மீண்டும் வருமா... ஏக்கத்தை ஏற்படுத்திய 5 கார் மாடல்கள்!!

புத்தம் புது டிசைன், எக்கச்சக்க வசதிகள் என மக்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு புதிய மாடல்கள் வந்தாலும், மார்க்கெட்டில் இருந்த சில கார் மாடல்கள் என்றென்றும் நம் நெஞ்சில் குடியிருக்கும்.

இந்த காரை மீண்டும் அறிமுகப்படுத்துவார்களா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும். அந்தளவு, நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய மாடல்கள் பற்றி அசைபோடுவதற்காகத்தான் இந்த சிறப்பு செய்தி. விற்பனை நிறுத்தப்பட்டு இன்றும் நம் நெஞ்சில் ஏக்கத்தை கொடுத்திருக்கும் 5 கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

01. டொயோட்டா குவாலிஸ்

01. டொயோட்டா குவாலிஸ்

நடிகை ஜோதிகாவுக்கு மட்டுமல்ல, அனைவரின் நெஞ்சில் ஆழப்பதிந்த கார் மாடல். நம்பகமான எஞ்சின், இடவசதி, சொகுசு என பல விதத்திலும் நிறைவை தந்த மாடல். லட்சக்கணக்கான கிலோமீட்டர்களை தாண்டி ஓடிய குவாலிஸ் கார்களின் கதைகள் ஏராளம். . 2000ம் ஆண்டு இந்தியாவில் டொயோட்டாவின் முதல் கார் மாடலாக வெளியிடப்பட்டது. அதிலிருந்து 2005ம் ஆண்டு இந்தியாவில் விற்பனை இருந்த குவாலிஸ் காரின் விற்பனைக்கு திடீரென முற்றுப்புள்ளி வைத்தது டொயோட்டா. இது குவாலிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

குவாலிஸ் தொடர்ச்சி...

குவாலிஸ் தொடர்ச்சி...

குவாலிஸ் காருக்கு மாற்றாக வந்த இன்னோவாவை உடனடியாக இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், காலப்போக்கில் இந்தியர்களின் மனதை இன்னோவா மாற்றியது வேறு விஷயம். இந்த கார் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் பல ஆண்டுகளாக விற்பனையில் இருந்ததையடுத்து, அதற்கு மாற்றாக இன்னோவாவை அறிமுகம் செய்தது டொயோட்டா. டொயோட்டாவின் கிஜாங் பிக்கப் டிரக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாடல்தான் குவாலிஸ். இதன் வழியில்தான் இன்னோவா கார் அறிமுகம் செய்யப்பட்டது. மீண்டும் வருமா என ஏங்க வைத்த மாடலில் குவாலிஸ் காருக்கு முக்கிய இடமுண்டு.

02. ஃபோர்டு ஐகான்

02. ஃபோர்டு ஐகான்

ஃபோர்டு நிறுவனத்தின் பிராண்டுக்கு இந்தியாவில் முகவரி கொடுத்த மாடல். ஃபோர்டு ஐகான் வைத்திருப்பதை பெருமையாக கருதிய காலம் உண்டு. ஃபோர்டு கார்களுக்கே உரிய தனித்துவமான சிறப்பு, அதன் கையாளுமைதான். அதற்கு உதாரணமான மாடலில் ஃபோர்டு ஐகான் காரும் உண்டு. 2001ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது.

 ஃபோர்டு ஐகான் தொடர்ச்சி

ஃபோர்டு ஐகான் தொடர்ச்சி

இது ஃபோர்டு நிறுவனத்தின் ஒரு முத்திரை பதித்த மாடல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது. தற்போது பழைய கார் சந்தையிலும், இந்த கார்களை ஏராளமாக காண முடிகிறது. 74 பிஎச்பி பவரை அளிக்கும் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 94 பிஎச்பி பவர் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் மாடல் மற்றும் 94 பிஎச்பி பவரை வழங்கவல்ல 1.8 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக தற்போது கிளாசிக் என்ற பெயரில் விற்பனையாகும் பழைய ஃபியஸ்ட்டா கார் வந்தது. இந்த பிராண்டு பலரின் மனதில் ஏற்படுத்திய வடு அவ்வளவு சீக்கிரத்தில் அழியாது.

03. மாருதி பலேனோ

03. மாருதி பலேனோ

இன்றைக்கும் ராலி ரேஸ் டிரைவர்களின் விருப்பமான மாடல். 2000ம் ஆண்டு முதல் 2006 வரை விற்பனையில் இருந்தது. இதன் சிறப்பான கையாளுமையும், 94 பிஎச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் இந்த காருக்கு பெரும் ரசிகர்களை உருவாக்கியதற்கான முக்கிய காரணம்.

மாருதி பலேனோ தொடர்ச்சி

மாருதி பலேனோ தொடர்ச்சி

ராலி ரேஸ் டிரைவர்களுக்கு மட்டுமில்லை, இதன் விசாலமான பின்புற இருக்கை பல குடும்பத்தினரை கவர்ந்த ஒன்று. மேலும், மிகச்சிறப்பான பூட்ரூம் இடவசதி நீண்ட தூர பயணங்களை இனிமையாக்க உதவியது. இதற்கு மாற்றாக வந்த எஸ்எக்ஸ்4 கார் சமீபத்தில் சியாஸ் மூலமாக தலைமுறை மாற்றத்தை சந்தித்துள்ளது. மீண்டும் வருமா என ஏங்க வைத்த மாடல்களில் பலேனோவும் ஒன்று.

04. ஃபியட் பாலியோ

04. ஃபியட் பாலியோ

இந்தியாவில் ஃபியட் மறுபிறப்பு எடுப்பதற்கு உதவிய மாடல். 2001ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபியட் பாலியோ, அந்த ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த காருக்கான விருதை பெற்றது. மேலும், போட்டியாளர்களை ஒப்பிடும்போது மிகச் சிறந்த இடவசதி கொண்ட காராகவும் இருந்தது. சச்சின் டெண்டுல்கரை இந்த காருக்கான விளம்பர தூதராக ஃபியட் நியமித்ததுடன், அவரது பெயரில் ஸ்பெஷல் எடிசன் மாடலையும் வெளியிட்டது.

ஃபியட் பாலியோ தொடர்ச்சி...

ஃபியட் பாலியோ தொடர்ச்சி...

சச்சின் பெயரில் சிறப்பு பதிப்பு வெளியிடும் அளவுக்கு மிகச்சிறந்த மாடலாக இருந்தாலும், ஃபியட் நிறுவனத்தின் மோசமான சேவையின் காரணமாக இந்த சிறந்த மாடல் விற்பனையில் சோபிக்க முடியவில்லை. இந்த கார் 72 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வந்தது. பின்னர், டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டாலும், போதிய வரவேற்பு இல்லை. இந்தியாவில் ஃபியட் பிராண்டின் ரசிகர்களை அதிகரித்த பெருமை இந்த காரையே சாரும்.

05. அம்பாசடர்

05. அம்பாசடர்

இந்தியாவின் பட்டி தொட்டிகளை அலங்கரித்த மாடல் அம்பாசடர். இங்கிலாந்தை சேர்ந்த மோரிஸ் ஆக்ஸ்போர்டு சீரிஸ்- III காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல். 1958ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இந்தியாவில் உற்பத்தியில் இருந்தது.

அம்பாசடர் தொடர்ச்சி...

அம்பாசடர் தொடர்ச்சி...

இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின், 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 1.8 லிட்டர்ர இஸுகி பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைத்தது. கால மாற்றத்துக்கு தக்கவாறு இந்த காரை மேம்படுத்த தவறியதே, அம்பாசடர் சந்தைப் போட்டியை தாக்குப் பிடிக்க முடியாமல் விலகியது. எனினும், அம்பாசடரை மேம்படுத்தி அறிமுகம் செய்தால், வாங்குவதற்கு பலர் காத்துக் கிடக்கின்றனர் என்பதே உண்மை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
That's why we thought we'd reminisce over 5 cars that had that something we truly miss in today's world—soul.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X