காரை விற்பனை செய்யும் சிவகார்த்திகேயன் பட வில்லன்... நீங்களே எளிதாக வாங்கலாம்... அவ்வளவு மலிவான விலை

சிவகார்த்திகேயன் பட வில்லனின் கார், செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரை விற்பனை செய்யும் சிவகார்த்திகேயன் பட வில்லன்... நீங்களே எளிதாக வாங்கலாம்... அவ்வளவு மலிவான விலை

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மிட்சுபிஷி பஜிரோ எஸ்எஃப்எக்ஸ் (Mitsubishi Pajero SFX). குறிப்பாக ஆஃப் ரோடு ஆர்வலர்கள் மத்தியில், மிகவும் புகழ்பெற்ற மாடலாக மிட்சுபிஷி பஜிரோ எஸ்எஃப்எக்ஸ் கார் திகழ்கிறது. எஸ்யூவி ரக காரான மிட்சுபிஷி பஜிரோ எஸ்எஃப்எக்ஸ் விற்பனையில் இருந்து தற்போது விலக்கி கொள்ளப்பட்டு விட்டது.

காரை விற்பனை செய்யும் சிவகார்த்திகேயன் பட வில்லன்... நீங்களே எளிதாக வாங்கலாம்... அவ்வளவு மலிவான விலை

எனினும் கார் ஆர்வலர்களின் மனதில் இந்த காருக்கு என தனி இடம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஷாருக்கான் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் பலரிடம் இந்த கார் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிட்சுபிஷி பஜிரோ எஸ்எஃப்எக்ஸ் காரை சொந்தமாக வைத்திருக்கும் பிரபல நபர்களில் நடிகர் அபய் தியோலும் (Abhay Deol) ஒருவர்.

காரை விற்பனை செய்யும் சிவகார்த்திகேயன் பட வில்லன்... நீங்களே எளிதாக வாங்கலாம்... அவ்வளவு மலிவான விலை

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தின் வில்லனாக அபய் தியோல்தான் நடித்து வருகிறார். இந்த சூழலில் அபய் தியோலின் மிட்சுபிஷி பஜிரோ எஸ்எஃப்எக்ஸ் கார் தற்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இது 2008 மாடல் கார் ஆகும். இந்த கார் 84,000 கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓடியுள்ளது.

காரை விற்பனை செய்யும் சிவகார்த்திகேயன் பட வில்லன்... நீங்களே எளிதாக வாங்கலாம்... அவ்வளவு மலிவான விலை

எனவே இது இன்னும் அதிக ஆயுட்காலத்தை கொண்டுள்ளது. இன்றைய தேதி வரை ஒரு ஓனரை மட்டுமே இந்த கார் சந்தித்துள்ளது. அது அபய் தியோல்தான். புகைப்படங்களை வைத்து பார்க்கையில் இந்த கார் நல்ல கண்டிஷனில் இருப்பது தெரிய வருகிறது. இன்டீரியர்களும் கூட நன்றாகதான் உள்ளன. இதில் முழுமையாக செயல்படக்கூடிய 4×4 சிஸ்டமும் உள்ளது.

காரை விற்பனை செய்யும் சிவகார்த்திகேயன் பட வில்லன்... நீங்களே எளிதாக வாங்கலாம்... அவ்வளவு மலிவான விலை

இந்த காரில் 2.8 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிற பெயிண்ட் ஸ்கீமை இந்த கார் பெற்றுள்ளது.

MOST READ: வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை... போலீசுக்கு செக் வைத்த அதிரடி உத்தரவு... என்னவென்று தெரியுமா?

காரை விற்பனை செய்யும் சிவகார்த்திகேயன் பட வில்லன்... நீங்களே எளிதாக வாங்கலாம்... அவ்வளவு மலிவான விலை

இந்த காருக்கு வெறும் 4.99 லட்ச ரூபாய் மட்டுமே விலையாக கோரப்பட்டுள்ளது. 4.99 லட்ச ரூபாய்க்கு மிட்சுபிஷி பஜிரோ எஸ்எஃப்எக்ஸ் கார் கிடைப்பது அருமையான டீல்தான். இதுதவிர அபய் தியோல் வைத்திருந்த கார் என்பதாலும், உங்களுக்கு நல்ல மதிப்பாக இருக்கும். பொதுவாக திரைப்பட நடிகர்கள் போன்ற பிரபலங்கள் பயன்படுத்திய கார்கள் என்றாலே அதிக விலைக்குதான் விற்கப்படும்.

MOST READ: அடேங்கப்பா... ஆட்டோ ரன்னிங்கில் இருக்கும்போதே சக்கரத்தை மாற்றிய இளைஞர்கள்... வைரலாகும் வீடியோ

காரை விற்பனை செய்யும் சிவகார்த்திகேயன் பட வில்லன்... நீங்களே எளிதாக வாங்கலாம்... அவ்வளவு மலிவான விலை

ஆனால் அபய் தியோலின் மிட்சுபிஷி பஜிரோ எஸ்எஃப்எக்ஸ் அதற்கு மாறாக மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மிட்சுபிஷி பஜிரோ எஸ்எஃப்எக்ஸ் அல்லது ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற வேறு ஏதேனும் ஒரு எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என தேடி கொண்டிருப்பவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.

MOST READ: விபத்தில் சிக்கிய பைக் ரைடரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

காரை விற்பனை செய்யும் சிவகார்த்திகேயன் பட வில்லன்... நீங்களே எளிதாக வாங்கலாம்... அவ்வளவு மலிவான விலை

நீங்கள் இந்த மிட்சுபிஷி பஜிரோ எஸ்எஃப்எக்ஸ் காரை வாங்குவதில் ஆர்வமாக இருந்தால், இந்த காரை பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும், அதன் விற்பனையாளரை தொடர்பு கொள்ளவும் இங்கே கிளிக் செய்யுங்கள்.

Image Courtesy: Cartoq

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor Abhay Deol’s Mitsubishi Pajero SFX For Sale. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X