உயிர் போய் உயிர் வரும்... பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள்...

பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள் குறித்த பிரம்மிப்பான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உயிர் போய் உயிர் வரும்... பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள்...

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற விமான விபத்து இந்தியாவையே உலுக்கியுள்ளது. ஆபத்தான ஓடுபாதை கட்டமைப்பே இந்த விபத்திற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இது 'டேபிள் டாப்' வகையை சேர்ந்த விமான ஓடுபாதை ஆகும். கோழிக்கோடு விமான விபத்து சம்பவத்திற்கு பின்னர், 'டேபிள் டாப்' விமான ஓடுபாதை குறித்து அறிந்து கொள்வதில் பலரும் முனைப்புடன் உள்ளனர்.

உயிர் போய் உயிர் வரும்... பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள்...

பொதுவாக பெரும்பாலான விமான ஓடுபாதைகள் சமதளத்தில்தான் அமைக்கப்படுகின்றன. ஆனால் 'டேபிள் டாப்' வகையை சேர்ந்த விமான ஓடுபாதைகள் மலைக்குன்றுகளின் மீது கட்டமைக்கப்படுகின்றன. எனவே 'டேபிள் டாப்' வகையை சேர்ந்த ஓடுபாதைகளில் விமானங்கள் தரையிறங்குவதிலும், மேல் எழும்புவதிலும் பல்வேறு சிக்கல்களும், ஆபத்துக்களும் இருக்கின்றன.

உயிர் போய் உயிர் வரும்... பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள்...

கோழிக்கோட்டை போன்று உலகில் பல்வேறு விமான நிலையங்கள் மிகவும் அபாயகரமான ஓடுபாதைகளை கொண்டுள்ளன. இந்த ஓடுபாதைகளில் விமானங்கள் தரையிறங்கும்போதும், மேல் எழும்பும்போதும் திக்... திக்... உணர்வு ஏற்படும். அப்படி நமக்கு திகிலான உணர்வை ஏற்படுத்தும் விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகள் குறித்த பிரம்மிக்க வைக்கும் தகவல்களைதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

உயிர் போய் உயிர் வரும்... பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள்...

Image Courtesy: Hugues Mitton/ Wiki Commons

கோர்கெசவல் விமான நிலையம் (Courchevel Airport), பிரான்ஸ்

உலகில் மிகவும் சிறிய ஓடுபாதையை கொண்ட விமான நிலையங்களில் ஒன்றாக இது அறியப்படுகிறது. இங்கு உள்ள ஓடுபாதையின் நீளம் வெறும் 537 மீட்டர்கள் மட்டுமே. இந்த விமான நிலையம் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சறுக்கு விளையாட வேண்டும் என விரும்பும் நபர்களுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே மலைகளுக்கு மத்தியில் இது அமைந்துள்ளது.

உயிர் போய் உயிர் வரும்... பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள்...

Image Courtesy: Smallufo/ Wiki Commons

லுக்லா விமான நிலையம் (Lukla Airport), நேபாளம்

நேபாளத்தில் உள்ள சோலுகும்பு மாவட்டத்தில் லுக்லா ஏர்போர்ட் உள்ளது. இதன் பெயர் டென்சிங்-ஹிலாரி விமான நிலையம் என கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டது. இவர்கள் இருவரும்தான் முதன் முதலில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தவர்கள். அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களின் பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

உயிர் போய் உயிர் வரும்... பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள்...

எவரெஸ்ட் சிகரத்தை பார்க்க வருபவர்கள் இந்த விமான நிலையத்தை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இது உலகின் மிகவும் அபாயகரமான விமான நிலையங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இந்த விமான நிலையம் சுமார் 8,000 அடி உயரத்தில் (2,438 மீட்டர்கள்) அமைந்துள்ளது. இதன் ஓடுபாதை மிகவும் சிறியது. அத்துடன் அதிநவீன விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வசதிகளும் இங்கு இல்லை.

உயிர் போய் உயிர் வரும்... பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள்...

Image Courtesy: enrique galeano morales/ Wiki Commons

டோன்கோன்டீன் சர்வதேச விமான நிலையம் (Toncontin International Airport), ஹோண்டுராஸ்

ஹோண்டுராஸின் தலைநகர் டெகுசிகல்பாவின் மையப்பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர்கள் தொலைவில் டோன்கோன்டீன் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. பயணிகள் வந்து செல்வதற்கு மட்டுமின்றி, ராணுவ பயன்பாடுகளுக்கும் இந்த விமான நிலையம் பயன்படுத்தப்படுகிறது. பிரபல தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில், அபாயகரமான விமான நிலையங்களில் ஒன்றாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர் போய் உயிர் வரும்... பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள்...

Image Courtesy: Joao Carlos Medau/ Wiki Commons

காங்கோன்ஹாஸ் விமான நிலையம் (Congonhas Airport), பிரேசில்

பிரேசிலின் சா பாலோ நகரில், காங்கோன்ஹாஸ் விமான நிலையம் அமைந்துள்ளது. சில சமயங்களில் இது சா பாலோ விமான நிலையம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பிரேசிலில் உள்ள இரண்டாவது பிஸியான விமான நிலையம் இதுதான். வழுக்கும் தன்மையுடைய ஓடுபாதையை கொண்டிருக்கும் காரணத்தால், மிகவும் அபாயகரமான விமான நிலையமாக இது பார்க்கப்படுகிறது.

உயிர் போய் உயிர் வரும்... பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள்...

இந்த ஓடுபாதை காரணமாக பல்வேறு விபத்துக்களும் நடைபெற்றுள்ளன. எனினும் அதிகப்படியான மழை நீரை சேகரிக்கும் வசதிகளுடன் கூடிய புதிய ஓடுபாதைகள் மூலம் விமானங்கள் விபத்தில் சிக்குவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
4 Most Dangerous Airports. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X