வயசு 103... ஆனால் இளைஞர் போல கார் ஓட்டும் மங்களூர்காரர்!

உலகின் வயதான வாகன ஓட்டுனர் மங்களூரை சேர்ந்த மைக்கேல் டிசோஸா குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

By Saravana Rajan

உலகின் மிக வயதான ஓட்டுனர்களில் ஒருவரான மங்களூரை சேர்ந்த மைக்கேல் டிசோஸா இப்போது 103வது அகவையை எட்டி இருக்கிறார். இவர் நூறாவது பிறந்தநாள் கொண்டாடியபோது, செய்தி வெளியிட்டு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கவுரப்படுத்தியது.

உலகின் மிக வயதான ஓட்டுனர் மங்களூர் டிசோஸாவுக்கு வயது 103!

ஊட்டியில் பிறந்து வளர்ந்த மைக்கேல் டிசோஸா இப்போது மங்களூரில் வசித்து வருகிறார். கடந்த 1914ம் ஆண்டு ஊட்டியில் பிறந்த மைக்கேல் டிசோஸா தனது 18 வயதில் முதல்முறையாக தனது தந்தை வைத்திருந்த டிரக்கை ஓட்டி இருக்கிறார்.

உலகின் மிக வயதான ஓட்டுனர் மங்களூர் டிசோஸாவுக்கு வயது 103!

அப்போது ஒரே ஓட்டுனர் உரிமத்தை வைத்து மொபட் முதல் டிரக் வரையிலான அனைத்து வாகனங்களையும் ஓட்ட முடியும். இப்போது போல வாகன வகைக்கு தக்கவாறு ஓட்டுனர் உரிம நடைமுறை அப்போது இல்லை என்று தனது இளம் பிராய நினைவுகளை மீட்டுகிறார்.

உலகின் மிக வயதான ஓட்டுனர் மங்களூர் டிசோஸாவுக்கு வயது 103!

1932ம் ஆண்டில் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்க்கப்பட்ட மைக்கேல் டிசோஸா 10 ஆண்டு பணி ஒப்பந்தத்தின் மூலமாக பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளார். நாடு திரும்பிய பின்னர் விசாகப்பட்டணத்தில் அவரது ஆவணங்கள் காணாமல் போனதால், அவருக்கு ராணுவத்தில் பணிபுரிந்ததற்கான ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லையாம்.

உலகின் மிக வயதான ஓட்டுனர் மங்களூர் டிசோஸாவுக்கு வயது 103!

மைக்கேல் டிசோஸா எலீசா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், குழந்தையில்லாததால், மூத்த சகோதரர்களின் பிள்ளைகளை தன் பிள்ளை போல கருதி வாழத் துவங்கிவிட்டனர். சில ஆண்டுகளுக்கு பின்னர் மைசூர் பொதுப்பணித்துறையில் பணிக்கு சேர்ந்தார். அதன்பிறகு பணி மாறுதலில் மங்களூருக்கு சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
உலகின் மிக வயதான ஓட்டுனர் மங்களூர் டிசோஸாவுக்கு வயது 103!

பொதுப்பணித்துறையில் வேலைபார்க்கும்போது ஜீப், டிரக், டிராக்டர் மற்றும் ரோடு ரோலர்களை ஓட்டும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

உலகின் மிக வயதான ஓட்டுனர் மங்களூர் டிசோஸாவுக்கு வயது 103!

இதில், கவனிக்கத்தக்க விஷயம், மைசூர், உடுப்பி மற்றும் மங்களூரில் இன்று நாம் இப்போது பயன்படுத்தும் சில நெடுஞ்சாலைகள் தார் சாலைகளாக தரம் உயர்த்தப்படும்போது, அப்போது பணிபுரிந்ததை பெருமையுடன் நினைவுகூர்கிறார்.

உலகின் மிக வயதான ஓட்டுனர் மங்களூர் டிசோஸாவுக்கு வயது 103!

1982ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற மைக்கேல் டிசோஸா தனது மனைவியுடன் மங்களூரிலேயே செட்டிலானார். வில்லிஸ் ஜீப், மோரிஸ் மைனர், ஃபியட், ஆஸ்டின், ஃபெர்குஸன், மெர்சிடிஸ் பென்ஸ், செவர்லே, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட பல பிராண்டுகளின் கார்களை ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர்.

உலகின் மிக வயதான ஓட்டுனர் மங்களூர் டிசோஸாவுக்கு வயது 103!

1959ம் ஆண்டு ஓட்டுனர் உரிமம் வாங்கியது முதல் தொடர்ந்து அதனை புதுப்பித்து வருகிறாராம். அடுத்த ஆண்டு ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அப்போது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கு ஏற்ற ஓட்டுனர் உரிமத்தை வழங்குவதாக ஆர்டிஓ அதிகாரி கூறி இருக்கிறாராம்.

உலகின் மிக வயதான ஓட்டுனர் மங்களூர் டிசோஸாவுக்கு வயது 103!

2013ம் ஆண்டில் டிசோஸா மனைவி மரணமடைந்தார். அதுமுதல் தனது வேலைகளை தானே செய்துகொள்கிறார். அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடும் வழக்கம் கொண்டவர் டிசோஸா. வீட்டை சுத்தம் செய்வது, உணவு சமைப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தானே செய்து கொள்கிறார்.

உலகின் மிக வயதான ஓட்டுனர் மங்களூர் டிசோஸாவுக்கு வயது 103!

இளம் தலைமுறை வாகன ஓட்டுனர்களை பற்றி கேட்டால், மோசமானவர்கள் என்று பட்டென கமென்ட் அடிக்கிறார் டிசோஸா.

Via- TNM

கார் ஓட்டுனர்களுக்கு அவசியமான '2 செகண்ட் ரூல்' பற்றி தெரியுமா?

நகர்ப்புற சாலையாக இருந்தாலும், நெடுஞ்சாலையாக இருந்தாலும் இன்று பல ஓட்டுனர்கள், முன்னால் செல்லும் வாகனத்தை இடித்துக் கொண்டு செல்வது போல மிக நெருக்கமாக செல்வதை அன்றாடம் பார்க்க முடிகிறது.

கார் ஓட்டுனர்களுக்கு அவசியமான '2 செகண்ட் ரூல்'!

முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தாலும் அல்லது சமிக்ஞை கொடுக்காமல் திரும்பினாலும் இதில் ஆபத்து இருக்கிறது என்பதை இந்த ஓட்டுனர்கள் உணர்வதில்லை. மிக நெருக்கமாக டெயில்கேட் செய்து பின்தொடரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்களுடன் மோதி இன்று பல விபத்துக்கள் நடக்கின்றன.

கார் ஓட்டுனர்களுக்கு அவசியமான '2 செகண்ட் ரூல்'!

இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க, 2 செகண்ட் ரூல் [சில இடங்களில் 3 செகண்ட் ரூல் கடைபிடிக்கப்படுகிறது] என்று குறிப்பிடப்படும் 2 வினாடி இடைவெளி விதியை கார் ஓட்டுனர்கள் பின்பற்றுவது அவசியம். அதுசரி, 2 செகண்ட் ரூல் என்று கூறாமல், ஒரு வினாடி, இரண்டு வினாடி, நான்கு வினாடி இடைவெளி கடைபிடிக்கக்கூடாதா என்ற கேள்வி மனதில் எழுகிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தை முன்னால் செல்லும் கார் கடந்து சென்று, அடுத்த 2 வினாடிகளில் உங்களது கார் கடந்தால் போதிய இடைவெளி இருக்கிறது என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு விளக்கு கம்பம் அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளை அடையாளமாக கொண்டு அதே இடத்தை உங்களது கார் கடப்பதற்கு எத்தனை வினாடிகள் எடுக்கிறது என்பதை வைத்து உணர்ந்து கொள்ளலாம்.

கார் ஓட்டுனர்களுக்கு அவசியமான '2 செகண்ட் ரூல்'!

மேலும், 2 வினாடிகளுக்கு மேல் இடைவெளியில் முன்னால் செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்தால் ஆபத்தில்லை. ஆனால், அதற்குள் இருக்கும்போது உங்களது வாகனத்தின் வேகத்தை குறைத்துக் கொள்வது விபத்துக்களை தவிர்க்க உதவும்.

கார் ஓட்டுனர்களுக்கு அவசியமான '2 செகண்ட் ரூல்'!

மழை, பனிமூட்டம் நிலவும் வேளைகளில் 4 செகண்ட் ரூலை மனதில் வைத்து ஓட்டுவது அவசியம். முன்னால் செல்லும் வாகனத்துடன் குறைந்தது 4 வினாடிகள் இடைவெளி விட்டு செல்வது அவசியம்.

கார் ஓட்டுனர்களுக்கு அவசியமான '2 செகண்ட் ரூல்'!

மிக மிக மோசமான வானிலையின்போது 10 வினாடிகள் இடைவெளியை பின்பற்றுவது உத்தமம்.

கார் ஓட்டுனர்களுக்கு அவசியமான '2 செகண்ட் ரூல்'!

உங்களுக்கு 2 செகண்ட் ரூல் பிடிபடவில்லை எனில், முன்னால் செல்லும் காருடன் 7 அல்லது 8 அடி இடைவெளி விட்டு ஓட்டுவதும் விபத்துக்களை தவிர்க்க உதவும். புதிதாக கார் ஓட்டுபவர்கள் குறைந்தது 15 அடி தூர இடைவெளியில் செல்வது அவசியம்.

கார் ஓட்டுனர்களுக்கு அவசியமான '2 செகண்ட் ரூல்'!

ஒரு கார் 60 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் 30 மீட்டர் தூரத்தில் நிற்கும். இதன் அடிப்படையில்தான் 7 அல்லது 8 அடி இடைவெளி போதுமானதாக இருக்கும்.

கார் ஓட்டுனர்களுக்கு அவசியமான '2 செகண்ட் ரூல்'!

மற்றொரு விதியும் உண்டு. அது நடைமுறையில் சாத்தியப்படுவதற்கு கடினம். மிகவும் பாதுகாப்பாக ஓட்ட விரும்புவர்கள், நகரத்தில் ஒரு கார் அளவுக்கு இடைவெளியும், நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் அளவுக்கு இடைவெளியும் வைத்து ஓட்ட வேண்டும்.

கார் ஓட்டுனர்களுக்கு அவசியமான '2 செகண்ட் ரூல்'!

போதிய இடைவெளி விட்டு ஓட்டுவதன் மூலமாக, பெரிய விபத்துக்கள் மட்டுமின்றி, முன்னால் செல்லும் வாகனங்களுடன் லேசாக மோதி காரில் ஏற்படும் சிறிய சிராய்ப்புகளை நிச்சயம் தவிர்க்க முடியும். அத்துடன், மன அழுத்தத்தையும் வெகுவாக தவிர்க்க முடியும்.

கார் ஓட்டுனர்களுக்கு அவசியமான '2 செகண்ட் ரூல்'!

கனரக வாகனங்களை பின்தொடர்ந்து செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் கூடுதல் இடைவெளி விட்டு செல்வது அவசியம். இதனை மனதில் வைத்து ஓட்டும்போது விபத்துக்களை நிச்சயம் தவிர்க்க வழிகள் உண்டு.

கார் ஓட்டுனர்களுக்கு அவசியமான '2 செகண்ட் ரூல்'!

இந்த விதிகளை பின்பற்றும்போது மொபைல்போனில் பேசுவது, ஏசியை அட்ஜெஸ்ட் செய்வது உள்ளிட்டவற்றில் உங்கள் கவனம் பிறழாமல் இருப்பதும் அவசியம். இதுபோன்ற சமயங்களில் இந்த 2 செகண்ட் ரூல் பொருந்தாது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
A Car For Living Most probably, he is the oldest driver and of course one of the oldest persons in the entire world. Charles Michael D'Souza, who will be competing 103 years now, still drives.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X