முதியவரை தாக்கிவிட்டு காரில் தப்பித்து சென்ற வாலிபர்கள்... சிசிடிவி வீடியோவால் சிக்கினர்!!

80 வயது முதியவரை தாக்கி அவரிடம் இருந்து ப்ரெஸ்லெட் உள்ளிட்ட பொருட்களை திருடியதற்காக 11 வயதுடைய ஒரு சிறுவரும் 17 வயதுடைய வாலிபரும் அமெரிக்கா, கலிஃபோர்னியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதியவரை தாக்கிவிட்டு காரில் தப்பித்து சென்ற வாலிபர்கள்... சிசிடிவி வீடியோவால் சிக்கினர்!!

மேலும் இவர்கள் திருடிய நீல நிற சுபாரு காரை நகரம் முழுவதும் ஓட்டியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தனது வீட்டிற்கு அருகே தனியாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது முதியவர் மீது இவ்வாறான தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளனர்.

முதியவரை தாக்கிவிட்டு காரில் தப்பித்து சென்ற வாலிபர்கள்... சிசிடிவி வீடியோவால் சிக்கினர்!!

இது தொடர்பான சிசிடிவி வீடியோ அமெரிக்காவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதியவரை தாக்கி தரையில் தள்ளிய அவர்கள், எங்கும் நகர முடியாத அளவிற்கு அவரது கைகளையும் கால்களையும் இறுக்க பிடித்து கொண்டு தாக்க ஆரம்பித்துள்ளனர்.

முதியவரை தாக்கிவிட்டு காரில் தப்பித்து சென்ற வாலிபர்கள்... சிசிடிவி வீடியோவால் சிக்கினர்!!

பிறகு முதியவரின் கையில் இருந்த ப்ரெஸ்லெட்டை கழற்றி எடுத்து கொண்ட அவர்கள் மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த நீல நிற சுபாரு காரில் அங்கிருந்து செல்வதை சிசிடிவி வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த நீல நிற காரை வைத்து தான் இந்த வாலிபர்களை போலீஸார் பிடித்துள்ளனர்.

இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த இளம் குற்றவாளிகள் வேறெதாவது குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளனரா என்பதை போலீஸார் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

முதியவரை தாக்கிவிட்டு காரில் தப்பித்து சென்ற வாலிபர்கள்... சிசிடிவி வீடியோவால் சிக்கினர்!!

இந்த விசாரணையில், முதியவரிடம் இருந்து ப்ரெஸ்லெட் உள்ளிட்டவற்றை திருடியதற்கு பிறகு வேறொரு பெண்ணிடமும் பர்ஸை திருடியதாக அந்த வாலிபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்கள் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளன என்பதை போலீஸார் இன்னும் தெரிவிக்கவில்லை.

முதியவரை தாக்கிவிட்டு காரில் தப்பித்து சென்ற வாலிபர்கள்... சிசிடிவி வீடியோவால் சிக்கினர்!!

காரில் வேகமாக நகரத்தில் உலா வந்துள்ளனர் என தெரிவிக்கும் கலிஃபோரினியா, சான் லியண்ட்ரோ போலீஸார், கார் விபத்துகள் எதையாவது இந்த வாலிபர்கள் நிகழ்த்தியுள்ளனரா என்பதையும் தெரிவிக்கவில்லை.

நமது இந்தியாவிலும் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் நடைபெற தான் செய்கின்றன. ஆனால் அதனை காட்டிலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தான் அதிகளவில் அரங்கேறுகின்றன. நமது நாட்டிலாவது வறுமையால் தான் இவ்வாறான செயல்களில் இளம் வாலிபர்கள் ஈடுப்படுகின்றனர்.

முதியவரை தாக்கிவிட்டு காரில் தப்பித்து சென்ற வாலிபர்கள்... சிசிடிவி வீடியோவால் சிக்கினர்!!

ஆனால் அமெரிக்காவில் பொழுதுப்போக்கிற்காக இளம் தலையினர் இவ்வாறான குற்ற சம்பவங்களில் ஈடுப்படுவது வருத்தத்தை தரக்கூடிய விஷயமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் 17 வயது உடைய வாலிபர் ஒருவர் காரை சாலையில் ஓட்டி வருவதும் அமெரிக்காவில் சர்வ சாதாரணமானதாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
80-year old man knocked down, robbed by teens in US.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X