தமிழகத்தில் சிக்கிய ஹைவே கொள்ளையர்கள்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற புது டெக்னிக்... என்னனு தெரியுமா?

தமிழக நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் கொள்ளையடிக்க புதிய டெக்னிக்கை கையாண்ட கும்பல் சிக்கியுள்ளது.

தமிழகத்தில் சிக்கிய ஹைவே கொள்ளையர்கள்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற புது டெக்னிக்... என்னனு தெரியுமா?

இன்றைய கால கட்டத்தில், வாகனங்களில் ஒரு இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் பத்திரமாக வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. இந்திய சாலைகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. இதனால் வாகனங்களில் செல்வதற்கு பதிலாக நடந்து சென்று விடலாமே என்றெல்லாம் கூட வாகன ஓட்டிகள் எண்ண தொடங்கி விட்டனர்.

தமிழகத்தில் சிக்கிய ஹைவே கொள்ளையர்கள்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற புது டெக்னிக்... என்னனு தெரியுமா?

இதற்கு அடுத்தபடியாக வாகன ஓட்டிகள் சந்திக்கும் மற்றொரு முக்கியமான பிரச்னை விபத்து. உலகிலேயே சாலை விபத்து அபாயம் அதிகம் நிறைந்த நாடாக இந்தியா உள்ளது. இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. தங்கள் இஷ்டத்திற்கு அவர்கள் வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் சிக்கிய ஹைவே கொள்ளையர்கள்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற புது டெக்னிக்... என்னனு தெரியுமா?

இத்தகைய வாகன ஓட்டிகளால், மற்றவர்களும் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுபோதாதென்று வாகன ஓட்டிகளிடம் கொள்ளையடிக்கும் கும்பல் வேறு இந்தியாவில் அதிகமாக உலா வருகிறது. புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி, வாகன ஓட்டிகளிடம் இருந்து வாகனம் மற்றும் பணத்தை கயவர்கள் லாவகமாக சுருட்டி செல்கின்றனர்.

தமிழகத்தில் சிக்கிய ஹைவே கொள்ளையர்கள்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற புது டெக்னிக்... என்னனு தெரியுமா?

அப்படிப்பட்ட ஒரு கும்பல் தற்போது தமிழகத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு பெரும்பாலும் யாரும் உதவி செய்ய முன்வருவதில்லை. காவல் துறை, வழக்குகள் மீதான அச்சமே இதற்கு காரணமாக உள்ளது.

தமிழகத்தில் சிக்கிய ஹைவே கொள்ளையர்கள்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற புது டெக்னிக்... என்னனு தெரியுமா?

ஆனால் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தவர்களை எவ்வகையிலும் தொந்தரவு செய்ய கூடாது என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. இதுதவிர சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கு பரிசுகளையும் ஒரு சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் மத்தியில் தற்போது ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிக்கிய ஹைவே கொள்ளையர்கள்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற புது டெக்னிக்... என்னனு தெரியுமா?

எனவே சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு மக்கள் தற்போது ஓரளவிற்கு உதவ தொடங்கியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் தற்போது பிடிபட்டுள்ள கும்பல், மக்கள் மனதில் இருந்து உதவும் மனப்பான்மையை அழித்து விடுமோ? என்று அச்சம் கொள்ள வேண்டியதாக உள்ளது. ஆம், விபத்துக்களில் சிக்கியது போல் நாடகமாடி வாகன ஓட்டிகளிடம் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

தமிழகத்தில் சிக்கிய ஹைவே கொள்ளையர்கள்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற புது டெக்னிக்... என்னனு தெரியுமா?

நெல்லை மாநகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள நெடுஞ்சாலைகளில் இந்த கும்பல் சமீப காலமாக கைவரிசை காட்டி வந்துள்ளது. விபத்துக்களில் சிக்கி உயிருக்கு போராடுவதை போல் அவர்கள் நடித்து வந்துள்ளனர். இதை பார்த்ததும் உதவிக்கு ஓடி வருபவர்களை தாக்கி, டூவீலர்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தமிழகத்தில் சிக்கிய ஹைவே கொள்ளையர்கள்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற புது டெக்னிக்... என்னனு தெரியுமா?

இதுகுறித்து போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. எனவே கொள்ளையர்களை பிடிப்பதற்காக பாளையங்கோட்டை போலீசார் தனிப்படை அமைத்தனர். அவர்கள் நெடுஞ்சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக தற்போது கொள்ளையர்கள் போலீசார் வசம் சிக்கியுள்ளனர்.

தமிழகத்தில் சிக்கிய ஹைவே கொள்ளையர்கள்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற புது டெக்னிக்... என்னனு தெரியுமா?

சமீபத்தில் நெடுஞ்சாலையில் டூவீலர்களில் அதிவேகமாக வந்த ஆறு இளைஞர்களை போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவர்கள்தான் விபத்தில் சிக்கியது போன்று நடித்து வாகன ஓட்டிகளிடம் இருந்து டூவீலர்கள் மற்றும் பணத்தை திருடி சென்ற கொள்ளை கும்பல் என்பது தெரியவந்தது.

தமிழகத்தில் சிக்கிய ஹைவே கொள்ளையர்கள்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற புது டெக்னிக்... என்னனு தெரியுமா?

அவர்கள் நெல்லை பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், சங்கரநாராயணன், மாரிசக்தி, முத்துவேல், ஹரிகரன் மற்றும் மணிகண்டன் ஆவர். இவர்கள் அனைவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து நான்கு டூவீலர்கள் மற்றும் 16,000 ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் சிக்கிய ஹைவே கொள்ளையர்கள்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற புது டெக்னிக்... என்னனு தெரியுமா?

இந்த சம்பவம் எதிரொலியாக இரவு நேரங்களில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய மக்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது. ஆனால் இதற்காக உதவி செய்யாமல் இருந்து விடாதீர்கள். அச்சத்தால் ஒரு உயிர் பறிபோவது கொடுமையானது. எனினும் உதவி என்றாலும், நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
6 Vehicle Thieves Arrested In Tamil Nadu. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X