Just In
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 11 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 13 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 14 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
Don't Miss!
- Sports
கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்!
- Movies
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓட்டி பாக்கணும்... ஸ்போர்ட்ஸ் பைக் ரைடரிடம் தகராறு செய்த இளைஞர்கள்... போலீஸை அழைத்ததும் நடந்த காமெடி
டெஸ்ட் ரைடு செய்வதற்கு பைக் வேண்டும் எனக்கேட்டு ஸ்போர்ட்ஸ் பைக் ரைடர் ஒருவரிடம், மூன்று இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சூப்பர் பைக்குகளை வாங்குவது மட்டுமல்லாது, ஓட்டுவதும் கடினம்தான். இதற்கு இந்தியாவில் உள்ள மோசமான சாலைகள் ஒரு காரணம் என்றால், சூப்பர் பைக்குகளை அதிசயமாக பார்க்கும் மற்ற வாகன ஓட்டிகளும் ஒரு காரணம். பைக்கின் விலை இவ்வளவு ரூபாயா? என வாயை பிளக்கும் அதே நேரத்தில், இவ்வளவுதான் மைலேஜ் தருமா? என சிலர் கிண்டலும் செய்வார்கள்.

இவர்கள் ஒரு ரகம் என்றால், சூப்பர் பைக்குகளை மிகவும் நெருக்கமாக பார்ப்பதற்கு, மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் சிலர் விரும்புவார்கள். இந்த ரகத்தினர் கூட பிரச்னையில்லை. இவர்களை தவிர மற்றொரு ரகத்தினர் இருக்கின்றனர். 'அதீத ஆர்வம்' கொண்ட இவர்களால்தான், சூப்பர் பைக்குகளை ஓட்டுபவர்களுக்கு நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்த வகையில் சமீபத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் சூப்பர் பைக் ஓட்டுபவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இந்த சம்பவம் தொடர்பான காணொளி, லைஃப் மோட்டோ வேர்ல்டு என்ற யூ-டியூப் சேனலில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? விரிவாக அலசும் வீடியோ!
இந்த காணொளி மிகவும் நீளமாக உள்ளது. ஆனால் ஆரம்பத்தில், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 (Suzuki GSX-S1000) நேக்கட் பைக்கில் ரைடர் ஒருவர் கிளம்புகிறார். இந்த பைக் என்ன வழங்குகிறது? என்பதை காட்டும் காணொளியை எடுப்பதற்காக அவர் பைக்கை சாலைக்கு கொண்டு வருகிறார். இந்த பைக்கில், ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் பொருத்தப்பட்டிருந்தது.

எனவே அதிக சத்தம் வந்த காரணத்தால், சாலையில் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஒரு கட்டத்தில், ஸ்கூட்டரில் வந்த மூன்று பேர், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 பைக்கில் வந்த நபரை நிறுத்துமாறு கைகளை அசைத்துள்ளனர். அந்த மூன்று பேரும் என்ன சொல்ல வருகிறார்கள்? என்பதை கேட்பதற்காக அவர் பைக்கை நிறுத்தியுள்ளார்.

அப்போது ஸ்கூட்டரில் இருந்து ஒருவர் இறங்கி வந்து, டெஸ்ட் ரைடு செய்ய பைக் வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு ஒப்புக்கொள்ளாமல் பைக் ரைடர் அங்கிருந்து கிளம்பி விட்டார். ஒரு சில கிலோ மீட்டர்கள் சென்ற பிறகு அந்த பைக் ரைடர் சாலையோரமாக பைக்கை நிறுத்தியுள்ளார். பைக்கில் என்னென்ன மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளன? என்னென்ன வசதிகள் உள்ளது? என்பதை காணொளியில் காட்டுவதற்காக அவர் பைக்கை நிறுத்தினார்.

அப்போது வேறு சில இளைஞர்கள் அந்த பைக்கை புகைப்படம் எடுக்கவும், செல்ஃபி எடுத்து கொள்ளவும் நின்றனர். அவர்கள் புகைப்படங்களை எடுக்க அந்த பைக் ரைடர் உதவியும் செய்தார். அந்த சமயத்தில், டெஸ்ட் ரைடு செய்ய வேண்டும் எனக்கேட்டு அந்த பைக் ரைடரை நிறுத்த முயன்ற மூன்று பேரும் அங்கு திடீரென வந்தனர். வந்ததும் அவர்கள் சண்டையிட தொடங்கினர்.

அத்துடன் டெஸ்ட் ரைடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் கைவிடவில்லை. மேலும் அவர்கள் பைக்கை மறித்து கொண்டனர். அந்த ரைடரை அங்கிருந்து செல்ல அவர்கள் விடவில்லை. இதற்கிடையே அந்த மூன்று பேரில் ஒருவர் இந்த சம்பவங்கள் காணொளியில் பதிவாகி கொண்டிருப்பதை தடுக்க முயன்றார். அத்துடன் கேமராவையும் பறிக்க முயற்சி செய்தார்.

ஆனால் தன்னிடம் இருந்து பைக்கையோ அல்லது சாவியையோ எடுக்க அந்த பைக் ரைடர் அனுமதிக்கவில்லை. இதன்பின் அந்த பைக் ரைடரும், மூன்று பேர் குழுவும் செல்போன் மூலம் தங்கள் நண்பர்களை அழைக்க தொடங்கினர். இதன்பேரில் பைக் ரைடரின் நண்பர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இதன்பின் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில், பைக் ரைடரும், அவரது நண்பர்களும் காவல் துறையின் உதவியை நாடுவது என முடிவு செய்தனர். அவர்கள் காவல் துறையினரிடம் செல்ல போகிறார்கள் என்பதை அறிந்ததும், பிரச்னை செய்த மூன்று பேரும் உடனடியாக அங்கிருந்து ஸ்கூட்டரில் தப்பி சென்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்துவதற்கு, அந்த பைக் ரைடர் முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் ஸ்கூட்டரில் வந்திருந்ததால், அங்கிருந்து தப்பித்து விட்டனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் சாலையில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழலாம். அப்படி நிகழும் பட்சத்தில் இந்த பைக் ரைடரை போல், நாமும் பொறுமையுடனும், கவனமாகவும் அந்த பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும்.