விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!

மறைந்த நடிகர் ஒருவரின் விலையுயர்ந்த அரிய வகை கார் ஒன்று விரைவில் ஏலத்திற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!

மிக பெரிய வாகன பிரியராக வலம் வந்தவர்களில் ஒருவரே நடிகர் பால் வாக்கர். இவர் தற்போது நம்முடன் இல்லை. ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையில் அமைந்தது இவரின் திடீர் மரணம். பால் வாக்கர் இடத்தில் எண்ணற்ற வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தகுந்தது. அவற்றில் ஒன்றே 1973 போர்ஷே 911 கேர்ரேரா ஆர்எஸ் 2.7. கார் மாடல்.

விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!

இது ஓர் அரிய வகை சூப்பர் காராகும். இந்த காரே விரைவில் ஏலத்திற்கு வர உள்ளது. இதனை தனியார் ஏல நிறுவனமான மெக்யூம்ஸ் மான்டெரி எனும் அமைப்பே விரைவில் ஏலத்திற்கு விட இருக்கின்றது. வரும் 18 ஆகஸ்டு தொடங்கு 20 ஆகஸ்டு வரையில் காருக்கான ஏலம் நடைபெறும் நிறுவனம் அறிவித்துள்ளது. காரை ஏலத்திற்குக் கொண்டு வருவதற்கான அனைத்து பணிகளையும் நிறுவனம் தயார்படுத்தத் தொடங்கிவிட்டது. ஆகையால் விரைவில் ஏல தளம் மிக பிசியானதாக மாற உள்ளது.

விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!

இது பால் வாக்கர் பயன்படுத்திய கார் மாட்டுமல்ல அது ஓர் அரிய வகை வாகனமும் என்பதால் பலர் 1973 போர்ஷே 911 கேர்ரேரா ஆர்எஸ் 2.7. காரை அதிக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. போர்ஷே நிறுவனம் இந்த காரின் உற்பத்தியை 1973 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!

இதில், அந்நிறுவனம் 2.7 லிட்டர் ஃபிளாட் 6 எஞ்ஜினையே பயன்படுத்தியுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 210 எச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. 1973 போர்ஷே 911 கேர்ரேரா ஆர்எஸ் 2.7. கார் அதிகபட்சமாக மணிக்கு 239 கிமீ வேகத்தில் பயணிக்கும். மேலும், வெறும் 6.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!

போர்ஷே நிறுவனம் ஒட்டுமொத்தமாகவே இக்காரை 1580 யூனிட்டுகளை மட்டுமே உற்பத்தி செய்தது. இவற்றில் ஒன்றையே பால் வாக்கர் பயன்படுத்தி வந்தார். இக்காரை குறைவான எண்ணிக்கையில் தயாரித்ததனாலயே அரிய வகை காராக பார்க்கப்படுகின்றது. இத்தகைய ஓர் வாகனம் வெகு விரைவில் ஏலத்திற்கு வர இருக்கின்றது.

விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!

போர்ஷே நிறுவனம் அதன் ஐகானிக் மாடலான லே மேன்ஸ் கான்குவரிங் 917 ரேஸ் காரை தழுவி உருவாக்கியது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரே முன் பக்கத்தில் ஸ்பாய்லரை பெற்ற முதல் வாகனமாகும். முன் பக்கத்தில் மட்டுமின்றி பின் பக்கத்திலும் ஸ்பாய்லரை போர்ஷே இக்காரில் வழங்கியிருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு தாங்கிய வாகனமாக 1973 போர்ஷே 911 கேர்ரேரா ஆர்எஸ் 2.7. இருக்கின்றது.

விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!

இதுமாதிரியான சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அது ஓர் அரிய வகை வாகனமாகக் காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி, பால் வாக்கரின் மிகவும் பிரியமான காராகவும் அது இருந்திருக்கின்றது. இதனை 2011 இல் நடைபெற்ற ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பால் வாக்கரே அவரது வாயால் கூறியிருக்கின்றார்.

விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!

அதேவேலையில் இதுபோல் இன்னும் பல அரிய வகை கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், அவற்றை பயன்படுத்த தற்போது பால் வாக்கர் இல்லை. இந்த நிலையிலேயே அவர் பயன்படுத்தி வந்த 1973 போர்ஷே 911 கேர்ரேரா ஆர்எஸ் 2.7. சூப்பர் கார் தற்போது ஏலத்திற்கு வந்திருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி காரின் மதிப்பு 10 லட்சம் அமெரிக்க டாலர்களாக நியமிக்கப்பட்டுள்ளன. இதைவிட அதிக விலைக்குகூட இக்கார் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!

ஒட்டுமொத்தமாக பால் வாக்கர் பயன்படுத்திய 1973 போர்ஷே 911 கேர்ரேரா ஆர்எஸ் 2.7. சூப்பர் கார் 93,774 கிமீ தூரம் வரை பயணித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தனை வருடங்களில் இவ்வளவு குறைவான கிமீ தூரமே அக்கார் ஓடியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. இக்காரை வாங்க செல்வந்தர்கள் கடும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor paul walker owned 1973 porsche rare super car go up for aution
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X