இந்த டெக்னாலஜி மட்டும் வந்துவிட்டால் இனி ரோட்டில் விபத்துக்களே நடக்காது... ஒரு சிப் உலகத்தையே மாற்றப்போகிறது

எதிர்காலத்தில் சாலைகளில் விபத்துக்களே நடக்காமல் இருக்கும் தொழிற்நுட்பம் தற்போது இந்தியாவில் சோதனையில் உள்ளது. இந்த தொழிற்நுட்பம் என்ன? இது எப்படிவேலை செய்யும்? எப்பொழுது இது நடைமுறைக்கு வரும் உள்ளிட்ட தகவல்களைக் கீழே காணுங்கள்

இந்த டெக்னாலஜி மட்டும் வந்துவிட்டால் இனி ரோட்டில் விபத்துக்களே நடக்காது . . . ஒரு சிப் உலகத்தையே மாற்றப்போகிறது . . . .

இன்று சாலைகளில் கோடிக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்களை எல்லாம் மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்காகப் பயன்படுத்துகின்றனர். இந்த வாகன பயன்பாட்டில் உலகம் முழுவதும் இருக்கும் முக்கியமான பிரச்சனை வாகனங்கள் விபத்தில் சிக்குவது, அல்லது பயணங்கள் டிராபிக் காரணமாகத் தாமதமாகுவது, அல்லது ரத்தாகுவது. போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. இதனால் ஒரு சராசரி மனிதனின் பெரும்பாலான நேரம் சாலை போக்குவரத்திலேயே கழிகிறது.

இந்த டெக்னாலஜி மட்டும் வந்துவிட்டால் இனி ரோட்டில் விபத்துக்களே நடக்காது . . . ஒரு சிப் உலகத்தையே மாற்றப்போகிறது . . . .

தொழிற்நுட்ப வல்லுநர்கள் வாகனங்களில் புதிது புதிதாக எவ்வள தொழிற்நுட்பங்களை கொண்டு வந்தாலும் இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை. சாலைகளில் விபத்துக்களைத் தவிர்க்க ஏபிஎஸ், இபிடி எனப் பல தொழிற்நுட்பங்கள் வாகனங்களில் வந்துவிட்டது. இது போக வாகனங்கள் விபத்தில் சிக்கினாலும் அவர்கள் உயிர் தப்பிக்க காரில் ஏர் பேக் வசதிகளும் வந்துவிட்டன.

இந்த டெக்னாலஜி மட்டும் வந்துவிட்டால் இனி ரோட்டில் விபத்துக்களே நடக்காது . . . ஒரு சிப் உலகத்தையே மாற்றப்போகிறது . . . .

ஆனால் விபத்தைத் தவிர்க்கவும், மனித நேரத்தை மிச்சப்படுத்தவும் இதுவரை தொழிற்நுட்பங்கள் அதுவும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு புதிய தொழிற்நுட்பம் சந்தைக்கு அறிமுகமாகியுள்ளது. அதன் மூலம் வாகனங்கள் விபத்தில் சிக்ககுவது, போக்குவரத்து நெருக்கடியில் சிக்குவது, சாலைகளில் தரத்தை முன்பே அறிந்து கொள்வது, விரைவான பாதையைத் தேர்வு செய்து பயணிப்பது உள்ளிட்டவற்றிற்கு உதவும் தொழிற்நுட்பம் தற்போது ஆய்வில் உள்ளது.

இந்த டெக்னாலஜி மட்டும் வந்துவிட்டால் இனி ரோட்டில் விபத்துக்களே நடக்காது . . . ஒரு சிப் உலகத்தையே மாற்றப்போகிறது . . . .

இந்த தொழிற்நுட்பத்திற்கு V2X எனப் பெயரிட்டுள்ளனர். இதற்கு முழு அர்த்தம் Vehicle to Everything. இந்த தொழிற்நுட்பமானது. சாலையில் வாகனங்கள் பயணிக்கும் போது இது மற்ற வாகனங்கள் அல்லது அல்லது அந்த வாகனம் செல்வதற்குத் தடையாக உள்ள விஷயங்களுடன் தொடர்பு கொண்டு வாகன ஓட்டுநரை எச்சரிக்கும். இந்த தொழிற்நுட்பம் தற்போது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டெக்னாலஜி மட்டும் வந்துவிட்டால் இனி ரோட்டில் விபத்துக்களே நடக்காது . . . ஒரு சிப் உலகத்தையே மாற்றப்போகிறது . . . .

இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்த வாகனத்தில் ஒரு சிப் ஒன்று பொருத்தப்படும். அது வாகனத்தை இன்டர்நெட் உடன் இணைக்கும். இந்த வாகனம் செல்லும் போது இந்த வாகனம் குறித்த தகவல்களை இண்டர்நெட் மூலம் பதிவேற்றும், இப்படியாக மற்ற வாகனங்களிலிருந்து பெறப்படும் தகவல் இந்த வாகனத்தில் உள்ள தகவல்களை வைத்து இந்த வாகனம் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதா? இந்த வாகனம் செல்லும் பாதையில் ஏதாவது தடங்கள் உள்ளதா? இந்த வாகனம் செல்லும் இடத்திற்கு விரைவாகச் செல்லும் பாதையில் செல்கிறதா? சட்ட விதிமுறைகளை மீறி இந்த வாகனம் இயங்குகிறதா எனக் கண்காணிக்கும் இவை எல்லாம் நொடிப்பொழுதில் நடந்து விடும்.

இந்த டெக்னாலஜி மட்டும் வந்துவிட்டால் இனி ரோட்டில் விபத்துக்களே நடக்காது . . . ஒரு சிப் உலகத்தையே மாற்றப்போகிறது . . . .

இந்த தொழிநுட்பம் போக்குவரத்துக்கு உட்பட்ட அனைத்து விஷயங்களிலிருந்து தகவல்களைச் சேகரித்து அதன் மூலம் சாலை பாதுகாப்பு, எரிபொருள் சேமிப்பு, டிராபிக் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றைச் சீராக்க வடிவமைத்துள்ளனர். இந்த தொழினுட்பத்திற்கு அமெரிக்க நெடுஞ்சாலை டிராபிக் மேம்பாட்டு ஆணையம் பரிந்துரையை வழங்கியுள்ளது. இந்த தொழிற்நுட்பம் மூலம் அமெரிக்காவில் சாலை விபத்துக்களைத் தவிர்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெக்னாலஜி மட்டும் வந்துவிட்டால் இனி ரோட்டில் விபத்துக்களே நடக்காது . . . ஒரு சிப் உலகத்தையே மாற்றப்போகிறது . . . .

இந்த தொழிற்நுட்பம் V2V (vehicle-to-vehicle) மற்றும் V2I (vehicle-to-infrastructure) இரண்டு பிரிவாகச் செயல்படும் கார்கள் தயாரிக்கப்படும் போதே V2V என்ற தொழிற்நுட்பம் இந்த காருக்குள் வைக்கப்படும். இப்படியாக நகரும் அனைத்து வாகனங்களிலும் இந்த தொழிற்நுட்பம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

இந்த டெக்னாலஜி மட்டும் வந்துவிட்டால் இனி ரோட்டில் விபத்துக்களே நடக்காது . . . ஒரு சிப் உலகத்தையே மாற்றப்போகிறது . . . .

அதே போல V2I (vehicle-to-infrastructure) என்ற தொழிற்நுட்பம் சாலைகள் மற்றும் டிராபிக்களுக்கு பயன்படுத்தப்படும் விஷயங்களில் தகவல்களை சேரிக்கும்தொழிற்நுட்பம் உதாரணமாக டிராபிக் சிக்னலில் எப்பொழுது சிவப்பு எப்பொழுது பச்சை விளக்குகள் எரிகிறது என்கிறததகவல்களை சேகரிக்கும். அதே போல பார்க்கிங்கில் எவ்வளவு இடம் காலியாக இருக்கிறது. எந்த இடம் காலியாக இருக்கிறது. என்ற தகவலைச் சேரிக்கும்.இந்த தகவலை வாகன ஓட்டிகளுக்கு அனுப்பி அவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும்.

இந்த டெக்னாலஜி மட்டும் வந்துவிட்டால் இனி ரோட்டில் விபத்துக்களே நடக்காது . . . ஒரு சிப் உலகத்தையே மாற்றப்போகிறது . . . .

உதாரணமாக ஒரு நபர் காரில் பயணிக்கிறார். சாலையில் விபத்து ஏற்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டால் இந்த தொழிற்நுட்பம் அதை உடனடியாக அறிந்து வாகனத்தை ஓட்டி செல்லும் நபர் தற்போது இருக்கும் இடத்திலிருந்து குறிப்பிட்ட அந்த விபத்து நடந்த இடத்திற்குச் செல்லாமல் இடையூறே இல்லாமல் மாற்றுப் பாதையில் எப்படிச் செல்ல வேண்டும் எனக் கணித்துச் சொல்லும்.

இந்த டெக்னாலஜி மட்டும் வந்துவிட்டால் இனி ரோட்டில் விபத்துக்களே நடக்காது . . . ஒரு சிப் உலகத்தையே மாற்றப்போகிறது . . . .

இந்த தொழிற்நுட்பம் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்களை ஈர்த்துள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் கார்களில் இந்த தொழிற்நுட்பத்தை புகுத்த துவங்கிவிட்டனர். பல கார் மற்றும் பைக்குகள் இந்த தொழிற்நுட்பத்துடன் வெளிவரத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தொழிற்நுட்பம் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது. இது பல ஆய்வுகள் மற்றும் சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த டெக்னாலஜி மட்டும் வந்துவிட்டால் இனி ரோட்டில் விபத்துக்களே நடக்காது . . . ஒரு சிப் உலகத்தையே மாற்றப்போகிறது . . . .

இந்த தொழிற்நுட்பத்தை முதன் முறையாக தற்போது சுஸூகி நிறுவனம் தனது வாகனங்களில் சோதனை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் தெலங்கானா மாநிலத்தில் இந்த தொழிற்நுட்பத்தை ரோட்டில் சோதனை செய்ய அந்நிறுவனம் அனுமதி வாங்கியுள்ளது. அடுத்த 3 -6 மாதங்களுக்கு கார், பைக், ஆம்புலன்ஸ், ஆகிய வாகனங்களில் இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி சோதனை செய்து வருகிறது. விரைவில் இந்த தொழிற்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
What is V2x technology how it is working fully explained
Story first published: Thursday, May 12, 2022, 20:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X