தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை பாதுகாக்கும் அதிநவீன கருவியை, 16 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் கண்டுபிடித்துள்ளார். தேசப்பற்று மிகுந்த அந்த சிறுவனின் கண்டுபிடிப்பிற்கு, நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

தீவிரவாதிகளிடம் இருந்து நமது நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய மிக உன்னதமான பணியை இந்திய ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர். இதுதவிர வடக்கு எல்லையில் பாகிஸ்தான், வட கிழக்கு எல்லையில் சீனா ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களையும் அவர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

அவ்வப்போது தீவிரவாதிகள் எல்லை கடந்து வந்து நடத்தும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிடுகின்றனர். இருந்தபோதும் சில சமயங்களில் ராணுவ வீரர்கள் சிலர் இதில் வீர மரணம் அடைய நேரிடுகிறது.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் மட்டுமே தீவிரவாதிகளின் ஆயுதம் கிடையாது. பூமிக்கு அடியில் கண்ணிவெடிகளை பதித்து, ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வழக்கத்தை தீவிரவாதிகள் இன்றளவும் கையாண்டு வருகின்றனர்.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

கண்ணிவெடிகள் மிகவும் அபாயகரமானது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழக்க நேரிடும். ஆனால் தற்போது இந்த பிரச்னைக்கு அதிநவீன முறையில் தீர்வு கண்டிருக்கிறார் ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலா.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்தவரான ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலாவிற்கு, 16 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் இவருக்கு புத்தி கூர்மையுடன் சேர்த்து தேசப்பற்றும் மிகுந்து காணப்படுகிறது. இதன் விளைவாக அதிநவீன ட்ரோன் (Drone) ஒன்றை ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலா வடிவமைத்துள்ளார்.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

16 வயது மட்டுமே நிரம்பிய ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலா கண்டறிந்துள்ள ட்ரோனின் சிறப்பம்சங்கள் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். இவர் தனது ட்ரோனுக்கு ஈகிள் ஏ7 (EAGLE A7) என பெயரிட்டுள்ளார். இது மிகவும் அபாயகரமான கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் வல்லமை வாய்ந்தது.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

ஈகிள் ஏ7 ட்ரோனில் இடம்பெற்றிருக்கும் தொழில்நுட்பம் தற்போது உலகில் வேறு எங்கும் கிடையாது என ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலா பெருமிதத்துடன் கூறியுள்ளார். இதன்மூலம் கண்ணிவெடிகளில் இருந்து பலரின் உயிர் காப்பாற்றப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

இதுகுறித்து ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலா கூறுகையில், ''ஈகிள் ஏ7 ட்ரோனில், மல்டி-ஸ்பெக்ட்ரல் லேண்ட்மைன் டிடெக்ஸன் டெக்னாலஜி (Multi-spectral Landmine Detection Technology) உள்ளது. இதன்மூலம் கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்க முடியும். தற்போது இந்த தொழில்நுட்பம் வேறு எங்கும் இல்லை.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

இந்திய ராணுவம், சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை, Central Reserve Police Force) உள்ளிட்ட நமது பாதுகாப்பு படைகளை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும். எனவே எனது ஈகிள் ஏ7 ட்ரோன், நமது பாதுகாப்பு படைகளில் சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால் எனது தொழில்நுட்பம் மூலம் ராணுவம் உள்ளிட்ட நமது பாதுகாப்பு படைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை, விருப்பம், எண்ணம் எல்லாம்'' என்றார்.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

தற்போது ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவரது கண்டுபிடிப்பு இந்தியாவை பெருமைப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவிற்காக அவர் இன்னும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்க வாழ்த்துவோம்.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலாவின் கண்டுபிடிப்பு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இதுதொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த சூழலில் நமது நாட்டில் சமீப காலமாக பறக்கும் ட்ரோன் அல்லது ரிமோட்லி பைலட்டட் ஏர்கிராஃப்ட் பிரபலம் அடைந்து வருகிறது. எனவே கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் இதன் பயன்பாடு இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம், இதற்கென தனியாக தேசிய ட்ரோன்கள் கொள்கையை (National Drones Policy) வகுத்துள்ளது. இது ட்ரோன் ஒழுங்குவிதிகள் 1.0 (Drone Regulations 1.0) என அழைக்கப்படுகிறது.

 தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

இந்தியாவில் ட்ரோன்களை எங்கு, எப்போது, எப்படி? இயக்க வேண்டும் என்பதை தேசிய ட்ரோன்கள் கொள்கை தெளிவுபடுத்துகிறது. இதன்படி உரிய அனுமதி பெற்ற பின், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தனி நபர்கள் ட்ரோன்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
16 Year Old Boy From Gujarat Develops Landmine-destroying Drone To Help Indian Army, CRPF. Read in Tamil
Story first published: Saturday, January 26, 2019, 11:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X