Just In
- 12 min ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 1 hr ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 1 hr ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
- 5 hrs ago
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
Don't Miss!
- News
தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா? வேல்முருகன் கடும் கண்டனம்
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிகவும் பழமையான மேம்பாலத்திற்கு நேர்ந்த சோகம்! தேசிய ஊரடங்கில் வரலாற்று சின்னத்தை அழித்த மஹாராஷ்டிரா
இந்தியாவின் மிகவும் பழமையான மேம்பாலங்களில் ஒன்றான அமுர்தாஞ்ஜன் மேம்பாலத்தை மஹாராஷ்டிரா அரசு வெடிகுண்டு வைத்து இடித்து தள்ளியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியா ஓர் வரலாற்று சிறப்புமிக்க நாடாகும். இதற்கு பல ஆண்டுகளாக நீ��ித்திருக்கும் கோட்டைகளும், கோவில்களுமே முக்கிய சான்று. இவை இந்தியாவின் வரலாற்று சின்னங்களாக இருந்து வருகின்றன. ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான வரலாறும், சிறப்புமிகுந்த கதைகளும் அடங்கியுள்ளன. அந்தவகையிலான ஓர் பழமைவாய்ந்த மேம்பாலத்தை மஹாராஷ்டிரா மாநில அரசு வெடி வைத்து தகர்த்தெரிந்துள்ளது.

இது பிரிட்டிஷார்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் ஆகும். அமுதாஞ்ஜன் என்ற பெயரைக் கொண்ட அந்த மேம்பாலம் மும்பமை-புனே அதிவேக நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது.
1830ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்ட தொடங்கப்பட்ட இந்த மேம்பாலத்தை எந்தவொரு தொழில்நுட்ப அம்சமும் இல்லாத காலத்திலேயே வெறும் மனித சக்திகளை மட்டுமே வைத்து ஆங்கிலேய அரசு கட்டிமுடித்தது. அதுவும் 11 மாதங்களுக்கு உள்ளாகவே.

இதனை டெக்கன் (ஹில்லி) மற்றும் கொன்கன் (கோஸ்டல்) ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வெள்ளைக்காரர்கள் கட்டி எழுப்பினார்கள். அப்போது, இந்த மேம்பாலம் நீண்ட காலம் நீடித்து உழைக்கும் என்ற உத்தரவாத சான்ற அவர்கள் கொடுத்திருந்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அந்த மேம்பாலத்தின்கீழ் ஒரு கல்வெட்டையும் அவர்கள் பொதித்திருந்தனர்.

அதில், மேம்பாலம் கட்ட தொடங்கப்பட்ட நாள் மற்றும் முடிக்கப்பட்ட நாள் ஆகியவை இடம் பெறறிருக்கின்றன. இதுமட்டுமின்றி, அப்போது அந்த பகுதியை கண்கானித்து வந்த வெள்ளையரின் பெயரும் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மும்பை மற்றும் புனேவைச் சுற்றியிருக்கும் பகுதியை சர் ஜான் மல்கோம் ஜி.சி.இ அன்னோ டோம்னி என்பவர் கண்கானித்து வந்துள்ளார். இவரே, பெரு வாகனங்கள் சென்று வருவதற்கு ஏற்ப இந்த மேம்பாலத்தை கட்ட தூண்டுகோளாக இருந்துள்ளார்.

இந்த மேம்பலாத்தைதான் மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி) வெடி வைத்து இடித்து தகர்த்துள்ளது. இந்த மேம்பாலம் பல காலங்களாக பயன்பாட்டில் இல்லாததாலும், சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அந்த கழகம் இத்தகைய செயலைச் செய்துள்ளது.

மேலும், இந்த மேம்பாலத்தின் தூண்கள் சாலையில் சென்று வரும் வாகனங்களை தடையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது. இதனால், அவ்வப்போது அந்த எக்ஸ்பிரஸ் வே-வில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால், பயன்படாத மற்றும் இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை நீக்கிவிட்டு ஆறு வழிச்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த பணியின் காரணமாக போக்குவரத்து தடை ஏற்படக்கூடாது என்பதற்காக வாகன வரத்து குறைவாக இருக்கும் நேரம்பார்த்து மேம்பாலம் தகர்க்கும் வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, மிகக் குறுகிய நேரங்கள் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் மறு சீரமைக்கப்பட்டது.

அதேசமயம், தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தேசிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது. இதனால் பெருமளவிலான வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்ட எம்எஸ்ஆர்டிசி எந்தவொரு தடைமின்றி மிகவிரைவில் மீண்டும் சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக விரைந்து புணரமைக்கும் பணியைச் செய்து வருகின்றது.

தற்போது கொரோனா வைரசின் காரணமாக அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் தேசிய ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற தகவல்கள் வதந்தியாக பரவிக் கொண்டிருக்கின்றது. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் அரசு சார்பில் இருந்து இதுரை வெளியிடப்படவில்லை.
இந்த மாதிரியான சூழ்நிலைக்குள்ளாகவே அனைத்து பணிகளையும் முடித்துவிட ராய்காட் மாவட்ட ஆட்சியர் எம்எஸ்ஆர்டிசி-க்கு அனுமதி வழங்கியுள்ளார். எனவே, சாலை விரிவாக்கம் பணி வாகன போக்குவரத்திற்கு துளியளவும் பாதிப்பு விளைவிக்காது என தெரிகின்றது. அதேசமயம், இந்த பணியின்போது கூடுதல் கவனமாக இருக்கவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.