Just In
- 17 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- News
150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பள்ளி குழந்தைகள் உயிருடன் விளையாடிய ஆட்டோ டிரைவர்களுக்கு ஆப்பு... தமிழக போலீஸ் செய்த அதிரடி இதுதான்
பள்ளி குழந்தைகள் உயிருடன் விளையாடிய ஆட்டோ டிரைவர்களுக்கு தமிழக போலீசார் ஆப்பு வைத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் ஆட்டோ டிரைவர்கள் பயணிகளிடம் கட்டண கொள்ளையை அரங்கேற்றி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அதுவும் சென்னை போன்ற ஊர்களுக்கு புதிதாக வரும் நபர்கள் ஆட்டோ டிரைவர்களிடம் சிக்கி கொண்டால், அவர்களின் நிலைமை பரிதாபத்திற்கு உள்ளாகி விடும். தமிழகத்தில் இந்த பிரச்னை நீண்ட காலமாக நீடித்து வருகிறது.

இதுதவிர அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்றும் ஆட்டோ டிரைவர்கள் விதிமுறை மீறலில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக ஸ்கூல் ட்ரிப் அடிக்கும் ஆட்டோக்களை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பள்ளி குழந்தைகளை கால்நடைகளை போல் ஆட்டோக்களில் அடைத்து கூட்டி செல்கின்றனர்.

இது அப்பட்டமான விதிமுறை மீறல். ஆட்டோக்களில் அதிகபட்சமாக எவ்வளவு பயணிகளை ஏற்றி செல்ல முடியும்? இருக்கைகள் எப்படி இருக்க வேண்டும்? என்பது தொடர்பாக விதிமுறைகள் உள்ளன. இதன்படி ஆட்டோ ரிக்ஸாவில் டிரைவர் தவிர 3 பயணிகளை மட்டுமே அதிகபட்சமாக ஏற்றி செல்ல வேண்டும். ஆனால் இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுவதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிமுறைப்படி, ஆட்டோ ரிக்ஸாக்கள் மூன்று பயணிகளுக்கான இருக்கைகளுடன் இருக்க வேண்டும். அதே சமயம் இருக்கையின் நீளம் 120 செமீ-க்கு மிகாமலும், 115 செமீ-க்கு குறையாமலும் இருக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற விதிமுறைகளை பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வதில்லை.

அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்வது மிகவும் ஆபத்தானது. ஆனால் ஆட்டோ டிரைவர்கள் இதனை உணர்வதில்லை. ஒரே டிரிப்பில் அதிக குழந்தைகளை ஏற்றி செல்வதால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. ஆட்டோ டிரைவர்களின் இந்த விதிமுறை மீறல் தொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருந்தன.

இதன்பேரில் சென்னை நகர போக்குவரத்து போலீசார் கடந்த செவ்வாய் கிழமை அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அன்றைய தினம் சட்டம் அனுமதித்ததை காட்டிலும் அளவுக்கு அதிகமான பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 1,275 ஆட்டோ டிரைவர்களை போலீசார் பிடித்தனர். அவர்கள் மீது போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆட்டோக்களில் குழந்தைகள் இருந்ததன் காரணமாக, அவர்களை பள்ளியில் டிராப் செய்து விட்டு வந்து அபராதத்தை செலுத்தும்படி போலீசார் கூறினர். ஒரே நாளில் 1,275 பேர் மீது போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்திருப்பது ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
MOST READ: பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... யாருகிட்டயும் சொல்லீராதீங்க...

104 போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழு ஆங்காங்கே வாகன தணிக்கை நடத்தி விதிமீறிய ஆட்டோ டிரைவர்களை பிடித்துள்ளனர். குறிப்பாக பள்ளிகளுக்கு அருகே இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. போலீசார் தவிர வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும் விதிமீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இதன்படி சென்னை நகரில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஓவர்லோடு தொடர்பாக 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''இதுபோன்ற ஆட்டோக்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கூடாது. குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வருவதற்கு வேறு வாகனத்தை அவர்கள் தேர்ந்து எடுக்க வேண்டும்.

அளவுக்கு அதிகமான குழந்தைகளையும், பயணிகளையும் ஏற்றி செல்ல கூடாது எனவும், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் ஆட்டோ டிரைவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்கள் தொடர்ந்து தவறு செய்தால், அவர்களின் பர்மிட்டை கேன்சல் செய்யும்படி போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்படும். இதனை அவர்களிடமும் தெரிவித்துள்ளோம்'' என்றனர்.
Note: Images used are for representational purpose only.

சாலை விபத்தின்போது தலையில் காயம் ஏற்படுவதை ஹெல்மெட் தடுக்கிறது. விபத்தின்போது தலை முதலில் சாலையில் பட்டால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.