1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...

1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் அட்டகாசமான கார் ஆக்ஸஸெரிகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...

நல்ல கார் ஆக்ஸெஸரிகள் இருந்தால், உங்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஆக்ஸஸெரிகளுக்கு செலவழிப்பதற்காக நம்மில் பலரிடம் பணம் இருப்பதில்லை. அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டியது கிடையாது. ஏனெனில் ஒரு சில சிறப்பான கார் ஆக்ஸஸெரிகள், மார்க்கெட்டில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கின்றன.

1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...

அப்படிப்பட்ட ஆக்ஸஸெரிகள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இங்கே வழங்கப்பட்டுள்ள ஆக்ஸஸெரிகள் 1,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. எனவே இந்த செய்தி உங்களுக்கு நிச்சயம் பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். வாருங்கள், இனி செய்திக்குள் செல்வோம்.

1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...

எலெக்ட்ரிக் காபி மக் (Electric Coffee Mug)

நீண்ட நேரம் பயணம் செய்வது நமக்கு களைப்பை ஏற்படுத்தி விடும். அப்படிப்பட்ட சமயங்களில் எல்லாம், கொஞ்சம் காபி இருந்தால் பரவாயில்லையே என்று எண்ண தோன்றும். நீங்கள் அப்படிப்பட்டவர் என்றால், உங்களுக்காக மார்க்கெட்டில் போர்ட்டபிள் காபி மக் கிடைக்கிறது. இது காபியை சூடாக வைத்திருக்கும். தேவைப்பட்டால் சூடு செய்து கொள்ளவும் முடியும்.

1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று ஒன்றுதான். 12V சாக்கெட்டில் ப்ளக் செய்து விட்டு ஒரு சில நிமிடம் காத்திருந்தால் போதும். அதன்பின் டிராபிக் சிக்னலில் நீங்கள் சூடான காபியை நீங்கள் என்ஜாய் செய்யலாம். காபி பிரியர்களுக்கு இது நிச்சயம் பயனுள்ள ஆக்ஸஸெரியாக இருக்கும். இதுகுறித்து கார்டாக் செய்தி வெளியிட்டுள்ளது.

1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...

எல்இடி ஆம்பியண்ட் லைட்ஸ் (LED Ambient Lights)

எல்இடி ஆம்பியண்ட் லைட்கள், தற்போது அனைத்து கார்களிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு வசதியாக உருவெடுத்து வருகிறது. எனினும் ஒரு காரின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது. ஆம்பியண்ட் லைட்கள், கார் கேபினுக்கு உள்ளே மனநிலையை ரம்மியமாக மாற்றுகின்றன. அத்துடன் பிரீமியம் உணர்வையும் கொடுக்கின்றன.

1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...

சந்தையில் பல்வேறு வகையான எல்இடி ஆம்பியண்ட் லைட்கள் கிடைக்கின்றன. இவற்றின் விலை மிகவும் குறைவுதான். அதேசமயம் விலை உயர்ந்த எல்இடி ஆம்பியண்ட் லைட்கள் ரிமோட் கண்ட்ரோல் வசதியுடன் வருகின்றன. இதன் மூலம் கலர் மற்றும் பிரகாசத்தை மாற்ற முடியும். உங்கள் காருக்கு இது சிறப்பான ஆக்ஸஸெரியாக இருக்கும்.

1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...

பூட் ஆர்கனைசர் (Boot organiser)

அலுவலகம் செல்வதாக இருந்தாலும் அல்லது வெளியூர்களுக்கு செல்வதாக இருந்தாலும், காருக்கு உள்ளே நீண்ட நேரத்தை செலவழிக்க வேண்டியுள்ளது. அப்போது காருக்குள் சில பொருட்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக போட்டு விடுகிறோம். உங்களுடன் வருபவர்களுக்கு பின் இருக்கை காலியாக இருக்க வேண்டுமென்றால், நீங்கள் பூட் ஆர்கனைசரை வாங்குவது சிறந்தது.

1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...

உங்கள் காரின் பூட் பகுதியில், நொறுக்கு தீனிகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இதர முக்கியமான பொருட்களை நேர்த்தியாக வைத்து கொள்ள உதவும் வகையில், தனித்தனியாக பிரிக்கப்பட்ட பெரிய கம்பார்ட்மெண்ட்களை இந்த பூட் ஆர்கனைசர்கள் கொண்டிருக்கும். இந்த பூட் ஆர்கனைசர்களும் மார்க்கெட்டில் குறைவான விலையில் கிடைக்கிறது.

1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...

கார் சீட் ஆர்கனைசர் (Car Seat Organiser)

காரில் நாம் பல பொருட்களை எடுத்து செல்வோம். சில சமயங்களில் செல்போன் போன்ற விலை உயர்ந்த பொருட்களை இருக்கையின் மேலே வைத்து விடுவோம். அப்போது செல்போன் கீழே விழுந்து சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் கார் சீட் ஆர்கனைசர் அருமையான தீர்வாக இருக்கும்.

1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...

காரின் முன் இருக்கையின் பின் பகுதியில், இந்த சீட் ஆர்கனைசரை பொருத்தி கொள்ள முடியும். இதில் உள்ள பாக்கெட்கள், உங்கள் செல்போன், டேப்லெட், தண்ணீர் பாட்டில்கள், ஆவணங்கள் மற்றும் இதர முக்கியமான பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு உதவி செய்யும். கார் சீட் ஆர்கனைசரும் குறைவான விலையில் மார்க்கெட்டில் கிடைக்கிறது.

1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...

வாக்கம் க்ளீனர் (Vacuum Cleaner)

காரின் கேபின் எப்போதும் மிகவும் சுத்தமாக இருப்பதையே அனைவரும் விரும்புவோம். ஆனால் என்னதான் முயற்சி செய்தாலும், ஒரு சில இடங்களை உங்களால் சுத்தம் செய்ய முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில், போர்ட்டபிள் வாக்கம் க்ளீனர் உதவிகரமாக இருக்கும். சந்தையில் குறைவான விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் வாக்கம் க்ளீனர்கள், கேபினை சுத்தமாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
5 Affordable Car Accessories. Read in Tamil
Story first published: Thursday, July 2, 2020, 20:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X