரெட்டிங் செய்யலாமா?

வெகுநாட்களாக ஓடி தேய்மானம் அடைந்த டயரை சீர் செய்து புதிய டயர் போல மாற்றுவது தான் ரீ திரெட்டிங் தொழிற்நுட்பம்

By Staff

நவீன காலத்தில் டயர் உலகம் மிகவும் நவீனமடைந்துவிட்டது. வாகனங்கள் அதிகமாக புழக்கத்திற்கு வர ஆரம்பித்த காலகட்டங்களில் டயர்களை தயாரிப்பதும், அதை பராமிப்பதும் மிகப்பெரிய வேலையாக இருந்து வந்தது.

உங்கள் கார்/பைக் டயரை ரீ திரெட்டிங் செய்யலாமா?

டயர்களுக்காக அதிக அளவு செலவிட வேண்டிய கட்டாயமும் இருந்தது. ஆனால் நவீன கால தொழிற்நுட்ப வளர்ச்சியால் டயர்களை தயாரிக்கவும், பராமரிக்கவும் பல புதி தொழிற்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

உங்கள் கார்/பைக் டயரை ரீ திரெட்டிங் செய்யலாமா?

அதில் முக்கியமானது தான் இந்த டயர் ரீ திரெட்டிங் தொழிற்நுட்பம், அதாவது வெகுநாட்களாக ஓடி தேய்மானம் அடைந்த டயரை சீர் செய்து புதிய டயர் போல மாற்றுவது தான் ரீ திரெட்டிங் தொழிற்நுட்பம்.

உங்கள் கார்/பைக் டயரை ரீ திரெட்டிங் செய்யலாமா?

தேய்மானம் அடந்த டயரை மேல உள்ள அதிக அளவு தேய்மானம் அடைந்த டயர் பட்டன் பகுதியை முழுமையாக நீக்கி, மீதம் இருக்கும் டயரின் மீது புதிதாக பட்டன் திரெட்டை பொருத்தி அது புதிய டயர் போல மாற்றப்பட்டும்.

உங்கள் கார்/பைக் டயரை ரீ திரெட்டிங் செய்யலாமா?

டயரில் சில கூர்மையாக பொருட்கள் குத்தி டயரை கிழித்து பஞ்சர் ஆக்கினாலும் அந்த டயரையும் ரீ திரெட்டிங் மூலம் சரி செய்யும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

உங்கள் கார்/பைக் டயரை ரீ திரெட்டிங் செய்யலாமா?

ஒரு டயரில் 2-3 முறை கூட திரெட்டிங் செய்து பயன்படுத்த முடியும். இது புதிய டயர் வாங்குவதை காட்டிலும் குறைந்த செலவே ஆகும். டயர் ரீ திரெட்டிங் செய்வது மூலம் நீங்கள் 40% பணத்தை சேமிக்க முடியும் என கூறுகின்றனர்.

உங்கள் கார்/பைக் டயரை ரீ திரெட்டிங் செய்யலாமா?

டயர் ரீ திரெட்டிங் செய்வதற்காக தனியாாக சில நிறுவனங்கள் செயல்லபட்டு வருகின்றன. இந்த ரீ திரெட்டிங் செய்யலாமா அவை நல்ல பலன் அளிக்குமா என்பதை பார்ப்பதற்கு முன் அவைகளில் உள்ள சாதக பாதகங்களை பார்த்து விடுவோம்.

உங்கள் கார்/பைக் டயரை ரீ திரெட்டிங் செய்யலாமா?

சாதகங்கள்

1. பைக், கார், டிரக், பஸ், லாரி, என அனைத்து வாகனங்களில் உள்ள டயர்களையும் ரீ திரெட்டிங் செய்யமுடியும்.

2. பழைய டயரை தூர வீசாமல் ரீ திரெட்டிங் செய்வதால் சுற்றுச்சூழல் மாசு குறைகிறது. மேலும் புதிய டயர்கள் தயார் செய்ய செலவாகும் பல்லாயிரம் லிட்டர் எண்ணெய்களும் மிச்சமாகிறது.

உங்கள் கார்/பைக் டயரை ரீ திரெட்டிங் செய்யலாமா?

3. புதிய டயரை வாங்குவதை விட பழைய டயரை ரீ திரெட்டிங் செய்வதால் செலவு மிச்சப்படும். டயர் ரீ திரெட்டிங்கிற்கு ஆகும் செலவை விட புதிய டயர்கள் வாங்கும் செலவு 2 மடங்கு அதிகரிக்கும்.

உங்கள் கார்/பைக் டயரை ரீ திரெட்டிங் செய்யலாமா?

பாதகங்கள்

1. புதிய பட்டன்களுடன் பழைய டயரில் ரீ திரெட்டிங் செய்யப்பட்டாலும் புதிய டயரில் உள்ள தரம் இதில் இருக்காது.

2. புதிய டயரை காட்டிலும் இதற்கான வாழ்நாள் என்பது குறைவு தான். அதனால் தான் சிலர் ரீ திரெட்டிங்கை செய்ய விரும்புவதில்லை.

டயர் ரீ திரெட்டிங் குறித்து விளக்கும் வீடியோவை கீழே காணுங்கள்.

3. ரீ திரெட்டிங் செய்யப்பட்ட டயர்கள் புதிய டயர் போலவே வேலை செய்தாலும் அதில் அவ்வப்போது சிறிய பிரச்னைகள் ஏற்படுவதாக பயன்படுத்தியவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கார்/பைக் டயரை ரீ திரெட்டிங் செய்யலாமா?

டயர் ரீ திரெட்டிங் சிறிய கால் உழைத்தாலும் அதற்கு ஆக கூடிய செலவு என்பது குறைவு தான். ஆகையால் நீங்கள் தற்போது டயரில் அதிக தொகை செலவு செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்தால் இந்த டயர் ரீ திரெட்டிங்கை பயன்படுத்தலாம்.

உங்கள் கார்/பைக் டயரை ரீ திரெட்டிங் செய்யலாமா?

இந்த சாதக பாதகங்களை கொண்டு உங்கள் வாகனத்திற்கான டயரை ரீ திரெட்டங் செய்யலாமா? வேண்டாமா என்பதை நீங்கள் முடிவெடுங்கள்.

உங்கள் கார்/பைக் டயரை ரீ திரெட்டிங் செய்யலாமா?

டயர் ரீ திரெட்டிங் செய்யும் நிறுவனம் குறித்து விசாரித்து விட்டு பின்னர் அங்கு உங்கள் டயரை ரீ திரெட்டிங் செய்யுங்கள். சில தரமில்லாத நிறுவனங்கள் உங்கள் வாகனத்தின் டயரை வீணடித்து விடுவர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
What is Tyre Retreading? – Advantages and Disadvantages. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X