85 வயது முதியவர் கண்டுபிடித்த கார் எஞ்ஜின்: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்ளோ மைலேஜா...?

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 85 முதியவர் குறைந்த பெட்ரோலில் அதிக மைலேஜ் கொடுக்கும் கார் எஞ்ஜினைக் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

85 வயது முதியவர் கண்டுபிடித்த கார் எஞ்ஜின்: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்ளோ மைலேஜா? காஞ்சிபுரம் முதியவரின் வியக்கும் கண்டுபிடிப்பு!

பாரம்பரிய பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற காஞ்சிபுரம் பட்டுச் சந்தையின் தலைநகராக இருந்து வருகிறது. இந்தியாவின் ஏழு புனிதத் தளங்களில் ஒன்றையும் நம்முடைய காஞ்சிபுரத்தில் காணலாம். இதுமட்டுமின்றி, பல்லவர்கள் தலைநகரம், சோழ விஜயநகர முகலாயப் பேரரசர்கள் ஆண்ட பூமி என பல்வேறு சிறப்புகள் இந்த மண்ணுக்கு உண்டு. ஏன், நம் மாநிலத்தை ஆண்ட முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த மாவட்டமும் இது தான்.

85 வயது முதியவர் கண்டுபிடித்த கார் எஞ்ஜின்: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்ளோ மைலேஜா? காஞ்சிபுரம் முதியவரின் வியக்கும் கண்டுபிடிப்பு!

இத்தகையச் சிறப்புமிக்க மாவட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக 85 வயது முதியவர் குறைந்த பெட்ரோலில் அதிக மைலேஜ் கொடுக்கும் கார் எஞ்ஜினை வடிவமைத்துள்ளார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இந்த முதியவர், தன்னுடைய வயதால் முதிர்ந்து காணப்பட்டாலும் செயலின்மூலம் இளம் காளையென்பதை நிரூபித்துள்ளார்.

85 வயது முதியவர் கண்டுபிடித்த கார் எஞ்ஜின்: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்ளோ மைலேஜா? காஞ்சிபுரம் முதியவரின் வியக்கும் கண்டுபிடிப்பு!

நமது நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு அதிகரித்து வருகின்றதோ, அதே அளவிற்கு அதை இயக்குவததற்கான எரிபொருளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு போட்டியாக அதன் விலையும் கடுமையான ஏற்றத்தையேச் சந்தித்து வருகிறது. அதன்படி, கடந்த வருடங்களில் பெட்ரோல், டீசலின் விலையானது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டது.

85 வயது முதியவர் கண்டுபிடித்த கார் எஞ்ஜின்: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்ளோ மைலேஜா? காஞ்சிபுரம் முதியவரின் வியக்கும் கண்டுபிடிப்பு!

இதனால், அதிகத் தொகைக் கொடுத்து வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதிகத் தொகைக் கொடுத்து நிரப்பப்படும் எரிபொருளுக்கான மைலேஜை நமது வாகனம் கொடுக்கிறதா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றே பலர் கூறுவார்கள்.

85 வயது முதியவர் கண்டுபிடித்த கார் எஞ்ஜின்: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்ளோ மைலேஜா? காஞ்சிபுரம் முதியவரின் வியக்கும் கண்டுபிடிப்பு!

இதுபோன்ற அவலநிலையை தீர்க்கும்விதமாக புதிய தொழில்நுட்பம் ஒன்றை தேவராஜன், உருவாக்கியுள்ளார். புல்லட் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், பணியின் அனுபவத்தைக் கொண்டு இந்த கண்டுபிடிப்பை தயாரித்துள்ளார். ஓய்வு காலத்தை ஓய்வெடுத்து கழிக்காமல், துடிப்புடன் செயல்பட்டு இந்த புதிய எஞ்ஜினை அவர் வடிவமைத்துள்ளார்.

85 வயது முதியவர் கண்டுபிடித்த கார் எஞ்ஜின்: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்ளோ மைலேஜா? காஞ்சிபுரம் முதியவரின் வியக்கும் கண்டுபிடிப்பு!

பணியில் கிடைத்த முன்னனுபவமும், கண்டுபிடிப்புகளின் மீது அவருக்கு இருந்த ஆர்வமும் தான் இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க காரணம் என தேவராஜன் கூறுகிறார். இவரின் கண்டுபிடிப்பானது எரிபொருளின் சிக்கனத்தைக் கணக்கில் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார். அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலில் 40 கிமீ தூரத்திற்கு பயணிக்கும் கார் எஞ்ஜினை அவர் வடிவமைத்து சாதனைப்படைத்துள்ளார்.

85 வயது முதியவர் கண்டுபிடித்த கார் எஞ்ஜின்: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்ளோ மைலேஜா? காஞ்சிபுரம் முதியவரின் வியக்கும் கண்டுபிடிப்பு!

ஓட்டுநர் உட்பட பயணிகள் நான்கு பேர் அமர்ந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த கார், நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக்கு மாற்று விசையை பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஓர் இடத்தில் குவியும் பயணிகளின் எடையை நான்கு பக்கங்களுக்கும் பரிமாறும் விதமாக இந்த காரின் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், காரின் உந்துவிசை சீராக பரிமாறப்பட்டு காரின் சக்தி விரையமாவது தவிர்க்கப்படுகிறது. இதனால், சிறந்த வேகம் மற்றும் மைலேஜ் ஆகியவற்றை இந்த தொழில்நுட்பம் கணிசமாக அதிகரித்துக் கொடுக்கின்றது.

இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ள தொழில்நுட்பமானது, புல்லட் ரயில் திட்டத்துக்கு டஃப் கொடுக்கும் என தேவராஜன் கூறுகின்றார். பல கோடி ரூபாயில் வெளிநாட்டில் இருந்து வாங்கக்கூடிய புல்லட் ரயிலுக்கு பதிலாக இந்த தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே தயாரித்து பெருமளவிலான பொருளாதாரத்தை சேமிக்கலாம் என அவர் கருத்து தெரிவித்தார்.

85 வயது முதியவர் கண்டுபிடித்த கார் எஞ்ஜின்: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்ளோ மைலேஜா? காஞ்சிபுரம் முதியவரின் வியக்கும் கண்டுபிடிப்பு!

தேவராஜனின் இந்த புதிய தொழில்நுட்பம் மேற்கு வங்கம் மாநிலம் துர்காபூரில் உள்ள தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் கவுரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருளைச் சிக்கனப்படுத்தும் இந்த கண்டுபிடிப்பை மத்திய, மாநில அரசுகள் அங்கீகரித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே தேவராஜின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Source: Puthiyathalaimurai

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
85 Year Old Man Invention For Petrol Car. Read In Tamil.
Story first published: Monday, March 4, 2019, 18:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X