இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிகவும் விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கலாம்.

இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபல மனிதர்கள் மற்றும் பணக்காரர்கள் பெரும்பாலும் சொந்தமாக கார் ஓட்டுவதில்லை. இதற்கென அவர்கள் டிரைவர்களை பணியில் அமர்த்தி கொள்கின்றனர். எனவே வேகத்திற்கு பதிலாக காரின் ஸ்டைல் மற்றும் சொகுசு வசதிகள் போன்ற அம்சங்களுக்குதான் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

அதே சமயம் இந்தியாவை சேர்ந்த ஒரு சில பிரபலங்கள் வேகமான ஸ்போர்ட்ஸ் கார்களை வைத்திருக்கவே செய்கின்றனர். அவ்வாறு அதிவேகத்தில் பறக்க கூடிய கார்களை வைத்திருக்கும் ஒரு சில பிரபலங்களை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். வாருங்கள் இனி செய்திக்குள் செல்வோம்.

இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

ஷில்பா ஷெட்டி - லம்போர்கினி கல்லார்டோ (Shilpa Shetty - Lamborghini Gallardo)

லம்போர்கினி நிறுவனத்தின் மிக பிரபலமான மாடல்களில் ஒன்று கல்லார்டோ. பிரபல நடிகைகளில் ஒருவரான ஷில்பா ஷெட்டியிடம் லம்போர்கினி கல்லார்டோ கார் உள்ளது. இந்த காரின் 5.2 லிட்டர் வி10 இன்ஜின் அதிகபட்சமாக 562 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கிலோ மீட்டர்கள்.

இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

மல்லிகா ஷெராவத் - லம்போர்கினி அவென்டெடார் (Mallika Sherawat - Lamborghini Aventador)

உலகில் மிக வேகமான கார்களில் லம்போர்கினி அவென்டெடார் காரும் ஒன்று. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 349 கிலோ மீட்டர்கள் என்ற வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 6.5 லிட்டர் வி12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 740 பிஎஸ் பவரையும், 690 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும்.

இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டி விடும் திறன் லம்போர்கினி அவென்டெடார் காருக்கு உள்ளது. பிரபல நடிகைகளில் ஒருவரான மல்லிகா ஷெராவத் இந்த காரை வைத்துள்ளார். ஆனால் இந்தியாவில் அல்ல. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் மல்லிகா ஷெராவத் லம்போர்கினி அவென்டெடார் காரை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

யுவராஜ் சிங் - லம்போர்கினி முர்சிலாகோ (Yuvraj Singh - Lamborghini Murcielago)

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே புகழின் உச்சியை தொட்ட கார்களில் லம்போர்கினி முர்சிலாகோவும் ஒன்று. லம்போர்கினி முர்சிலாகோ காரில், 6.5 லிட்டர் வி12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 632 பிஎச்பி பவரையும், 660 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கி சீறிப்பாய்ந்து செல்ல கூடியது.

இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டி விடும் திறன் லம்போர்கினி முர்சிலாகோ காருக்கு உண்டு. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 330 கிலோ மீட்டர்கள். இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கிடம் இந்த தனித்துவமான லம்போர்கினி கார் இருக்கிறது.

இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

ஜான் ஆபிரகாம் - நிஸான் ஜிடி-ஆர் பிளாக் எடிசன் (John Abraham - Nissan GT-R Black Edition)

ஜான் ஆபிரகாமிடம் நிஸான் ஜிடி-ஆர் கார் உள்ளது. பாலிவுட் திரையுலகில் இருப்பவர்களிடம் இருக்கும் வேகமான கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரின் விலை சுமார் 2.3 கோடி ரூபாய். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விடும் திறன் இந்த காருக்கு உண்டு.

இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

இந்த காரில், 3.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 562 பிஎச்பி பவரையும், 630 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஜான் ஆபிரகாமிடம் உள்ள நிஸான் ஜிடி-ஆர் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 313.8 கிலோ மீட்டர்கள். ஜான் ஆபிரகாம் வாகனங்களை அதிகம் விரும்ப கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

பிரித்விராஜ் - லம்போர்கினி ஹூராகேன் (Prithviraj - Lamborghini Huracan)

லேட்டஸ்ட் லம்போர்கினி மாடல்களில் ஒன்றான ஹூராகேன் காரை பிரபல நடிகர் பிருத்விராஜ் வைத்துள்ளார். இந்த காரில், 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 572 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
5 Fastest Cars Of Indian Celebrities. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X