ஆடம்பரத்தை அறவே வெறுத்த மகாத்மா காந்தி பயணித்த கார்!

Mahatma Gandhi Car
எளிமையானவர், ஆடம்பரத்தை விரும்பாதவர், கொள்கை பிடிப்பில் கெட்டியானவர் என்ற புகழுக்குரியவர் மகாத்மா காந்தி. அவர் கடைபிடித்த வாழ்க்கை தத்துவார்த்தங்கள் மற்றும் கொள்கைகள் உலக மக்கள் மட்டுமின்றி முப்பது முக்கோடி தேவர்களையும் கவர்ந்த ஒன்று என்று கூறினால் மிகையாது.

இருப்பினும், சுதந்திரத்திற்காக தேசம் முழுவதும் வலம் வந்த காந்திஜி, தன் வாழ்நாள் இறுதிவரை ஒரு காரை கூட சொந்தமாக வைத்திருக்கவில்லை. ஆனால், அவர் ஒரு சில முறை மட்டும் கார்களில் பயணம் செய்துள்ளார். அப்படி அவர் பயணம் மேற்கொண்ட ஒரு சில கார்களில் ஃபோர்டு டி-சீரிஸ் கார் ஒன்றும் அவருடன் சேர்ந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

கடந்த 1927ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம், பெய்ரேலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி ஃபோர்டு டி-சீரிஸ் காரில் சென்றுள்ளார். கார் வைத்துக்கொள்வதை ஆடம்பரமாக கருதி விலக்கிய ஒரு மாபெரும் தலைவர் பயணம் செய்த அந்த கார் பலரது கைமாறி தற்போது புனேயை சேர்ந்த ஜஸ்தன்வல்லா என்பவரிடம் உள்ளது.

ஜஸ்தன்வல்லா விண்டேஜ் கார்களை சேகரித்து பராமரிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். உலக வரலாற்றில் ஒப்பற்ற தலைவர் பயணித்த இந்த காரையும் அவர் போற்றி பராமரித்து பாதுகாத்து வருகிறார். அவரது ஷெட்டில் 30 விண்டேஜ் கார்கள் இருந்தாலும், விலை மதிப்பில்லாத இந்த காருக்கு அவர் தனிமரியாதை கொடுத்து வைத்துள்ளார்.

மேலும், புனேயில் ஆண்டுதோறும் நடைபெறும் மஹாராஷ்டிரா மோட்டார் கண்காட்சியிலும் இந்த காரை அவர் காட்சிக்கு வைக்க மறப்பதில்லை. ஒரு சில கார் பயணங்களில் காந்தியால் மறக்க முடியாத கார்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும் என்பது திண்ணம்.

Most Read Articles
English summary
We all know that Mahatma Gandhi was a simple man who owned just the basic amenities and rejected to live a luxurious life despite having a rich family. He lived during a time when owning a car was a definite luxury. Hence Gandhiji never owned a car. But here is a car in which he travelled when he was in the year 1927 when he visited Uttar Pradesh. Gandhiji travelled from the Bareilly central jail in Uttar Pradesh in 1927 in a Ford T series. The car has changed hands several times and is now owned by Abbas Jasdanwalla from Pune. Mr Jasdanwalla is vintage car collector and this Ford T series is the most priceless model in his collection of 30 vintage cars.This Ford T series was displayed during the Annual Maharashtra Automotive Sports Association's car fiesta in Pune.
Story first published: Saturday, August 13, 2011, 10:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X