Just In
- 12 hrs ago
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!
- 12 hrs ago
மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் டிவிஎஸ் ரோனின் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலையே ரூ. 1.49 லட்சம்தான்!
- 13 hrs ago
ஹூண்டாய் அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வு அறிமுகம்! பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!
- 13 hrs ago
எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 ஆனா வளர்ச்சியில் செம அடி...
Don't Miss!
- Movies
குஷ்பு முதல் மோகன்லால் வரை... இளையராஜாவுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- News
"மாநிலங்களை ஆண்ட இசைஞானி" - இளையராஜாவுக்கு மிட் நைட்டில் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Finance
தவறான வங்கி கணக்கிற்கு 7 லட்சம்.. லாட்டரி என நாடகம்.. போராடி பெற்ற பெண்..!
- Technology
இனி வீடே தியேட்டர் தான்: 50% தள்ளுபடியுடன் Samsung, Realme, Oneplus, Sony ஸ்மார்ட்டிவிகள்!
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விலை உயர்ந்த காரை விற்று விட்டு யூஸ்டு காரை வாங்கிய பிருத்விராஜ்... பிரபலமான நடிகருக்கே இப்படி ஒரு பிரச்னையா?
நடிகர் பிருத்விராஜ் மிகவும் விலை உயர்ந்த காரை விற்பனை செய்து விட்டு, யூஸ்டு காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழ் மற்றும் மலையாளம் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருபவர் பிருத்விராஜ் (Prithviraj). நடிகர் மட்டுமல்லாது, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என இவருக்கு பல்வேறு முகங்கள் இருக்கின்றன. சினிமாவை போலவே, பிருத்விராஜ் கார்களையும் அதிகமாக நேசிக்க கூடியவராக அறியப்படுகிறார்.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110) காரின் பழைய தலைமுறை மாடல், ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue), மினி கூப்பர் ஜேசிடபிள்யூ (Mini Cooper JCW) மற்றும் போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) போன்ற கார்களை பிருத்விராஜ் வைத்துள்ளார். விலை உயர்ந்த கார்கள் மட்டுமல்லாது டாடா சஃபாரி (Tata Safari) போன்ற சாதாரணமான கார்களும் அவரிடம் உள்ளன.

இந்த சூழலில் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காரை பிருத்விராஜ் தற்போது வாங்கியுள்ளார். ஆனால் இது யூஸ்டு கார் ஆகும். தனது விலை உயர்ந்த லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) காரை விற்பனை செய்து விட்டு, அதற்கு பதிலாக லம்போர்கினி உருஸ் காரை பிருத்விராஜ் வாங்கியுள்ளார்.இந்தியாவின் பிரபல மனிதர்கள் பலர் விரும்பி வாங்கும் காராக லம்போர்கினி உருஸ் உள்ளது.

முகேஷ் அம்பானி, ரோகித் ஷர்மா, ஜூனியர் என்டிஆர், ரன்வீர் சிங், கார்த்திக் ஆர்யன் போன்றவர்களிடமும் லம்போர்கினி உருஸ் கார் உள்ளது. பிருத்விராஜ் விற்பனை செய்த லம்போர்கினி ஹூராகேன் காரானது, LP 580-2 வேரியண்ட் ஆகும். இதில், 580 என்பது 580 பிஎஸ் பவரை குறிக்கிறது. அதே சமயம் 2 என்பது, இன்ஜின் சக்தி பின் பகுதியில் உள்ள 2 சக்கரங்களுக்கு மட்டுமே அனுப்பப்படுவதை குறிக்கிறது.

தற்போது பிருத்விராஜ் வாங்கியுள்ள லம்போர்கினி உருஸ் கார், கருப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும், அதிகமாக விற்பனையாகும் லம்போர்கினி நிறுவனத்தின் கார்களில் உருஸ் முதன்மையாக இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இது ஸ்போர்ட்ஸ் கார்களின் ஸ்டைலில் வரும் எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

எஸ்யூவி பாடி ஸ்டைல் என்பதால், இந்தியாவில் உள்ள மோசமான சாலைகளையும், வேக தடைகளையும் லம்போர்கினி உருஸ் எளிதாக எதிர்கொள்ளும். அத்துடன் காரின் உள்ளே இட வசதியும் சிறப்பாக உள்ளது. ஆனால் எஸ்யூவி ரக காராக இருப்பதால், லம்போர்கினி உருஸ் காரின் செயல்திறனில் எந்தவிதமான சமரசமும் செய்யப்படவில்லை.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை லம்போர்கினி உருஸ் கார் வெறும் 3.6 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 12.8 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை லம்போர்கினி உருஸ் கார் பெற்றுள்ளது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிலோ மீட்டர்கள் ஆகும்.

பொதுவாக காரின் எடை அதிகமாக இருந்தால், செயல்திறன் சிறப்பாக இருக்காது. ஆனால் லம்போர்கினி உருஸ் அதிக எடை கொண்ட காராக இருந்தாலும் கூட, செயல்திறனில் அமர்க்களப்படுத்துகிறது. இந்த காரின் எடை 2.2 டன்கள் ஆகும். உருஸ் காரின் இந்த சிறப்பான செயல்திறனுக்கு இதில் பொருத்தப்பட்டுள்ள 4.0 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு, வி8 பெட்ரோல் இன்ஜினே காரணம் ஆகும்.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 650 பிஎஸ் பவரையும் மற்றும் 850 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன், 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்ஜின், இன்னும் பல்வேறு கார்களிலும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பென்ட்லீ பென்டைகா (Bentley Bentayega), ஆடி ஆர்எஸ்6 அவென்ட் (Audi RS6 Avant) மற்றும் ஆடி ஆர்எஸ்7 (Audi RS7) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது தேவைகளுக்கு ஏற்ப இந்த இன்ஜினை ட்யூனிங் செய்துள்ளன. எனவே ஒவ்வொரு காரிலும் இந்த இன்ஜினின் செயல்திறன் சற்று வேறு விதமாக இருக்கும்.

இந்திய சந்தையில் தற்போதை நிலையில் 3.15 கோடி ரூபாய் முதல் 3.43 கோடி ரூபாய் வரையிலான விலைகளில் லம்போர்கினி உருஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் பிருத்விராஜ் தற்போது சொந்தமாக்கியிருப்பது யூஸ்டு கார் என்பதால், அவர் என்ன விலையில் வாங்கினார்? என்பது தெரியவில்லை.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி லம்போர்கினி உருஸ் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற கார். பொதுவாக லம்போர்கினி நிறுவனத்தின் கார்களை இந்திய சாலைகளில் ஓட்டுவது சிரமம். ஆனால் உருஸ் கார், எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது என்பதால், இதனை சுலபமாக ஓட்டலாம். அத்துடன் இது 5 சீட்டர் கார் ஆகும். மறுபக்கம் லம்போர்கினி ஹூராகேன் காரை இந்திய சாலைகளில் ஓட்டுவது சற்று சிரமமான காரியம்.

சாலைகள் மோசமாக இருந்தால், லம்போர்கினி ஹூராகேன் காரை மெதுவாகதான் ஓட்ட முடியும். அத்துடன் இந்த காரில் 2 பேர் மட்டுமே அமர முடியும். இதுபோன்ற பிரச்னைகள் இருப்பதாலும், உருஸ் காரின் செயல்திறன் மற்றும் வசதிகளால் ஈர்க்கப்பட்டதாலும், லம்போர்கினி ஹூராகேன் காருக்கு பதிலாக லம்போர்கினி உருஸ் காரை பிருத்விராஜ் வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

பிருத்விராஜின் அம்மா மல்லிகா சுகுமாரன் ஒரு முறை அளித்த பேட்டி இங்கே குறிப்பிடத்தக்கது. மழை காரணமாக தங்களது வீட்டிற்கு அருகே சாலை சேதமடைந்த காரணத்தால், லம்போர்கினி ஹூராகேன் காரை சரியாக இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், எனவே சாலையை அரசு சீரமைத்து தர வேண்டும் எனவும் அவர் ஒரு முறை பேட்டியில் கூறியிருந்தார்.

இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதால் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரை பிருத்விராஜ் தேர்வு செய்திருக்கலாம். எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது என்பதும், நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்ததாக இருப்பதும்தான், இந்திய சந்தையில் லம்போர்கினி உருஸ் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம்.
-
என்னங்க சொல்றீங்க... ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!
-
தங்கம் அண்ணாவோட ஹெல்மெட் பத்திரமா இருக்கு! ஆனந்த கண்ணீரில் TTF ரசிகர்கள்! உண்மையில் என்ன நடந்துச்சு தெரியுமா?
-
நாளை மறுநாள் டிவிஎஸ் இந்த பைக்கைதான் அறிமுகம் செய்யபோகுது... இணையத்தில் கசிந்த டூ-வீலரின் படம்!