தந்தை, மகன் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... என்ன நடந்தது என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க...

தந்தை, மகன் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தந்தை, மகன் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... என்ன நடந்தது என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க...

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால், இந்தியாவில் சாலை பாதுகாப்பு மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களில் இந்தியர்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். இதுதவிர சிறார்கள் வாகனங்களை ஓட்டுவதும் இங்கு அதிகமாக நடக்கிறது.

தந்தை, மகன் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... என்ன நடந்தது என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க...

உரிய வயதை எட்டாத மைனர்கள் வாகனங்களை ஓட்டுவதால், இந்தியாவில் அதிக அளவிலான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. பொது சாலைகளில் சிறார்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனாலும் கூட பலர் கொஞ்சம் கூட அச்சமில்லாமல் தொடர்ந்து வாகனங்களை இயக்கி கொண்டேதான் உள்ளனர்.

தந்தை, மகன் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... என்ன நடந்தது என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க...

உண்மையில் உரிய வயதை எட்டாத சிறுவர்களை அவர்களின் பெற்றோர்களே வாகனங்களை ஓட்டும்படி ஊக்குவித்து வருவது வேதனையான ஒரு விஷயம். எனவே தங்கள் குழந்தைகளை பைக் அல்லது கார் ஓட்ட அனுமதித்த பெற்றோர்களை போலீசார் சிறைக்கு அனுப்பிய சம்பவங்களும் கூட கடந்த காலங்களில் நடந்துள்ளன.

தந்தை, மகன் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... என்ன நடந்தது என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க...

ஆனாலும் கூட இந்த விதிமீறல் குறைந்தபாடில்லை. வாகனங்களை ஓட்டும் சிறார்களை பொது சாலைகளில் நம்மால் அடிக்கடி பார்க்க முடிகிறது. இந்த சூழலில் தன்னுடைய ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு தன் மகனை அனுமதித்த தந்தை ஒருவர் தற்போது சிக்கியுள்ளார். இதற்காக அவர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

தந்தை, மகன் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... என்ன நடந்தது என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க...

ஒடிசா மாநிலம் கட்டாக்கின் புறநகர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று வழக்கமான செக் போஸ்ட்டில் போலீசார் வாகன தணிக்கை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஸ்கூட்டரை, ஆவணங்களை பரிசோதிப்பதற்காக நிறுத்தினர். அப்போது அந்த ஸ்கூட்டரை ஓட்டி கொண்டு வந்தவருக்கு 17 வயது மட்டுமே நிரம்பியிருந்தது தெரியவந்தது.

தந்தை, மகன் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... என்ன நடந்தது என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க...

அந்த சிறுவனின் தந்தை ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து வந்தார். அத்துடன் அவர்கள் இருவரும் ஹெல்மெட் வேறு அணியவில்லை. எனவே இரண்டு அபராதங்களை போலீசார் விதித்துள்ளனர். பொது சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியாததற்காக 1,000 ரூபாய் ஒரு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

தந்தை, மகன் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... என்ன நடந்தது என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க...

இதுதவிர உரிய வயதை எட்டாத சிறுவனை டூவீலர் ஓட்ட அனுமதித்தற்காக 25,000 ரூபாய் தனியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அந்த சிறுவனின் தந்தைக்கு 26 ஆயிரம் ரூபாயை காவல் துறையினர் அபராதமாக விதித்துள்ளனர். 194D (ரைடரும், பில்லியனும் ஹெல்மெட் அணியாமல் செல்வது), 199A (சிறார்கள் செய்யப்படும் குற்றம்) ஆகிய செக்ஸன்களின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தந்தை, மகன் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... என்ன நடந்தது என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க...

அதே சமயம் ஆன்லைன் மூலமாக இந்த அபராத தொகையை செலுத்த ஸ்கூட்டரின் உரிமையாளரை காவல் துறையினர் அனுமதித்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட ஸ்கூட்டரை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து விட்டனர். அதன் உரிமையாளர் அபராத தொகையை செலுத்திய பிறகுதான் ஸ்கூட்டர் விடுவிக்கப்படும்.

தந்தை, மகன் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... என்ன நடந்தது என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க...

ஒரு வேளை அவர் அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், ஸ்கூட்டரின் பதிவை போலீசார் ரத்து செய்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஸ்கூட்டர் உரிமையாளரின் டிரைவிங் லைசென்சும் சஸ்பெண்ட் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை, மகன் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... என்ன நடந்தது என தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க...

உரிய வயதை எட்டி டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு முன்னால் உங்கள் மகன்/மகளை கார் அல்லது பைக் போன்ற எந்த விதமான வாகனங்களையும் ஓட்டுவதற்கு அனுமதிக்காதீர்கள். இதனை மீறி அனுமதித்தால் உங்கள் மீதும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
17-Year-Old Boy Riding Scooter In Odisha - Father Fined. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X