என்ன கொடுமை இது... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி தீ பிடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாப பலி...

மகாராஷ்டிரா மாநிலத்தில் எலெக்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் பலியாகியுள்ளான். இது குறித்த விரிவான தெளிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

என்ன கொடுமை இது . . . எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி தீ பிடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாப பலி . . .

இந்தியாவில் இந்தாண்டு மார்ச் மாதம் முதல் பல்வேறு இடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து ஏரியும் சம்பவம் வரிசையாக நடந்து வருகிறது. தொடர்ந்து பல நிறுவனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்ததால் இதற்கான காரணத்தைக் கண்டறியும்படி மத்திய அரசும் குழு ஒன்றை அமைத்ததது. இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரிவதற்கு முக்கியமான காரணம் இதில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் தான்.இந்த பேட்டரிகள் அதிகமாகச் சூடாகி தீப்பிடிக்கிறது என கூறுபடுகிறது.

என்ன கொடுமை இது . . . எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி தீ பிடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாப பலி . . .

இந்நிலையில் இதே போன்ற மற்றொரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்திலுள்ள பால்ஹரில் உள்ள வாசி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து எரிந்ததில் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த 7 வயது சிறுவன் பெயர் அன்சாரி ஷானவாஸ், இவனது தந்தை ஒரு அசெம்பிள் செய்த வாகனத்தைப் பயன்படுத்தி வந்தார்.

என்ன கொடுமை இது . . . எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி தீ பிடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாப பலி . . .

அந்த வாகனத்தில் பேட்டரியை மட்டும் தனியாகக் கழட்டி சார்ஜ் போட்டுக்கொள்ள முடியும். இவர் வழக்கமாக இரவு வீட்டிற்கு வந்ததும் வாகனத்தின் பேட்டரியை கழட்டி சார்ஜில் போட்டு விடுவார் இரவு முழுவதும் சார்ஜ் ஏறியதும். காலையில் அதைக் கழட்டி வாகனத்தில் மாட்டிவிட்டுப் பயணிக்கத் துவங்குவார். இப்படியாக அவர் சம்பவத்தன்று சார்ஜ் ஏற்றியுள்ளார். 7 வயது சிறுவனும் அவனது பாட்டியும் சம்பவத்தன்று பேட்டரி சார்ஜ் போடப்பட்டிருந்த அறையிலேயே தூங்கினர்.

என்ன கொடுமை இது . . . எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி தீ பிடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாப பலி . . .

இந்நிலையில் அதிகாலை 4.10 மணிக்கு மணிக்கு திடீரென அந்த அறை தீப்பிடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளான் அவனது பாட்டி லேசான காயமடைந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிறுவன் 70 சதவீதம் தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டான் என டாக்டர்கள் சொல்லியுள்ளனர். பாட்டிக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

என்ன கொடுமை இது . . . எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி தீ பிடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாப பலி . . .

இந்த சம்பவத்தில் தீப்பிடித்து எரிந்தது எந்த பிராண்ட் வாகனத்தின் பேட்டரி என்ற தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் பேட்டரியை தனியாகக் கழட்டி சார்ஜ் போடும் முறையில் உள்ள வாகனத்தின் பேட்டரி என்று மட்டும் தெரியவந்துள்ளது. இது குறித்து தற்போது விசாரணை நடந்துவருகிறது. இதற்கு முன்னர் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் பேட்டரி தயாரிப்புக்காக புதிய விதிகள் வகுக்கப்பட்டது. அதன்படி இனி தயாராகும் எலெக்ட்ரிக் வாகனங்களில் குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றித் தயாரிக்கப்பட்ட பேட்டரிகள் தான் பயன்படுத்தப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

என்ன கொடுமை இது . . . எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி தீ பிடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாப பலி . . .

மத்திய அரசு இந்த விதிமுறைகளைக் கடந்த 1ம் தேதியே அமலுக்குக் கொண்டு வந்துவிட்டது. ஆனால் இதற்கு 2 மாதங்கள் கெடு விதித்துள்ளது. புதிய நடைமுறைப்படி டிச1க்கும் கட்டாயம் மாற வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்துள்ளது. இது முதற்கட்ட மாற்றம் தான். இரண்டாம் கட்ட மாற்றத்திற்கு 2023 மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு கெடுத்துள்ளது.இந்த மாற்றங்கள் பேட்டரியில் செல், சார்ஜர், பேட்டரி பேக்கின் வடிவமைப்பு, பேட்டரி சூடாகுதல் உள்ளிட்டைவைகளுக்கான தரக்கட்டுப்படுகளாகும்.

என்ன கொடுமை இது . . . எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி தீ பிடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாப பலி . . .

தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் நடந்து வருவது மக்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதுள்ள நம்பிக்கையை மெல்ல மெல்லப் போக்கி வருகிறது. செலவுகளை மிச்சம் செய்ய நினைத்து எலெக்டரிக் வாகனங்களைப் பயன்படுத்த நினைத்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் எனப் பலர் கருதுகின்றனர். இருந்தாலும் இது மேம்பாடுகள் நடந்து வருவதாலும் அரசு உடனடியாக இந்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டதாலும் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

என்ன கொடுமை இது . . . எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி தீ பிடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாப பலி . . .

நீங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தினால் அதன் பேட்டரிகளை அவ்வப்போது கவனியுங்கள், பேட்டரிகளை பராமரிக்க வேண்டியது அவசியம். நீங்கள் பேட்டரிக்கு சார்ஜ் போடும் போது பேட்டரி சூடாகிறதா என்பதையும் கவனியுங்கள், இதனால் நீங்கள் பெரும் விபத்திலிருந்து கூட தப்பிக்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
7 year old boy dies in electric scooter battery explode in Maharastra
Story first published: Monday, October 3, 2022, 16:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X