தமிழகத்தில் சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு; அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

தமிழ்நாட்டில் உள்ள 14 சுங்கசாவடிகளில் வரும் செப்1ம் தேதி முதல் சுமார் 10 சதவீத கட்டணம் உயத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கசாவடிகள் எல்லாம் பெரும்பாலும் தமிழ்நாட்டில் மற்ற பகுதியில் இருந்த

By Balasubramanian

தமிழ்நாட்டில் உள்ள 14 சுங்கசாவடிகளில் வரும் செப்1ம் தேதி முதல் சுமார் 10 சதவீத கட்டணம் உயத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கசாவடிகள் எல்லாம் பெரும்பாலும் தமிழ்நாட்டில் மற்ற பகுதியில் இருந்து சென்னை நோக்கி வரும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடி ஆகும். குறிப்பாக மதுரை மற்றும் சேலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள சுங்கசாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் சுங்கசாவடிககளில் கட்டணம் உயர்வு; அத்தியவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு இடத்தில் சுங்கசாவடிகள் வசூலிக்கப்பட்டு அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களிடம் மத்திய அரசு கட்டணம் வசூலித்து வருகிறது. மத்திய அரசு சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக இந்த கட்டணத்தை வசூலிக்கிறது.

தமிழகத்தில் சுங்கசாவடிககளில் கட்டணம் உயர்வு; அத்தியவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

இந்த கட்டணம் மொத்த விற்பனை விலையை குறியீட்டை கணக்கில் கொண்டு ஒவ்வொரு சுங்கசாவடிக்கும் கட்டணம் நிர்ணயிக்கிறது. ஓவ்வொரு சுங்கசாவடியிலும் ஒவ்வொரு விதமான கட்டணம் பின்பற்றப்படுகிறது. இந்த சுங்கசாவடி கட்டண வசூலிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மத்திய அரசு இதை தொடர்ந்து செயல்படுத்தி கொண்டேட வருகிறது.

தமிழகத்தில் சுங்கசாவடிககளில் கட்டணம் உயர்வு; அத்தியவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் இந்தியாவில் உள்ள பல்வேறு சுங்கசாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாற்றியமைத்து அந்தந்த பகுதிகளில் உள்ள செய்திதாள்களில் விளம்பரம் வெளியிட்டது.

அதன் படி தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இரந்து கார்கள் சுமார் 10 சதவீதம் வரையிலும், லாரி மற்றும் பஸ்கள் சுமார் 4-6 சதவீதம் வரையிலும் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்து எந்த ரக வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் என்ற விபரமும் வெளியிடப்பட்டிருந்தது.

தமிழகத்தில் சுங்கசாவடிககளில் கட்டணம் உயர்வு; அத்தியவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

கட்டண உயர்வு செய்யப்பட்ட சுங்கசாவடிகள்

1.எலியார்பத்தி : மதுரை - தூத்துக்குடி சாலை

2.கொடை ரோடு : திண்டுக்கல் பைபாஸ்- சமயநல்லூர்

3.மேட்டுப்பட்டி : சேலம்- உளுந்தூர்பேட்டை

4. மொரட்டாண்டி: பாண்டிசேரி- திண்டிவனம்

5.நல்லூர் : சென்னை - தடா

6.நாதக்கரை : சேலம் - உளுந்தூர்பேட்டை

தமிழகத்தில் சுங்கசாவடிககளில் கட்டணம் உயர்வு; அத்தியவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

7.பொண்ணம்பலபட்டி : திருச்சி - திண்டுக்கல்

8.புதூர்பாண்டியபுரம் : மதுரை - தூத்துக்குடி

9. திருமான்துறை - உளுந்தூர்பேட்டை-பாடலூர்

10. வைகுண்டம் : சேலம் - குமாரபாளையம்

11. வல்லவன்கோட்டை : தஞ்சாவூர் - திருச்சி

12. வீரசோலபுரம் : சேலம் - உளுந்தூர் பேட்டை

13. விஜயமங்களம் : குமாரபாளையும்- செங்கப்பள்ளி

14. விக்கிரவாண்டி : திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை

தமிழகத்தில் சுங்கசாவடிககளில் கட்டணம் உயர்வு; அத்தியவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

இந்த பகுதிகள் எல்லாம் தமிழகத்தின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக உள்ளது. இந்த பகுதி வழியாக தினமும் அதிக அளவு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களின் சென்று வருகின்றன.

தமிழகத்தில் சுங்கசாவடிககளில் கட்டணம் உயர்வு; அத்தியவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

தற்போது இந்த விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் அத்தியவாசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம்தான் சென்னையை சுற்றியுள்ள சுமார் 6 சுங்கசாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. தற்போது அடுத்ததாக 14 சுங்க சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுங்கசாவடிககளில் கட்டணம் உயர்வு; அத்தியவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

இந்தியாவை பொருத்தவரை தமிழகம் அதிக சுங்கசாவடி வருமானங்களை பெற்று தரும் மாநிலங்களில் டாப் 5 இடத்தில் உள்ளது. அரசு அளித்த அறிக்கையின் படி தமிழகத்தின் சுங்க சாவடி வருமானம் கடந்த 2 ஆண்டுகளில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து பயன்பாடு அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Toll fee hike in 14 toll plazas in tamilnadu, will effect from september 1. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X