ரூ10 செலவில் 150 கி.மீ பயணம்! 6 பேர் செல்லும் டூவீலரை வடிவமைத்து இளைஞர் சாதனை! வீடியோ வைரல்!

இளைஞர்கள் ஒருவர் 6 பேர் அமர்ந்து செல்லும் எலெக்ட்ரிக் டூவீலரை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இவர் அந்த எலெக்ட்ரிக் டூவீலரை பயன்படுத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் ஆனந்த் மஹிந்திரா இவர் அவ்வப்போது சில வித்தியாசமான வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்வார். இவர் பகிர்ந்த பல வீடியோக்கள் இந்தியா முழுவதும் வைரலாக மாறியுள்ளது. குறிப்பாக வாகனம் குறித்த ஏதாவது வித்தியாசமான வீடியோக்கள் வந்தால் அதை நிச்சயம் பகிர்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ தான் தற்போது சமூகவலைத்தளங்களில் செம டிரெண்டிங்காக மாறியுள்ளது.

ரூ10 செலவில் 150 கி.மீ பயணம்! 6 பேர் செல்லும் டூவீலரை வடிவமைத்து இளைஞர் சாதனை! வீடியோ வைரல்!

இந்த வீடியோவில் இளைஞர்கள் ஒருவர் 6 பேர் அமர்ந்து செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளார். 2 வீல்கள் மட்டுமே கொண்ட இந்த ஸ்கூட்டரில் ஒருவர் பின் ஒருவராக டிரைவர் சேர்த்து மொத்தம் 6 பேர் பயணம் செய்யலாம். இந்த வீடியோவில் முதலில் இதை ஒரு இளைஞர் மட்டும் ஓட்டி வருகிறார். பின்னால் மீதி 5 பேர் அமர்வதற்கான இருக்கை இருக்கிறது. அது மட்டுமல்ல அவர்கள் வாகனம் பயணம் செய்யும் போது பேலன்ஸ் தவறாமல் இருக்க அவர்கள் பிடித்துக்கொள்ள ஒரு கைபிடி இருக்கிறது. கால்களை வைத்துக்கொள்ள புட்ரெஸ்டும் இருக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் டூவீலரில் 6 பேர் பயணம் செய்யலாம் என்பது மட்டும் விஷயம் இல்லை. இதில் உள்ள பேட்டரி மற்றும் ரேஞ்சும் மிகவும் முக்கியம். இந்த வீடியோவில் இந்த இளைஞர் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜில் 150 கி.மீ பயணிக்கும் என கூறினார். அதாவது பேட்டரியை முழுமையாக சார்ஜ் போட்டு 6 பேர் 150 கி.மீ வரை பயணிக்கலாமாம். இது மட்டுமல்ல இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 8-10 ரூபாய் மட்டுமே செலவாகும். அப்படி என்றால் வெறும் ரூ10 செலவில் 150 கி.மீ பயணிக்க முடியும்.

அதுவும் 6 பேர் பயணித்தால் ஒரு நபருக்கு வெறும் ரூ1.66 தான் செலவாகும். இவ்வளவு குறைந்த செலவில் 150 கி.மீ பயணம் இதுவரை எந்த வாகனத்திலும் சாத்தியமில்லை. ஆனால் இந்த எலெக்ட்ரிக் டூவீலரின் வேகம் குறித்த தகவல்கள் இல்லை. ஆனால் இந்த வீடியோவில் மேலும் சில அம்சங்கள் இருப்பதைக் காண முடிகிறது. ஸ்கூட்டரின் முன்பக்கம் எல்இடி லைட் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இது ஹெட்லைட்டாக வேலை செய்யும். இரவு நேரங்களில் இந்த ஸ்கூட்டரை பயன்படுத்த உதவும்.

அடுத்தாக மிக முக்கியமாக இந்த ஸ்கூட்டரில் சஸ்பென்சனை பொருத்தவரை முன்பக்கமும், பின்பக்கமும், டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ள மேடுகள் மற்றும் சாலைகளில் வேகத்தடைகள் இருந்தாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் பயணிக்க முடியும். இந்த பைக்கின் பேட்டரி மற்றும் மோட்டார் பின் வீல் உடன் தான் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவின் இறுதியில் இதில் 6 பேர் அமர்ந்து ரோட்டில் பயணிக்கின்றனர். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்க்க நன்றாக இருந்தாலும் இது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை. 6 பேர் அமரும் அளவிற்கு நீளமாக இருப்பதால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை திருப்புவது கடினம், வேண்டும் என்றால் இதை நீண்ட நிலப் பரப்பு கொண்ட உள் கட்டமைப்பு பயன்பாட்டிற்காக வேண்டுமானால் பயன்படுத்தலாம் அல்லது பெரிய பெரிய மால்களில் சிறுவர்களுக்கான ரைடிற்காக பயன்படுத்தலாம்.

இந்த எலெக்ட்ரிக் டூவீலரை வடிவமைத்த இளைஞர்கள் இதைச் செய்வதற்காக ரூ10-12 ஆயிரம் வரை செலவானதாக கூறியுள்ளார். மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட எலெக்டரிக் டூவீல் இது இந்த எலெக்ட்ரிக் டூவீலர் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
6 seater electric vehicle with 150 km range video gone viral
Story first published: Friday, December 2, 2022, 14:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X