அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்! வாயை பிளந்த மற்ற நடிகர்கள்

உண்மையிலேயே வானில் பறப்பதற்காக பிரபல நடிகர் ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்! வாயை பிளந்த மற்ற நடிகர்கள்

சினிமாக்களில் ஹீரோவாக வலம் வரும் நடிகர்கள் பலர், ஒரு சில ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி கொள்கின்றனர். மிகவும் அபாயகரமான இத்தகைய ஸ்டண்ட் காட்சிகளில், அவர்களுக்கு பதிலாக டூப் போட்டு வேறு ஒரு ஸ்டண்ட் மேன் நடிக்க வைக்கப்படுகிறார். ஆனால் அனைத்து நடிகர்களும் இப்படித்தான் என கூறி விட முடியாது.

அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்! வாயை பிளந்த மற்ற நடிகர்கள்

ஒரு சில நடிகர்கள் மட்டும் விதிவிலக்காக, அபாயகரமான ஸ்டண்ட் காட்சிகளிலும் டூப் போடாமல் தாங்களே துணிந்து நடிக்கின்றனர். அப்படிப்பட்ட தைரியசாலிகளில் ஒருவர் அக்ஸய் குமார். அக்ஸய் குமார் பற்றிய அறிமுகம் யாருக்கும் தேவையில்லை. பாலிவுட் திரையுலகின் தைரியசாலி நடிகர்களில் அக்ஸக் குமாரும் ஒருவர்.

MOST READ: உச்சத்தில் கொரோனா வைரஸ்... ஊர் சுற்ற புது யுக்திகளை கையாளும் இளைஞர்கள்... இந்த நேரத்திலுமா இப்படி...?

அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்! வாயை பிளந்த மற்ற நடிகர்கள்

அக்ஸய் குமார் பெரும்பாலும் தனது ஸ்டண்ட்களை தானேதான் செய்து கொள்வார். ஆக்ஸன் திரைப்படங்கள் பலவற்றில், அக்ஸய் குமாரின் அனல் கக்கும் ஸ்டண்ட்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால் அவர் இனிதான் தனது கேரியரின் உச்சகட்ட ஸ்டண்ட் ஒன்றை செய்ய போகிறார். அதற்கான முதல் அடியை அக்ஸய் குமார் தற்போது எடுத்து வைத்துள்ளார்.

அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்! வாயை பிளந்த மற்ற நடிகர்கள்

அப்படி என்ன ஸ்டண்ட் என நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. ஜெட் ஷூட் (Jet Suit) மூலம் வானில் பறப்பதற்கான முயற்சிகளை அக்ஸய் குமார் எடுத்து வருகிறார். இதற்காக அவர் பயிற்சி பெறும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. கிராவிட்டி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 1,050 பிஎச்பி ஜெட் ஷூட்டில் அக்ஸய் பயிற்சி பெறுவதை அந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

MOST READ: கொரோனா வைரஸை தலை தெறிக்க ஓட விடும் கேரளா... இந்த மனிதர் செய்த காரியத்தை வியந்து பார்க்கும் மக்கள்

அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்! வாயை பிளந்த மற்ற நடிகர்கள்

கிராவிட்டி ஜெட் ஷூட் இன்னும் மக்களுக்கான விற்பனைக்கு வரவில்லை. எனினும் கிராவிட் நிறுவனத்தின் பயிற்சி பெற்ற நிபுணர்கள் குழு, இந்த ஜெட் ஷூட்டின் சக்தியை காட்டுவதற்காக, மிகவும் பாதுகாப்பான இடங்களில் அதனை பயன்படுத்தி வருகிறது. கடல் மற்றும் மற்ற நீர் நிலைகளின் மீது பறப்பதற்கும் கூட இந்த ஜெட் ஷூட் பயன்படுத்தப்படுகிறது.

அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்! வாயை பிளந்த மற்ற நடிகர்கள்

இந்த ஜெட் ஷூட் அணிந்து பறக்கும்போது, ரியல் லைஃப் அயர்ன் மேன் போன்ற உணர்வு ஏற்படலாம். ஆனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். கிராவிட் எனும் நிறுவனத்தால், இந்த ஜெட் ஷூட் தயாரிக்கப்பட்டுள்ளது. ரிச்சர்டு ப்ரௌனிங் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு, கிராவிட்டி நிறுவனத்தை தொடங்கினார்.

MOST READ: குழந்தையின் வீட்டிற்கு ராஜ மரியாதையுடன் வந்த போலீஸ் வாகனங்கள்... காரணம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்! வாயை பிளந்த மற்ற நடிகர்கள்

உலகம் முழுவதும் பலரின் கவனத்தை இந்த ஜெட் ஷூட் ஈர்த்துள்ளது. மண்ணெண்ணெய் மூலம் இயங்கும் ஜெட் இன்ஜின்கள், இந்த ஷூட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை நம் உடலில் கட்டிக்கொண்டு வானில் பறக்கலாம். இந்த இன்ஜின்கள் ஒவ்வொன்றும் தலா 22 கிலோ த்ரஸ்ட்டை (Thrust) வழங்கும். இதனை இயக்கும் பைலட்டால், திசை மற்றும் வேகத்தை மாற்றி, அயர்ன் மேன் போல் வானில் பறக்க முடியும்.

அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்! வாயை பிளந்த மற்ற நடிகர்கள்

அத்துடன் இதனை அணிந்து கொள்வதிலும் பெரிதாக எந்த சிரமமும் இருக்காது. இந்த ஜெட் ஷூட் அதிநவீன வசதிகளை பெற்றுள்ளது. இதில், பைலட்டின் ஹெல்மெட்டில் வழங்கப்பட்டுள்ள ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளேவும் ஒன்று. எரிபொருள் அளவு, உயரம், இன்ஜின் டெம்ப்ரேச்சர், இன்னும் எவ்வளவு நேரம் பறக்க முடியும்? உள்ளிட்ட முக்கியமான தகவல்களை இது வழங்கும்.

MOST READ: தல எப்பவுமே கெத்துதான்... குடிசையில் வாழும் ஏழை குடும்பத்தை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்த அஜீத்

அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்! வாயை பிளந்த மற்ற நடிகர்கள்

தற்போதைய நிலையில் இந்த ஜெட் ஷூட், மணிக்கு 51.53 கிலோ மீட்டர்கள் வேகம் வரை பறக்கும். இந்த ஜெட் ஷூட்டில் உள்ள அனைத்து இன்ஜின்களும் ஒருங்கிணைந்து, 1,050 பிஎச்பி பவரை வழங்க கூடியதாக உள்ளன. இது கிட்டத்தட்ட புகாட்டி வேரோன் (Bugatti Veyron) காருக்கு இணையானது. இந்த ஜெட் ஷூட்டில் அக்ஸய் பயிற்சி பெறும் வீடியோவை கிராவிட்டி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்! வாயை பிளந்த மற்ற நடிகர்கள்

இதில், கிராவிட்டி நிறுவனத்தின் டெஸ்ட்டிங் பாயிண்ட்டிற்கு அக்ஸய் குமார் காரில் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது கிராவிட்டி நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்டு ப்ரௌனிங், ஜெட் ஷூட் மூலம் பறந்து வந்து, அக்ஸய் குமாரை வரவேற்கிறார். இங்கிலாந்தில் உள்ள கிராவிட்டி ட்ரெயினிங் சைட்டில், அக்ஸய் குமாருக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்! வாயை பிளந்த மற்ற நடிகர்கள்

முதலில் அக்ஸய் குமாருக்கு பயிற்சியாளர் மூலம் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்பின் ஜெட் ஷூட்டை முயற்சி செய்து பார்க்க அக்ஸய் குமார் அனுமதிக்கப்பட்டார். ஜெட் ஷூட்டில் பறக்க அக்ஸய் குமார் பயிற்சி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அக்ஸய் குமார் பதற்றம் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டார்.

அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்! வாயை பிளந்த மற்ற நடிகர்கள்

எதிர்காலத்தில் அக்ஸய் குமார் இந்த ஜெட் ஷூட்டை அணிந்து வானில் பறப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வீடியோ வெளியாகும் என்ற நம்பிக்கையுடனும், ஆவலுடனும் அவரது ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். தற்போதைக்கு அவர் கிராவிட்டி ட்ரெயினிங் சைட்டில் பயிற்சி பெறும் வைரல் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

எதிர்காலத்தில் இதுபோன்ற ஜெட் ஷூட்கள் விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது விற்பனையில் உள்ள பல சூப்பர் கார்களை விட, அவற்றின் விலை மிகவும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor Akshay Kumar Learns To Fly A Jet Suit By Gravity Industries - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X