திடீர் அறிவிப்பை வெளியிட்ட போலீஸ்... இனி ஆகப்போற கலெக்ஷனுக்கு முன்னாடி தல, தளபதி படம்லாம் ஒன்னுமே இல்ல!

சாலை விதிமுறைகளை மீறி அபராதம் பாக்கி வைத்திருப்பவர்களுக்கு ஆஃபர். பிப்11ம் தேதி முன்னர் அபராதம் செலுத்தினால் 50 சதவீத கட்டணத்தைச் செலுத்தினால் போதும் என அறிவிப்பைக் கர்நாடக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சாலையில் போலீசார் அவ்வப்போது வாகன தனிக்கையில் ஈடுபடுவது வழக்கம் இப்படியான சோதனையில் லைசென்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டு, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது, அதிக நபர்களை ஏற்றி வாகனம் ஓட்டுவது, இப்படியாக மோட்டார் வாகனத்திற்கு எதிரான சட்டங்களை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். இப்படியாகத் தினமும் லட்சக்கணக்கான வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

திடீர் அறிவிப்பை வெளியிட்ட போலீஸ்... இனி ஆகப்போற கலெக்ஷனுக்கு முன்னாடி தல, தளபதி படம்லாம் ஒன்னுமே இல்ல!

இன்று பெரு நகரங்களில் இப்படியாக அபராதம் விதிக்க போலீசாரே தேவையில்லை அதற்காக பிரத்தியேகமாக கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களைச் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதம் குறித்துக் குறிப்பிட்ட நபருக்கு ஆன்லைன் மூலம் நோட்டிஃபிகேஷன் செய்யப்படுகிறது.

இப்படியாக விதிக்கப்பட்ட ஏகப்பட்ட அபராதங்கள் வசூல் செய்யப்படாமல் இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் மொத்தம் ரூ530 கோடி அபராதம் வசூல் செய்யப்படாமல் பாக்கியில் இருக்கிறது. இதில் பெங்களூருவில் மட்டும் ரூ500 கோடி அபராத கட்டண வசூல் பாக்கி உள்ளது. மீதம் உள்ள ரூ30 கோடி தான் மாநிலத்தில் மற்ற பகுதியில் பாக்கி உள்ளது.

இந்நிலையில் இப்படியாகப் பாக்கியுள்ள அபராதங்களை வசூலிக்கும் வகையில் கர்நாடக மாநில போக்குவரத்து போலீசார் ஒரு புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளனர். அதன்படி வரும் பிப் 11ம் தேதிக்குள் எந்த வாகனமாக இருந்தாலும் கர்நாடக பகுதியில் அபராதம் விதிக்கப்பட்டுக் கட்டாமல் இருந்தால் இருக்கும் அத்தனை அபராதத்திற்கும் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு பாதியை மட்டும் கட்டினாலே அபராதத்திலிருந்து விடுபட முடியும் என அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் கடந்த ஜனவரி 27ம் தேதி நீதிபதி வீரப்பா முன்னிலையில் ஒரு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறையின் இந்த கோரிக்கையை ஏற்று இதை விரைவாக அமல் படுத்த முடிவு செய்யப்பட்டது. இது தற்போது நடை முறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏகப்பட்ட பணம் வசூலாகி விடும் என நம்பப்படுகிறது. பாக்கியுள்ள 530 கோடியில் ரூ265 கோடி வசூலாகாவிட்டாலும் ரூ150 கோடி வரை வசூலாகும் என எதிர்பார்க்கலாம்.

இப்படியாகப் பெங்களூருவில் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தங்கள் வாகனங்கள் மீதுள்ள அபராதத்தைச் செலுத்திச் சரி செய்ய நினைத்தால் பெங்களூருவில் உள்ள 48 டிராஃபிக் போலீஸ் ஸ்டேஷனில் எந்த ஸ்டேஷனிற்கு வேண்டுமானாலும் சென்று அபராத தொகையை 50 சதவீத தள்ளுபடியுடன் கட்டலாம். அல்லது நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது டிராஃபிக் மேனேஜ்மென்ட் சென்டர்களிலும் கட்டாலாம்.

அல்லது ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றால் https://bangaloretrafficpolice.gov.in என்ற தளத்தில் செலுத்தலாம். பெங்களூருவிற்கு வெளியில் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் அபராதம் செலுத்த விரும்பினால் கர்நாடகா ஒன் அல்லது காவல் நிலையங்களில் செலுத்தலாம்.

Most Read Articles
English summary
50 percent discount on all pending traffic challans till feb 11
Story first published: Friday, February 3, 2023, 18:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X