காவல்துறையின் தீவிர வேட்டையில் சிக்கிய பெண்கள்: எண்ணிக்கை அதிகரித்ததால் அதிர்ச்சி...

போலீஸார் தீவிர வேட்டையில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

காவல்துறையின் தீவிர வேட்டையில் சிக்கிய பெண்கள்: எண்ணிக்கை அதிகரித்ததால் அதிர்ச்சி...

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் ஹெல்மெட் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதன்காரணமாகவே, அதற்கு உயிர்கவசம் என்ற மறுபெயர் உண்டு. பெரும் விபத்துகளில் இருந்து உயிரைக் காக்கவும், காயமின்றி தப்பிக்கவும் இவை உதவுகின்றன.

எனவே, அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் விபத்துகளில் இருந்து தப்பிக்க, ஹெல்மட் அணிவதை இந்திய மோட்டார் வாகன சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.

காவல்துறையின் தீவிர வேட்டையில் சிக்கிய பெண்கள்: எண்ணிக்கை அதிகரித்ததால் அதிர்ச்சி...

ஹெல்மட் அணிவது மட்டுமின்றி, அது தரமானதாக இருக்க வேண்டும் என்பதையும் அது வலியுறுத்துகின்றது. ஆகையால், இருசக்கர வாகன ஓட்டிகள் ஐஎஸ்ஐ முத்திரைப் பொருந்திய ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை போலீஸார் அறிவுறுத்துகின்றனர்.

காவல்துறையின் தீவிர வேட்டையில் சிக்கிய பெண்கள்: எண்ணிக்கை அதிகரித்ததால் அதிர்ச்சி...

அதேசமயம், இருசக்கர வாகனத்தை இயக்குபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என்பதை மோட்டார் வாகன சட்டமும், உச்ச நீதிமன்றமும் கட்டாயமாக்கியுள்ளது.

காவல்துறையின் தீவிர வேட்டையில் சிக்கிய பெண்கள்: எண்ணிக்கை அதிகரித்ததால் அதிர்ச்சி...

இருப்பினும், இதனை பெரும்பாலான வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிப்பதே இல்லை என போலீஸார்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், ஆண்களுக்கு இணையாக பெண்களில் சிலரும் இந்த விதிமீறலில் ஈடுபடுவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து சண்டிகர் மாநில போலீஸார், வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

காவல்துறையின் தீவிர வேட்டையில் சிக்கிய பெண்கள்: எண்ணிக்கை அதிகரித்ததால் அதிர்ச்சி...

புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இது நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு, கடந்த செப்டம்பர் மாதம் மட்டுமே, சண்டிகர் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 16,163 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் தீவிர வேட்டையில் சிக்கிய பெண்கள்: எண்ணிக்கை அதிகரித்ததால் அதிர்ச்சி...

அதில், ஹெல்மட் அணியாத விதிமீறலுக்காக 2,059 பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போலீஸாரின் இந்த தகவல் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது.

பொதுவாக, பெண்களை மடக்கி போலீஸார் அபராதம் விதிக்க மாட்டார்கள் என்ற கருத்து பலரின் மத்தியில் நிலவி வந்தநிலையில், அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

காவல்துறையின் தீவிர வேட்டையில் சிக்கிய பெண்கள்: எண்ணிக்கை அதிகரித்ததால் அதிர்ச்சி...

சண்டிகர் காவல்துறையினர், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இதுவரை ரூ. 42.3 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், ஆண் மற்றும் பெண் என இரு பாலரும் அடங்குவர்.

காவல்துறையின் தீவிர வேட்டையில் சிக்கிய பெண்கள்: எண்ணிக்கை அதிகரித்ததால் அதிர்ச்சி...

முன்னதாக, ஹெல்மட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சண்டிகர் காவல்துறையினர் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். அதில், ஹெல்மெட் அணிவது விபத்தின் போது ரைடர்களின் உயிரை எந்தளவிற்கு காப்பாற்ற பயனளிக்கும் என்பது விளக்கப்பட்டது. ஆனால், இவையனைத்திற்கும் பலனில்லாத சூழலையே தற்போதைய அபராத சம்பவங்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றது.

காவல்துறையின் தீவிர வேட்டையில் சிக்கிய பெண்கள்: எண்ணிக்கை அதிகரித்ததால் அதிர்ச்சி...

பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள செல்லாண்களின் எண்ணிக்கை 2,000 க்கும் அதிகமாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக அந்த மாநிலத்தில் ஹெல்மெட் இல்லாத விதிமீறலுக்கு வழங்கப்பட்ட செல்லாண்களின் எண்ணிக்கை 6,746 ஆக உள்ளது.

சண்டிகரில், மத்திய அரசு வழிகாட்டிய அதே பத்து மடங்கு அதிகரித்த அபராதம்தான் மக்களிடம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும், மக்கள் எவ்வாறு விதிகளை மீறுகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

காவல்துறையின் தீவிர வேட்டையில் சிக்கிய பெண்கள்: எண்ணிக்கை அதிகரித்ததால் அதிர்ச்சி...

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஹெல்மெட் இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதமாக ரூ. 100 மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்த பின்னர், அது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், இதனை இரு சக்கர வாகன ஓட்டிகள் ஓர் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

காவல்துறையின் தீவிர வேட்டையில் சிக்கிய பெண்கள்: எண்ணிக்கை அதிகரித்ததால் அதிர்ச்சி...

அதேசமயம், ஹெல்மெட் மட்டுமின்றி, சிக்னலின் போது ஜீப்ரா கிராசிங் கோட்டை தாண்டி நின்றதற்காகவும் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அந்தவகையில், ஒட்டுமொத்தமாக 4,012 பேருக்கு அபராதம் செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 2,388 வாகன ஓட்டிகளுக்கு முறையற்ற பார்க்கிங் செய்ததற்காக அபராதம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, பல்வேறு முறைகேடுகளை ஒடுக்க போலீஸார் தங்களின் இரும்பு கரங்களைக் கொண்டு அடக்கி வருகின்றனர்.

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் இளைஞர்... ஏன் தெரியுமா?

போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபாரதங்கள் மூலமாக போலீசார் ஒருபுறம் கிடுக்கிப்பிடி போட்டு வரும் நிலையில், மறுபுறத்தில் போலீசார் வாகனத் தணிக்கை என்ற பெயரில் நடத்தும் சில விஷயங்கள் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திவிடுகிறது.

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் இளைஞர்... ஏன் தெரியுமா?

மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ் காரில் வந்தவருக்கு ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி போலீசார் தற்போது அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரை சேர்ந்த பியூஷ் வர்ஷ்னே என்பவருக்குதான் இப்படி ஒரு வினோத காரணத்திற்காக போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் இளைஞர்... ஏன் தெரியுமா?

இ-சலான் முறையில் பியூஷ் வர்ஷ்னேவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி பியூஷ் வர்ஷ்னே சலானை பெற்றுள்ளார். அதாவது புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே அவருக்கு இ-சலான் வழங்கப்பட்டுள்ளது. எனவே பழைய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின்படி அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் இளைஞர்... ஏன் தெரியுமா?

இந்த சம்பவத்திற்கு பிறகு காரில் செல்லும்போதெல்லாம் ஹெல்மெட் அணிந்தபடியேதான் பியூஷ் வர்ஷ்னே பயணம் செய்து கொண்டிருக்கிறார். போக்குவரத்து போலீசாருக்கு எதிரான ஒரு போராட்டமாக இதனை பியூஷ் வர்ஷ்னே முன்னெடுத்திருப்பதுதான் தற்போது சமூக வலை தளங்கள் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது.

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் இளைஞர்... ஏன் தெரியுமா?

மீண்டும் அபராதம் விதித்து விடுவார்களோ? என்ற அச்சம் காரணமாகவே, காரில் பயணிக்கும் போதெல்லாம் ஹெல்மெட் அணிந்து வருவதாக பியூஷ் வர்ஷ்னே தெரிவித்துள்ளார். பியூஷ் வர்ஷ்னேவின் வித்தியாசமான போராட்டம், இணையத்தில் வைரல் ஆனதால் தற்போது இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் இளைஞர்... ஏன் தெரியுமா?

தவறான காரணத்திற்காக பியூஷ் வர்ஷ்னேவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். தேவைப்பட்டால் அபராதத்தை ரத்து செய்வோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இ-சலானை வினியோகிக்கும் ஆபரேட்டர், அதற்கான காரணத்தை தவறாக குறிப்பிட்டு விடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் இளைஞர்... ஏன் தெரியுமா?

காரில் பயணம் செய்பவர்களுக்கு ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி போலீசார் அபராதம் விதிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் கூட இதுபோன்ற சம்பவங்கள் பல முறை நடைபெற்றுள்ளன. இ-சலானில்தான் தவறு நடக்கிறதா? என்றால், கையால் எழுதி கொடுக்கப்படும் ரசீதுகளிலும் கூட போலீசார் சில சமயங்களில் காரணத்தை தவறாக குறிப்பிட்டு விடுகின்றனர்.

மோட்டார்சைக்கிளில் வந்தவர் சீட்பெல்ட் அணியவில்லை என அபராதம்!

உத்தரபிரதேச மாநில போலீஸார் செய்யாத ஓர் குற்றத்திற்காக வாகன ஓட்டி ஒருவருக்கு அதிகபட்ச அபராதத்திற்கான செல்லாணை வழாங்கியுள்ளனர். இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார்சைக்கிளில் வந்தவர் சீட்பெல்ட் அணியவில்லை என அபராதம்!

டெல்லியைச் சேர்ந்தவர் சர்க் டெப் (முழுபெயர் தெரியவில்லை). இவருக்கு உத்தரபிரதேச மாநில போலீஸார், மணிக்கு 144 கிமீ வேகத்தில் சென்றதாக கூறி அபராதத்திற்கான செல்லாணை அனுப்பி வைத்துள்ளனர்.

மோட்டார்சைக்கிளில் வந்தவர் சீட்பெல்ட் அணியவில்லை என அபராதம்!

இதுகுறித்து அவர்கள் அனுப்பி வைத்துள்ள புகைப்படத்தில் மாருதி சுஸுகி பலனோ கார் இடம்பெற்றிருக்கின்றது. ஆனால், சர்க் டெப்-இடம் பலனோ கார் இல்லை என கூறப்படுகின்றது. அவர், மாருதி சுஸுகியின் ஆல்டோ காரைப் பயன்படுத்தி வருகின்றார். இது, 9 ஆண்டுகள் பழமையானதாகும்.

மோட்டார்சைக்கிளில் வந்தவர் சீட்பெல்ட் அணியவில்லை என அபராதம்!

ஆகையால், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், அவரது டுவிட்டர் பக்கத்தில், போலீஸார் அனுப்பி வைத்த புகைப்படத்தை பகிர்ந்து, தன்னிடம் மாருதிசுஸுகி ஆல்டோ கார் மட்டுமே இருப்பதாகவும், அதனை தான் 9 வருடங்களாக பயன்படுத்தி வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

மோட்டார்சைக்கிளில் வந்தவர் சீட்பெல்ட் அணியவில்லை என அபராதம்!

மேலும், உங்களால் முடிந்தால் இந்த காரை 144கிமீ வேகத்தில் ஓட்டிக் காட்டுங்கள். நான் அபராதத் தொகை ரூ. 2 ஆயிரத்தைச் செலுத்துகின்றேன் என்று சவால் விட்டுள்ளார்.

மோட்டார்சைக்கிளில் வந்தவர் சீட்பெல்ட் அணியவில்லை என அபராதம்!

சர்க் டெப் பெற்றிருக்கும் அபராத செல்லாண் வேறொரு நபருக்கு அனுப்புவதற்கு பதிலாக, இவருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

சிசிடிவி கேமிராவில் கிடைத்த காட்சிகளின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு, அந்த கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகள் தெளிவாக இல்லாததன் காரணத்தால் இத்தகைய குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகின்றது. இதற்கான அடுத்த நடவடிக்கை என்னவென்பது இதுவரை தெரியவில்லை.

மோட்டார்சைக்கிளில் வந்தவர் சீட்பெல்ட் அணியவில்லை என அபராதம்!

ஏற்கனவே, செய்த தவறிற்கே பலர் அபராதம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், உபி போலீஸாரின் இந்த நடவடிக்கை வாகன ஓட்டிக்கு மட்டுமின்றி தகவலையறிந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
2,000 Women Fined For Not Wearing Helmet. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X