இப்படி ஒரு விஷயத்தை கேள்விபட்டதே இல்ல! கார் மீது பறவை எச்சமிட்டால் நிறைய பேர் சந்தோஷப்படுவாங்க! ஏன் தெரியுமா?

கார் மீது பறவைகள் எச்சம் இட்டால், ஒரு சிலர் ஏன் சந்தோஷப்படுகின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இப்படி ஒரு விஷயத்தை கேள்விபட்டதே இல்ல! கார் மீது பறவை எச்சமிட்டால் நிறைய பேர் சந்தோஷப்படுவாங்க! ஏன் தெரியுமா?

இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் மட்டுமே மூடநம்பிக்கைகள் அதிகளவில் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால் அது முற்றிலும் தவறு. ஏனெனில் உலகம் முழுவதும் பல்வேறு வகையான மூடநம்பிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக கார் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மத்தியில் ஏராளமான மூடநம்பிக்கைகள் பரவலாக காணப்படுகின்றன.

இப்படி ஒரு விஷயத்தை கேள்விபட்டதே இல்ல! கார் மீது பறவை எச்சமிட்டால் நிறைய பேர் சந்தோஷப்படுவாங்க! ஏன் தெரியுமா?

கார்களில் எலுமிச்சை பழத்தை கட்டி தொங்க விட்டால் கெட்டது நடக்காது என்ற மூடநம்பிக்கை இந்தியாவில் இருக்கிறது. இதேபோல் உலகம் முழுவதும் மிகவும் விசித்திரமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இதில், ஒரு சில மூடநம்பிக்கைகள் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கலாம்.

இப்படி ஒரு விஷயத்தை கேள்விபட்டதே இல்ல! கார் மீது பறவை எச்சமிட்டால் நிறைய பேர் சந்தோஷப்படுவாங்க! ஏன் தெரியுமா?

மயானத்தை கடக்கும்போது இப்படியா செய்வது?

மயானத்தை கடக்கும்போது மூச்சை பிடித்து வைத்து கொள்வதை, கார் டிரைவர்கள் மற்றும் பயணிகள் பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதாவது மயானத்தை கடக்கும் வரை அவர் மூச்சு விடுவதில்லை. மூச்சு விட்டால், சமீபத்தில் இறந்தவர்களுடைய ஆவி உடலுக்குள் நுழைந்து விடும் என்ற மூடநம்பிக்கைதான் இதற்கான காரணமாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு விஷயத்தை கேள்விபட்டதே இல்ல! கார் மீது பறவை எச்சமிட்டால் நிறைய பேர் சந்தோஷப்படுவாங்க! ஏன் தெரியுமா?

ஆனால் இதுவும் வெறும் மூடநம்பிக்கை மட்டுமே. எனவே மயானத்தை கடக்கும்போது, எப்போதும்போல் மூச்சு விடலாம். ஆவி உடலுக்குள் நுழைந்து விடும் என்ற அச்சத்தில், மூச்சு விடாமல் வேறு ஏதேனும் உடல் நலன் சார்ந்த பிரச்னைகளை தேவையில்லாமல் உருவாக்கி கொள்ளாதீர்கள். மற்றவர்கள் யாராவது இந்த மூடநம்பிக்கையை பின்பற்றினால், அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

இப்படி ஒரு விஷயத்தை கேள்விபட்டதே இல்ல! கார் மீது பறவை எச்சமிட்டால் நிறைய பேர் சந்தோஷப்படுவாங்க! ஏன் தெரியுமா?

புதிய காரில் வேண்டுமென்றே கீறல் போடலாமா?

புதிய கார் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஒரு சிலர் நம்புகின்றனர். எனவே புதிய காரை வாங்கியவுடன் நாமாகவே கீறல் போட்டு கொள்ள வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். உண்மையில் நிறைய பேர் இப்படி செய்கின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் கார் விபத்தில் சிக்காது என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது.

இப்படி ஒரு விஷயத்தை கேள்விபட்டதே இல்ல! கார் மீது பறவை எச்சமிட்டால் நிறைய பேர் சந்தோஷப்படுவாங்க! ஏன் தெரியுமா?

ஆனால் இதுவும் மூடநம்பிக்கைதான். இப்படி நினைப்பவர்கள் பேசாமல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கி கொள்ளலாம் அல்லவா? வேடிக்கையாக மட்டுமே இதனை கூறினோம். நீங்கள் தாராளமாக புதிய காரை வாங்கலாம். கஷ்டப்பட்டு சேர்த்து வாங்கிய பணத்தில் கீறல் எல்லாம் போடாதீர்கள். இதற்கும், விபத்துக்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை.

இப்படி ஒரு விஷயத்தை கேள்விபட்டதே இல்ல! கார் மீது பறவை எச்சமிட்டால் நிறைய பேர் சந்தோஷப்படுவாங்க! ஏன் தெரியுமா?

முத்தம் கொடுத்தால் அதிர்ஷ்டம் அடிக்குமா?

ஒரு சில கார் உரிமையாளர்கள், காரை ஓட்ட தொடங்குவதற்கு முன்பாக தங்கள் கை விரல்களை தாங்களே முத்தமிட்டு கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்னும் ஒரு சிலரோ காரின் சீலிங்கை, அதாவது உட்புற மேற்கூரையை தொட்டு கும்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதை எல்லாம் செய்தால், அதிர்ஷ்டம் அடிக்கும் என்பது பலரின் எண்ணம்.

இப்படி ஒரு விஷயத்தை கேள்விபட்டதே இல்ல! கார் மீது பறவை எச்சமிட்டால் நிறைய பேர் சந்தோஷப்படுவாங்க! ஏன் தெரியுமா?

அதேபோல் தீய சக்திகள் தங்களை நெருங்காது எனவும் நினைக்கின்றனர். ஆனால் இவையும் மூடநம்பிக்கை மட்டுமே. இப்படி எல்லாம் செய்தால் சாலை விபத்துக்கள் நடக்காது என்பதும் பலரின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். இதற்கும், சாலை விபத்துக்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எனவே இவையும் 100 சதவீதம் மூடநம்பிக்கை மட்டுமே.

இப்படி ஒரு விஷயத்தை கேள்விபட்டதே இல்ல! கார் மீது பறவை எச்சமிட்டால் நிறைய பேர் சந்தோஷப்படுவாங்க! ஏன் தெரியுமா?

பறவை எச்சம் இட்டால் பணம் கொட்டுமா?

பறவை காரின் மீது எச்சம் இட்டால், அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற மூடநம்பிக்கையும் கூட பலரிடம் இருக்கிறது. இவ்வாறு நடந்தால் செல்வம் கொட்டும் என பலரும் நம்புகின்றனர். ஆனால் இது மூடநம்பிக்கை மட்டுமே. எனவே ஒருவேளை பறவை உங்கள் கார் மீது எச்சம் இட்டால், அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் லாட்டரி வாங்க சென்று விடாதீர்கள்.

இப்படி ஒரு விஷயத்தை கேள்விபட்டதே இல்ல! கார் மீது பறவை எச்சமிட்டால் நிறைய பேர் சந்தோஷப்படுவாங்க! ஏன் தெரியுமா?

இதுபோன்ற மூடநம்பிக்கைகள் எப்படி தோன்றின? என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் நிறைய கார் உரிமையாளர்கள் இந்த மூடநம்பிக்கைகளை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். நீங்களும் கூட கார் ஓட்டும்போது ஏதேனும் மூடநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி இருக்கும்பட்சத்தில், கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரிவியுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
4 driving superstitions car owners actually believe
Story first published: Thursday, May 26, 2022, 13:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X