இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல... ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா?

இருசக்கர வாகனத்தில் ராங்சைடில் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க கோர்ட் மறுத்துவிட்டது. ராங் சைடில் சென்று விபத்தில் சிக்கினால் நஷ்ட ஈடு கிடையாது என விளக்கமளித்துள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணுங்கள்.

இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல . . . ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா ?

சாலையில் வாகனத்தில் செல்லும் போது ஒரு விபத்து ஏற்பட்டால் அந்த விபத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய அந்த வாகனத்தை இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும் என் சட்டம் சொல்கிறது. ஒரு வாகனத்திற்கு மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்பது சட்டம். அதன் மூலம் ஒரு வாகனம் விபத்தில் சிக்கினால் அதன் மூலம் பாதிக்கப்படுபவர்களுக்கு அந்த இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும்

இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல . . . ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா ?

இந்நிலையில் சமீபத்தில் டில்லியில் நடந்த சாலை விபத்தில் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈட்டிற்கான பணத்தைப் பெற கோர்ட் தடை விதித்துள்ளது. குறிப்பிட்ட நபர் சாலை விதிமுறைகளை மீறியிருந்ததால் அந்த பணம் அவருக்கு வழங்கப்படக்கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல . . . ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா ?

டில்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விபத்து ஒன்று நடந்தது. அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் காரும் இருசக்கர வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் வாகனத்தை ஓட்டி வந்தவருக்குப் படுகாயம் ஏற்பட்டது. பின்னால் அமர்ந்து வந்தவர் தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்தார்.

இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல . . . ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா ?

இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் டில்லி ரோகிணி கோட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் காரில் வந்தவர் வேகமாக வந்ததாகவும் அதனாலேயே விபத்து நடந்ததாகவும், இதனால் காரில் வந்தவர் பாதிக்கப்பட்ட தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல . . . ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா ?

கோர்ட் இது குறித்து விசாரிக்க டிராபிக் போலீசாக்கு உத்தரவிட்ட நிலையில் டிராபிக் போலீசார் இது குறித்து விசாரித்தபோது தான் உண்மை வெளிவந்தது. விபத்து நடந்த இடத்தில் பைக்கில் வந்தவர்கள் தான் தவறான பாதையில் வந்துள்ளனர். காரில் வந்தவர் சரியான பாதையில் தான் வந்துள்ளார். மேலும் காரில் வந்தவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் தான் வந்துள்ளார்.

இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல . . . ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா ?

ஆனால் அவர் தவறான பாதையில் பைக் வரும் என எதிர்பார்க்கவில்லை. இதனால் விபத்து நடந்துள்ளது. எனத் தெரியவந்தது.இதையடுத்து கோர்ட் விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநர் மீதோ உரிமையாளர் மீதோ எந்த தவறும் இல்லை. பைக் தவறான பாதையில் சென்றே விபத்திற்குக் காரணம் அதனால் கார் ஓட்டுநர் அல்லது உரிமையாளரிடம் நஷ்டஈடு கேட்பதற்கு உரிமையில்லை. என உத்தரவிட்டது.

இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல . . . ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா ?

இந்தியாவைப் பொருத்தவரை சாலைகளில் இடதுபுறமாக மட்டுமே வாகனங்கள் பயணிக்க வேண்டும். அப்பொழுது தான் விபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும். சாலையில் வலதுபுறம் பயணிப்பது சட்டப்படி குற்றம். இடதுபுறம் செல்லும் ஒருவருக்கு திடீரென வாகனம் எதிரே வருவது தெரியாது. இரவு நேரங்களில் இப்படியாக வாகனங்கள் வந்தால் அது சரியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்குத் தெரிவதே கடினம். இரவு நேரத்தில் ஹெட்லைட் போட்டு வந்தாலும் அது நேரடியாகச் சரியாக வரும் வாகன ஓட்டிக்குக் கண்ணில் கூச்சத்தை ஏற்படுத்தும். அதனால் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது.

இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல . . . ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா ?

டில்லி கோர்ட்டில் இந்த தீர்ப்பு பலருக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. நேரத்தை மிச்சப்படுத்தத் தவறான பாதைகளில் பயணிக்க நினைப்பவர்கள் அங்கு விபத்தில் சிக்கினால் சட்டப்படி அவர்கள் இழுப்பிற்கு நஷ்ட ஈடு பெறும் தகுதியையும் இழப்பார்கள் எனச் சட்டம் சொல்கிறது. எப்பொழுதும் சாலைவிதிகளை மதித்து நடப்போம். விபத்துக்களைத் தவிர்ப்போம்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Accident victim on wrong side driving wont get any compensation court orders
Story first published: Wednesday, May 18, 2022, 12:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X