கண்டதை ஊத்தி காரை வீண் ஆக்கீராதீங்க... இன்ஜின் ஆயிலில் இத்தனை வகை இருக்கா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

என்னென்ன வகையான இன்ஜின் ஆயில்கள் உள்ளன? அவை ஒவ்வொன்றுக்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கண்டதை ஊத்தி காரை வீண் ஆக்கீராதீங்க... இன்ஜின் ஆயிலில் இத்தனை வகை இருக்கா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

உங்கள் கார் இன்ஜின் ஆயுளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றி விட வேண்டும். ஆனால் இன்ஜின் ஆயிலை வாங்க செல்வதற்கு முன்பாக உங்கள் காருக்கு என்ன வகையான இன்ஜின் ஆயில் தேவை? என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். ஆம், இன்ஜின் ஆயிலை பொறுத்தவரையில் நிறைய வகைகள் இருக்கின்றன. இதில் சரியான வகையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

கண்டதை ஊத்தி காரை வீண் ஆக்கீராதீங்க... இன்ஜின் ஆயிலில் இத்தனை வகை இருக்கா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

அப்போதுதான் இன்ஜின் 'ஸ்மூத்' ஆகவும், அதிக திறன் மிக்கதாகவும் இருக்கும். ஆனால் இன்ஜின் ஆயிலில் என்னென்ன வகைகள் உள்ளன? ஒவ்வொன்றுக்கும் என்ன வித்தியாசம்? எது மிகவும் சிறந்தது? என்பது போன்ற கேள்விகளுக்கு பலருக்கும் பதில் தெரிவதில்லை. எனவே இன்ஜின் ஆயில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் அனைத்தையும் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

கண்டதை ஊத்தி காரை வீண் ஆக்கீராதீங்க... இன்ஜின் ஆயிலில் இத்தனை வகை இருக்கா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

மினரல் இன்ஜின் ஆயில் (Mineral Engine Oil)

இதனை 'கன்வென்ஷனல் இன்ஜின் ஆயில்' (Conventional Engine Oil) என்றும் அழைக்கின்றனர். இதுதான் உங்களது ஸ்டாண்டர்டு மோட்டார் ஆயில் ஆகும். கச்சா எண்ணெய்யில் (Crude Oil) இருந்து இது தயாரிக்கப்படுகிறது. தரையில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யை தொழிற்சாலையில் சுத்திகரித்து மினரல் இன்ஜின் ஆயிலை தயாரிக்கின்றனர்.

கண்டதை ஊத்தி காரை வீண் ஆக்கீராதீங்க... இன்ஜின் ஆயிலில் இத்தனை வகை இருக்கா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

மினரல் இன்ஜின் ஆயிலின் பிசுபிசுப்பு தன்மையை (அடர்த்தி) அதிகரிப்பதற்காக பல்வேறு துணை பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இப்படி பல்வேறு செயல்முறைகள் முடிந்த பின் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது உள்ள மாடர்ன் இன்ஜின் ஆயில்களுக்கு எல்லாம் பாதை அமைத்து கொடுத்த ஒன்றாக மினரல் இன்ஜின் ஆயில் கருதப்படுகிறது.

கண்டதை ஊத்தி காரை வீண் ஆக்கீராதீங்க... இன்ஜின் ஆயிலில் இத்தனை வகை இருக்கா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

சந்தையில் கிடைக்கும் மற்ற வகைகளை சேர்ந்த இன்ஜின் ஆயில்களுடன் ஒப்பிடும்போது மினரல் இன்ஜின் ஆயிலின் விலை குறைவு. இது மினரல் இன்ஜின் ஆயிலின் மிகப்பெரிய ப்ளஸ். ஆனால் உராய்வின் காரணமாக ஏற்படும் வெப்பத்திற்கு எதிராக குறைவான பாதுகாப்பை மட்டுமே வழங்குவது மினரல் இன்ஜின் ஆயிலின் மிகப்பெரிய பிரச்னை.

கண்டதை ஊத்தி காரை வீண் ஆக்கீராதீங்க... இன்ஜின் ஆயிலில் இத்தனை வகை இருக்கா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

அத்துடன் குளிரான சூழல்களிலும் மினரல் இன்ஜின் ஆயில் திறம்பட செயல்படுவதில்லை. மேலும் மினரல் இன்ஜின் ஆயிலை அடிக்கடி மாற்றி கொண்டே இருக்க வேண்டும். எனவே குறைவான விலையில் கிடைக்கிறது என்றாலும் கூட மினரல் இன்ஜின் ஆயிலை வாங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்து கொள்ளுங்கள்.

கண்டதை ஊத்தி காரை வீண் ஆக்கீராதீங்க... இன்ஜின் ஆயிலில் இத்தனை வகை இருக்கா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

முழு சிந்தடிக் இன்ஜின் ஆயில் (Full Synthetic Engine Oil)

முழு சிந்தடிக் ஆயிலானது, தொழிற்சாலை அல்லது ஆய்வகத்தில்தான் முற்றிலுமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக அவை மிகவும் சீரானதாக இருக்கும். இன்ஜின் ஆயில் தொழில்நுட்பத்தில் இது அதிநவீனமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. முழு சிந்தடிக் இன்ஜின் ஆயில் அருமையான பாதுகாப்பை வழங்குகிறது.

கண்டதை ஊத்தி காரை வீண் ஆக்கீராதீங்க... இன்ஜின் ஆயிலில் இத்தனை வகை இருக்கா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

அத்துடன் எரிபொருள் சிக்கனத்திலும், அதாவது மைலேஜை அதிகரிக்கும் விஷயத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. அதிகப்படியான அழுத்தம் அல்லது குறைந்த மற்றும் அதிக வெப்ப நிலை என அனைத்து சமயங்களிலும் முழு சிந்தடிக் இன்ஜின் ஆயில் சிறப்பாக செயலாற்றும். முழு சிந்தடிக் ஆயிலை உருவாக்குவதற்கு பின்னால் உள்ள அறிவியல் செலவு மிகுந்தது மற்றும் கடினமானது.

கண்டதை ஊத்தி காரை வீண் ஆக்கீராதீங்க... இன்ஜின் ஆயிலில் இத்தனை வகை இருக்கா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இதன் காரணமாக முழு சிந்தடிக் ஆயிலின் விலையும் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் முழு சிந்தடிக் ஆயில் நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கும். எனவே மினரல் இன்ஜின் ஆயிலை போல் இதனை அடிக்கடி மாற்றி கொண்டிருக்க தேவை இருக்காது. விலை அதிகம் என்றாலும் அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு ப்ளஸ்களை முழு சிந்தடிக் ஆயில் கொண்டுள்ளது.

கண்டதை ஊத்தி காரை வீண் ஆக்கீராதீங்க... இன்ஜின் ஆயிலில் இத்தனை வகை இருக்கா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

செமி-சிந்தடிக் இன்ஜின் ஆயில் (Semi-Synthetic Engine Oil)

இது மினரல் மற்றும் முழு சிந்தடிக் இன்ஜின் ஆயில் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட ரகமாகும். மினரல் ஆயிலை போன்று குறைவான விலையில் கிடைத்தாலும் முழு சிந்தடிக் ஆயிலை போன்ற செயல்திறனை இது வழங்குகிறது. மினரல் இன்ஜின் ஆயிலை காட்டிலும் 3 மடங்கு அதிக பாதுகாப்பை செமி-சிந்தடிக் இன்ஜின் ஆயில் கொடுக்கிறது.

கண்டதை ஊத்தி காரை வீண் ஆக்கீராதீங்க... இன்ஜின் ஆயிலில் இத்தனை வகை இருக்கா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

மினரல் இன்ஜின் ஆயில் உடன் சிறிய அளவில் சிந்தடிக் ஆயிலை கலந்து உருவாக்கப்படுவதுதான் செமி-சிந்தடிக் இன்ஜின் ஆயில். எனவே சிந்தடிக் பிளண்ட் ஆயில் (Synthetic Blend Oil) என்ற பெயரும் இதற்கு உண்டு. இங்கே பிளண்ட் என்ற வார்த்தைக்கு கலவை என்பது அர்த்தமாகும். இது மினரல் இன்ஜின் ஆயிலை விட சிறந்தது என்றாலும், முழு சிந்தடிக் இன்ஜின் ஆயில் அளவிற்கு சிறப்பானது கிடையாது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
3 different types of car engine oil mineral full synthetic semi synthetic
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X