ஒரே ட்விட் தான்... உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் 3வது இடத்திற்கு சரிந்த எலான் மஸ்க்!! அப்படி என்ன கூறினார்?

வர்த்தக சூழலுக்கு ஏற்ப பங்கு சந்தையின் மதிப்பு அவ்வப்போது ஏறிக்கொண்டும் இறங்கி கொண்டும் இருக்கும், இது இயல்புபானது. இதுவே உலக பணக்காரர்களின் பெயர்கள் அவ்வப்போது மாறி கொண்டிருக்க காரணம் என்றும் சொல்லலாம்.

ஒரே ட்விட் தான்... உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் 3வது இடத்திற்கு சரிந்த எலான் மஸ்க்!! அப்படி என்ன கூறினார்?

அதுபோல டெஸ்லா நிறுவனரும் உலக கோடிஸ்வரர்களுள் ஒருவருமான எலான் மஸ்க்கின் ஒரே ஒரு டிவிட்டர் பதிவு அவரை உலக பணக்காரர்கள் பட்டியலில் கீழிறங்க வைத்துள்ளது.

ஒரே ட்விட் தான்... உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் 3வது இடத்திற்கு சரிந்த எலான் மஸ்க்!! அப்படி என்ன கூறினார்?

எலான் மஸ்க்கின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுவரும் டெஸ்லா நிறுவனம் நடப்பு 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் 1.5 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 10 ஆயிரம் கோடி) மதிப்பிலான பிட்காயின்களை வாங்கி இருந்தது.

ஒரே ட்விட் தான்... உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் 3வது இடத்திற்கு சரிந்த எலான் மஸ்க்!! அப்படி என்ன கூறினார்?

அதனை தொடர்ந்து டெஸ்லா தயாரிப்புகளை வாங்க பிட்காயின்களை பயன்படுத்தலாம் எனவும் இந்த எலக்ட்ரிக் கார் நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியானது. உலகிலேயே வணிகத்திற்கு பிட்காயினை ஏற்று கொண்ட முதல் கார் நிறுவனமான டெஸ்லா பெயர் எடுத்தது.

ஒரே ட்விட் தான்... உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் 3வது இடத்திற்கு சரிந்த எலான் மஸ்க்!! அப்படி என்ன கூறினார்?

அதேநேரம் டெஸ்லா போன்ற மதிப்புமிக்க தனியார் நிறுவனம் பண பரிவர்த்தனைக்கு ஏற்று கொண்டதின் காரணமாக அப்போதில் இருந்து பிட்காயின்களின் மதிப்பு தடாலடியாக உயர துவங்கியது. கடந்த வாரம் வரையில் ஒரு பிட் காயினின் மதிப்பு சுமார் ரூ.41 லட்சத்திற்கு சமமாக இருந்தது.

ஒரே ட்விட் தான்... உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் 3வது இடத்திற்கு சரிந்த எலான் மஸ்க்!! அப்படி என்ன கூறினார்?

ஆனால் சமீபத்தில் யாரும் எதிர்பாராத விஷயமாக, பிட்காயின்கள் தயாரிப்பு முறை சுற்றுச்சூழலை பாதிப்பதாகவும், அதனையொட்டி டெஸ்லா தயாரிப்புகளை பிட்காயின்களை பயன்படுத்தி வாங்க முடியாது எனவும் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்விட் செய்திருந்தார்.

ஒரே ட்விட் தான்... உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் 3வது இடத்திற்கு சரிந்த எலான் மஸ்க்!! அப்படி என்ன கூறினார்?

அவர் இவ்வாறு தெரிவித்த சில மணிநேரங்களிலேயே பிட்காயின்களின் மதிப்பு அதிரடியாக 30 சதவீதம் வரை சரிந்தது. இது எலான் மஸ்க்கிற்கு பெருத்த அடியாக மாறி டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒரே ட்விட் தான்... உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் 3வது இடத்திற்கு சரிந்த எலான் மஸ்க்!! அப்படி என்ன கூறினார்?

டெஸ்லா நிறுவன பங்குகள் சரிய, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் சரிந்தது. இதன் எதிரொலியாக உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த எலான் மஸ்க் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஒரே ட்விட் தான்... உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் 3வது இடத்திற்கு சரிந்த எலான் மஸ்க்!! அப்படி என்ன கூறினார்?

எலான் மஸ்க்கை முந்திக்கொண்டு பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பெர்னர்ட் அர்னால்ட் & குடும்பம் உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளனர். முதலிடத்தில் வழக்கம்போல் அமேசான் நிறுவனம் ஜெஃப் பெஸோஸ் தொடர்கிறார்,

ஒரே ட்விட் தான்... உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் 3வது இடத்திற்கு சரிந்த எலான் மஸ்க்!! அப்படி என்ன கூறினார்?

பிட்காயினை போன்று டோஜ் காயினையும் டெஸ்லா நிறுவனம் விரைவில் அதன் வர்த்தகத்தில் பயன்படுத்தவுள்ளதாக சமீபத்தில் நமது செய்திதளத்தில் கூட செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தோம். ஆனால் தற்போது பிட்காயின் பயன்பாட்டையே டெஸ்லா ஓரங்கட்டி இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
A Tweet from Elon Musk has pushed him Third Richest Man in world.
Story first published: Saturday, May 22, 2021, 8:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X