ஊரடங்கினால் ஹோண்டா சிட்டி காரை வீடாக மாற்றிக்கொண்ட 6 அடி பாம்பு.. இன்னும் என்னென்ன நடக்க இருக்கிறதோ?

ஊரடங்கினால் பல நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்திருந்த ஹோண்டா சிட்டி காருக்குள் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதுகுறித்த தகவலை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஊரடங்கினால் ஹோண்டா சிட்டி காரை வீடாக மாற்றிக்கொண்ட 6 அடி பாம்பு... இன்னும் என்னென்ன நடக்க இருக்கிறதோ..?

கொரோனா வைரஸினால் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் மக்கள் அனைவரும் முக்கியமான பணியை தவிர்த்து மற்ற அனைத்து நேரங்களிலும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கு சமீபத்தில் நீட்டிக்கப்பட்டிருந்ததால் இந்த நிலை இன்னும் சில வாரங்களுக்கு தொடரவுள்ளது.

ஊரடங்கினால் ஹோண்டா சிட்டி காரை வீடாக மாற்றிக்கொண்ட 6 அடி பாம்பு... இன்னும் என்னென்ன நடக்க இருக்கிறதோ..?

மக்கள் பணிக்கு செல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வீட்டிற்குள்ளேயே இருப்பதால் அவர்கள் பயன்படுத்தி வந்த வாகனங்கள் பல நாட்களாக ஒரு ஒரத்திலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஒரு சிலர், பயன்படுத்தாததால் கழுவி சுத்தம் செய்வதற்கு கூட வாகனத்தை தொடுவதில்லை.

ஊரடங்கினால் ஹோண்டா சிட்டி காரை வீடாக மாற்றிக்கொண்ட 6 அடி பாம்பு... இன்னும் என்னென்ன நடக்க இருக்கிறதோ..?

பைக்கென்றால் பரவாயில்லை. அருகே உள்ள சந்தைக்கு எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது. கார்கள் தான் பாவம். தினமும் ஒருவேளையாவது பயன்படுத்தப்பட்டுவிடுகின்ற பைக்குகளே ஊரடங்கினால் பழுதாகி மெக்கானிக் கடைகளைக்கு குவிந்து வருகின்ற செய்தியினை பார்த்திருப்போம்.

ஊரடங்கினால் ஹோண்டா சிட்டி காரை வீடாக மாற்றிக்கொண்ட 6 அடி பாம்பு... இன்னும் என்னென்ன நடக்க இருக்கிறதோ..?

கார்கள் என்ன நிலையில் உள்ளன என்பதை ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்பு தான் தெரியும். அப்படி ஊரடங்கினால் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா சிட்டி கார் ஒன்றை 6 அடி நீளமுள்ள பாம்பு தனது வீடாக மாற்றி கொண்டு பயன்படுத்தி வந்துள்ளது.

ஊரடங்கினால் ஹோண்டா சிட்டி காரை வீடாக மாற்றிக்கொண்ட 6 அடி பாம்பு... இன்னும் என்னென்ன நடக்க இருக்கிறதோ..?

இந்த சம்பவம் நடைபெற்றுள்ள இடம் ஹரியானா மாநிலம் கர்னல் ஆகும். இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவில் பாம்பு காரின் சஸ்பென்ஷனை சுற்றி கொண்டுள்ளது. முதலில் பாம்பு காருக்குள் நுழைவதை தான் அங்கு இருந்தவர்கள் பார்த்திருக்க வேண்டும்.

ஊரடங்கினால் ஹோண்டா சிட்டி காரை வீடாக மாற்றிக்கொண்ட 6 அடி பாம்பு... இன்னும் என்னென்ன நடக்க இருக்கிறதோ..?

ஏனெனில் இந்த வீடியோவின் ஆரம்பத்தில் காருக்குள் பாம்பு உள்ளது என்று தான் மாறி மாறி கூறி கொள்கிறார்களே தவிர்த்து மற்றப்படி யவருக்கும் பாம்பு காருக்குள் எந்த இடத்தில் உள்ளது என்பது தெரியவில்லை. இதனால் ஒவ்வொரு இடமாக தேட ஆரம்பிக்கின்றனர்.

ஊரடங்கினால் ஹோண்டா சிட்டி காரை வீடாக மாற்றிக்கொண்ட 6 அடி பாம்பு... இன்னும் என்னென்ன நடக்க இருக்கிறதோ..?

காரின் பொனெட் உள்பட அவர்கள் முடிந்த அளவிற்கு தேடியும் பாம்பை கண்டுப்பிடிக்க முடியாததால் சில உதவியாளர்களை நாடுகின்றனர். அதாவது காரின் உரிமையாளர் உள்பட சிலர் காரை பாம்புடனே அருகில் இருந்து கார் வாஷ் செய்யும் இடத்திற்கு ஓட்டி சென்று காரின் அடிப்பகுதியில் தேட ஆரம்பிக்கின்றனர்.

ஊரடங்கினால் ஹோண்டா சிட்டி காரை வீடாக மாற்றிக்கொண்ட 6 அடி பாம்பு... இன்னும் என்னென்ன நடக்க இருக்கிறதோ..?

அப்போது தான் அவர்களுக்கு பாம்பு சஸ்பென்ஷன் பகுதியில் காட்சியளித்துள்ளது. உடனே பாம்பை வெளியே எடுத்தவர்கள் அதனை அருகில் இருந்த பகுதிகளுள் விடுகின்றனர். இவ்வாறு காருக்குள் பாம்பு புகுந்து கொள்வது இந்தியாவில் இது ஒன்றும் முதல்முறையல்ல. இது போன்ற நிகழ்வுகளை இதற்கு முன்னரும் பல முறை பார்த்துள்ளோம்.

ஏனெனில் பாம்புகளின் இரத்தம் குளிர்ச்சியானவை. இதனால் அவை வெப்பம் மிகுந்த இடங்களிலேயே தங்குவதற்கு விருப்பப்படுகின்றன. அதற்கு ஆட்டோமொபைல் வாகனங்கள் மிக சரியான தேர்வாகும். எனவே நீண்ட நாட்களுக்கு பிறகு காரை இயக்கவுள்ளீர்கள் என்றால் காரில் அமர்வதற்கு முன்னர் காரின் பொனெட், விண்ட்ஸ்க்ரீன் உள்ளிட்ட இடங்களில் பாம்பு ஏதேனும் குடியிருந்து வருகிறதா என்பதை ஒரு முறை சரிப்பார்த்து கொள்ளுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
6-foot snake finds shelter inside a Honda City
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X